இந்திய அணுசக்தி திட்டத்தின் முன்னோடி டாக்டர் எம்ஆர் சீனிவாசன் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
“இந்திய அணுசக்தி திட்டத்தின் முன்னோடி டாக்டர் எம்ஆர் சீனிவாசன் மறைவால் ஆழ்ந்த வருத்தம் கொண்டுள்ளேன். முக்கியமான அணுசக்தி கட்டமைப்பை உருவாக்குவதில் அவரின் செயலூக்கப் பங்களிப்பு எரிசக்தித்துறையில் நமது தற்சார்புக்கு அடித்தளமாக உள்ளது. அணுசக்தி ஆணையத்தின் அவரது உத்வேகம் அளிக்கும் தலைமைத்துவத்தால் அவர் நினைவுகூரப்படுவார். அறிவியல் முன்னேற்றத்திற்காகவும், பல இளம் விஞ்ஞானிகளுக்கு வழிகாட்டியதற்காகவும் இந்தியா அவருக்கு எப்போதும் நன்றியுடன் இருக்கும். இந்த துயரமான தருணத்தில் எனது எண்ணங்கள், அவரது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் இருக்கின்றன. ஓம் சாந்தி.”
Deeply saddened by the passing of Dr. MR Srinivasan, a stalwart of India's nuclear energy program. His instrumental role in developing critical nuclear infrastructure has been foundational to our being self-reliant in the energy sector. He is remembered for his inspiring…
— Narendra Modi (@narendramodi) May 20, 2025


