பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து கருணைத் தொகையைப் பிரதமர் அறிவித்துள்ளார்

மகாராஷ்டிராவின் கோண்டியாவில்  பேருந்து விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து கருணைத் தொகையாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50,000-மும் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் அலுவலகத்தின் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"மகாராஷ்டிராவின் கோண்டியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பால் வேதனை அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உரிய உதவிகளைச் செய்து வருகிறது."

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணைத் தொகையாக பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50, 000 வழங்கப்படும்: பிரதமர் நரேந்திர மோடி ( @narendramodi )".

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Technical textiles critical to footwear sector

Media Coverage

Technical textiles critical to footwear sector
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 29, 2026
April 29, 2026

Leadership That Plays, Builds & Delivers: PM Modi’s Vision Igniting Youth, Women & Northeast India