மத்தியப் பிரதேச மாநிலத்தின் தார் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்திருப்பதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்தார்.
பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.50,000-மும் நிதி உதவி வழங்கப்படும் என்று திரு மோடி அறிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பகிர்ந்து கொண்டதாவது:
மத்தியப்பிரதேசத்தின் தார் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் நேரிட்ட உயரிழப்பு பற்றி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இந்தத் துயரச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்: பிரதமர்.”
Deeply pained to hear about the loss of lives in an accident in Dhar, Madhya Pradesh. I extend my heartfelt condolences to those who have lost their loved ones in this mishap. Prayers for the speedy recovery of the injured.
— PMO India (@PMOIndia) April 29, 2026
An ex-gratia of Rs. 2 lakh each from PMNRF would be…


