உத்தரப்பிரதேச மாநிலம் ஃபரித்பூரைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஷியாம் பிஹாரி லாலின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
“உத்தரப்பிரதேச மாநிலம் ஃபரித்பூரைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஷியாம் பிஹாரி லாலின் மறைவை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவர் பொது சேவையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதுடன், கடினமாக உழைத்த பாஜக தலைவராக இருந்தார். அவரது மறைவு, கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இந்தத் துயரமான நேரத்தில், அன்னாரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!"
उत्तर प्रदेश के फरीदपुर के विधायक डॉ. श्याम बिहारी लाल जी के निधन से अत्यंत दुख हुआ है। वे जनहित में समर्पित भाजपा के एक कर्मठ नेता थे, जिनके जाने से पार्टी को अपूरणीय क्षति हुई है। शोक की इस घड़ी में उनके परिजनों और समर्थकों के प्रति मेरी गहरी संवेदनाएं। ओम शांति! pic.twitter.com/TCv0ddOg3B
— Narendra Modi (@narendramodi) January 2, 2026


