PM announces ex-gratia from PMNRF

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (24.05.2026) கர்நாடக மாநிலம் கார்வார் மாவட்டத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவம் குறித்து ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்வதாகக் கூறியுள்ளார்.

உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ₹2 லட்சம் கருணைத்தொகை வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். மேலும், இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்குத் தலா ₹ 50,000 வழங்கப்படும் என்றும் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"கர்நாடக மாநிலம் கார்வார் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்துச் செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.

உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ₹2 லட்சம் கருணைத்தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ₹ 50,000 வழங்கப்படும்: பிரதமர் நரேந்திரமோடி"

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
'Smartphone PLI plan exceeds targets, value addition quadruples': Industry informs govt

Media Coverage

'Smartphone PLI plan exceeds targets, value addition quadruples': Industry informs govt
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 8, 2026
July 08, 2026

1,000 Years of Heritage, One Future of Partnership: PM Modi Strengthens India-Indonesia Bonds in Jakarta