பிரதமர் திரு நரேந்திர மோடி, திரு ஸ்வராஜ் பால் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் தொழில், தொண்டு மற்றும் பொது சேவை, இந்தியாவுடனான நெருங்கிய உறவுகளுக்கு அவர் அளித்த அசைக்க முடியாத ஆதரவுக்கும் திரு ஸ்வராஜ் பால் ஆற்றிய பங்களிப்புகள் எப்போதும் நினைவுகூரப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

திரு ஸ்வராஜ் பாலுடன் தனக்கு ஏற்பட்ட பல சந்திப்புகளை திரு மோடி அன்புடன் நினைவு கூர்ந்தார், மேலும் அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “திரு ஸ்வராஜ் பால் ஜியின் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். இங்கிலாந்தில் தொழில், தொண்டு மற்றும் பொது சேவைக்கான அவரது பங்களிப்புகளும், இந்தியாவுடனான நெருங்கிய உறவுகளுக்கு அவர் அளித்த அசைக்க முடியாத ஆதரவும் எப்போதும் நினைவுகூரப்படும். அவருடனான பல சந்திப்புகளின் மலரும் நினைவுகளை எண்ணிப்பார்க்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும் அவரது அபிமானிகளுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி.”

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
18% tariffs, boosts to exports, agriculture protected: How India benefits from trade deal with US? Explained

Media Coverage

18% tariffs, boosts to exports, agriculture protected: How India benefits from trade deal with US? Explained
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 8 பிப்ரவரி 2026
February 08, 2026

India Empowered: From Semiconductor Surge to Diaspora Pride Under PM Modi