பிரபல கல்வியாளரும் சமூக சேவகருமான இலாபன் பட் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மகளிருக்கு அதிகாரமளித்தல், சமூக சேவை மற்றும் இளைஞர்களிடையே கல்வியை மேம்படுத்துவதற்காக அவர் ஆற்றிய பங்களிப்பை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்
“இலாபன் பட்டின் மரணம் வருத்தமளிக்கிறது. மகளிருக்கு அதிகாரமளித்தல், சமூக சேவை மற்றும் இளைஞர்களிடையே கல்வியை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகளுக்காக அவர் நீண்ட காலமாக நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். அமைதி” என்று குறிப்பிட்டுள்ளார்.
ઇલાબેન ભટ્ટના અવસાનથી દુઃખ થયું. મહિલા સશક્તિકરણ, સમાજ સેવા અને યુવાનોમાં શિક્ષણને આગળ વધારવા માટેના પ્રયાસો માટે તેઓને દીર્ઘકાળ સુધી યાદ રાખવામાં આવશે. તેમના પરિવારજનો તથા પ્રશંસકો પ્રત્યે સંવેદના. ૐ શાંતિ…॥
— Narendra Modi (@narendramodi) November 2, 2022


