சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் உயரம் தாண்டுதல் டி47 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராம்பாலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் உயரம் தாண்டுதல் டி47 பிரிவில் சிறந்த வெள்ளிப் பதக்கம் வென்ற ராம்பாலுக்கு வாழ்த்துகள். அவர் தொடர்ந்து உயரிய இலக்கை அடைந்து நிறைய வெற்றிகளை அடையட்டும். அவரது சாதனையால் இந்தியா மகிழ்ச்சி அடைந்துள்ளது.
Congratulations to Rampal on your outstanding Silver Medal win in the Men's High Jump T47 event at the Asian Para Games. May he keep aiming high and achieve a lot of success. India is delighted with his feat. pic.twitter.com/zctAJzZ2sf
— Narendra Modi (@narendramodi) October 23, 2023


