சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற வைஷ்ணவி புனேயானிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற வைஷ்ணவி புனேயானிக்கு வாழ்த்துகள். இந்த மகத்தான சாதனை, அவரது அர்ப்பணிப்பு மற்றும் உறுதியை வெளிப்படுத்துகிறது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.”
Congratulations to Vaishnavi Puneyani for securing the Bronze medal in Badminton Women's Singles at the Asian Para Games. This outstanding accomplishment speaks volumes about her commitment and determination. Best wishes for her future endeavours. pic.twitter.com/r4Bj5GlbqC
— Narendra Modi (@narendramodi) October 25, 2023


