மகாகவி பாரதியாராகிய சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
“போற்றுதலுக்குரிய சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளன்று அன்னாரை நான் வணங்குகிறேன். அபாரமான துணிச்சல் மற்றும் தலைசிறந்த அறிவு கூர்மையின் எடுத்துக்காட்டாக ‘மகாகவி பாரதியார்' விளங்கினார். இந்தியாவின் முன்னேற்றத்தை குறித்தும், ஒவ்வொரு இந்தியரின் வளர்ச்சி குறித்தும் அவர் மாபெரும் கனவு கண்டார். பல்வேறு துறைகளில் அவரது கனவுகளை நிறைவேற்ற நாம் பாடுபட்டு வருகிறோம்.”
I bow to the great Subramania Bharathi on his Jayanti. ‘Mahakavi Bharathiar’ embodied remarkable courage and outstanding intellect. He had a grand vision for India’s development and the empowerment of every Indian. We are working to realise his ideas across different sectors.
— Narendra Modi (@narendramodi) December 11, 2022





