பகிர்ந்து
 
Comments

பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டை,   நாளை மறுநாள் (2020 நவம்பர் 19ம் தேதி) மதியம் 12 மணிக்கு, காணொலிக் காட்சி மூலம்  பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாடு, நவம்பர் 19ம் தேதியிலிருந்து 21ம் தேதி வரை நடக்கிறது.  இந்த உச்சி மாநாட்டை,  கர்நாடக புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப அமைப்பு, தகவல் தொழில்நுட்பத்துக்கான கர்நாடக அரசின் தொலைநோக்கு குழு, உயிரி தொழில்நுட்பம்  மற்றும் தொடக்க நிறுவனங்கள், இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா(STPI), எம்எம்  அறிவியல் தொழில்நுட்ப தகவல் தொடர்பு நிறுவனம்  ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து கர்நாடக அரசு  நடத்துகிறது.

பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் ஆஸ்திரேலியப் பிரதமர்  திரு ஸ்காட் மாரிஷன், சுவிஸ் துணை அதிபர் திரு கய் பர்மலின் உட்பட சர்வதேச தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.  மேலும், சிந்தனையாளர்கள், தொழில்துறை தலைவர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்வியாளர்கள் ஆகியோர் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

‘‘அடுத்தது இப்போது’’ என்ற கருப்பொருளில், இந்தாண்டு உச்சி மாநாடு நடக்கிறது. கொவிட் தொற்றுக்கு பிந்தைய உலகின் முக்கிய சவால்கள்,  முக்கிய தொழில்நுட்பங்களின் தாக்கம் குறித்தும், தகவல் தொழில்நுட்ப துறையின் புதுமையான கண்டுபிடிப்புகள், உயிரி தொழில்நுட்பம் பற்றியும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.

 

20 ஆண்டுகள் சேவை மற்றும் அர்ப்பணிப்பை வரையறுக்கும் 20 படங்கள்
Explore More
’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
How India is becoming self-reliant in health care

Media Coverage

How India is becoming self-reliant in health care
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
தேர்தலில் வெற்றி பெற்றதற்காக உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ்–க்கு பிரதமர் வாழ்த்து
October 26, 2021
பகிர்ந்து
 
Comments

தேர்தலில் வெற்றி பெற்றதற்காக உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ்–க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுட்டுரையில் பிரதமர் கூறியதாவது

” தேர்தலில் வெற்றி பெற்றதற்கு உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ்–க்கு இதயம் கனிந்த வாழ்த்துகள். உங்களது இரண்டாவது ஆட்சிக் காலத்திலும், இந்தியா – உஸ்பெகிஸ்தான் இடையேயான நீடித்த ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்பெறும் என நான் உறுதியாக நம்புகிறேன். உங்களுக்கும் உஸ்பெகிஸ்தான் மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்”