புது தில்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் யூ-17 கால்பந்து போட்டிக்கான கோப்பையை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.
மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. விஜய் கோயல், அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் திரு. பிரபுல் படேல் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பிரிக்ஸ் நாடுகளின் தூதர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


