PM Modi to dedicate India's longest road tunnel in Jammu and Kashmir
India's longest road tunnel connecting Jammu and Srinagar to reduce travel time by upto two hours

பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், 2017, ஏப்ரல் 2 அன்று, இந்தியாவின் மிகவும் நீளமான சுரங்கப்பாதை சாலையை -  9 கிலோ மீட்டர் நீளமுள்ள “சென்னானி – நஷ்ரி சுரங்கப்பாதை” -யை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் ஆகிய நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 44ல் அமைந்துள்ள இந்த சுரங்கப்பாதை, இரு நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை இரண்டு மணி நேரங்கள் குறைக்கும். இது, பனிசூழ்ந்த உயர்மலைகளை தவிர்த்துள்ளதுடன், 31 கிலோ மீட்டர் தூரத்தை குறைத்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் நாளொன்றுக்கு ரூ.27 லட்சம் அளவிற்கு எரிவாயு சேமிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சுரங்கப்பாதை, பெருமளவிலான வனஅழிப்பு மற்றும் மரங்களை வெட்டுதல் ஆகியவற்றை தவிர்த்துள்ளதுடன், ஜம்மு மற்றும் உதம்பூரிலிருந்து ராம்பான், பானிஹால் மற்றும் ஸ்ரீநகர் செல்வதற்கு பாதுகாப்பான, அனைத்து பருவத்திற்கும் ஏற்ற பாதையாக அமையும்.

உலகத் தர பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இந்த சுரங்கப்பாதை, ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் சுற்றுலா மற்றும் பொருளாதார செயல்பாடுகளுக்கு உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சுரங்கப்பாதையின் சிறப்பு அம்சங்கள்

  • இது 9.35 மீட்டர் அகலமும், செங்குத்தாக 5 மீட்டர் உயரமும் ஒற்றை குழாய், இரு-வழி சுரங்கப்பாதையாகும்.
  • அவசர நேரங்களில் தப்பிச் செல்ல வசதியாக 300 மீட்டர் இடைவெளிகளில் முக்கிய சுரங்கப்பாதையுடன் இணையப் பெற்ற “குறுக்கு பாதைகள்” கொண்ட இணையான சுரங்கப்பாதையை உடையது.
  • இது ஒருங்கிணைந்த போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு; கண்காணிப்பு; காற்றோட்டம் மற்றும் ஒளிபரப்பு அமைப்புகள்; தீயணைப்பு அமைப்பு போன்ற சிறப்பம்சங்களையும் மற்றும் ஒவ்வொரு 150 மீட்டர் தொலைவில் அவசர தொலைபேசி பெட்டிகளையும் கொண்டுள்ளது.
  • இத்திட்டம் ரூ.2500 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Focus on Farmers & Infrastructure in Modi 3.0 Government: Look at the track record of First 100 Days

Media Coverage

Focus on Farmers & Infrastructure in Modi 3.0 Government: Look at the track record of First 100 Days
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi inaugurates Phase-II of the Ahmedabad Metro Rail Project
September 16, 2024

The Prime Minister, Shri Narendra Modi inaugurated the Phase-II of the Ahmedabad Metro Rail Project today. He also interacted with students during the journey.

The Prime Minister posted on X;

“Inaugurated Phase-II of the Ahmedabad Metro Rail Project and on the way to today’s programme with energetic youngsters.”