பகிர்ந்து
 
Comments

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் நடைபெற்ற விவாதத்துக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பதிலளித்து உரையாற்றினார்.

குடியரசுத்தலைவரின் உரை இந்தியாவின் சங்கல்ப சக்தியை பறைசாற்றுவதாக அமைந்தது என்று அவர் கூறினார். அவரது உரை இந்திய மக்களிடையே நம்பிக்கையை ஊக்குவிப்பதாக இருந்தது என்று கூறிய திரு மோடி அவையின் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார். விவாதத்தின் போது, ஏராளமான பெண் எம்பிக்கள் பங்கேற்றதாக அவர் குறிப்பிட்டார். அவர்களது சிந்தனையின் மூலம் அவையைச் செழுமைப்படுத்தியதாக அவர் பாராட்டினார்.

உலகப் போர்களுக்குப் பின்னர், உலகம் இருந்த நிலையை வரலாற்றில் தேடிய போது, கோவிட்டுக்கு பிந்தைய உலகம் வேறு விதமாக இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். சில சமயங்களில், உலக நடைமுறைகளில் இருந்து தனித்திருப்பது முன்னேற்றத்துக்கு மாறாக அமைந்து விடும். அதனால்தான், இந்தியா மேலும் உலக நன்மைக்காக, தற்சார்பு இந்தியாவை கட்டமைக்க பாடுபட்டு வருகிறது. உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுங்கள் என்பது எந்த தனிப்பட்ட தலைவரின் சிந்தனை அல்ல. அது நாட்டின் ஒவ்வொரு மூலை, முடுக்கையும் மக்களால் ஒற்றுமைப்படுத்துவதாகும்.

கொரோனாவைக் கையாண்டதன் பெருமை 130 கோடி இந்தியர்களையும் சார்ந்ததாகும் என்று பிரதமர் கூறினார். ‘’ நமது மருத்துவர்கள், செவிலியர்கள், கோவிட் வீரர்கள், துப்புரவு பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தங்களின் மகத்தான உழைப்பால், உலகப் பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு வலு சேர்த்தனர்’’ என்று பிரதமர் கூறினார்.

கொரோனா காலத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் கோடி ரூபாயை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தி அரசு உதவியது என்று பிரதமர் தெரிவித்தார். ஜன் தன் –ஆதார்- கைப்பேசி இணைப்பு மக்களின் வாழ்வில் ஆக்கபூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தியது. இது ஏழையிலும், பரம ஏழைக்கும், நலிவடைந்த, ஒடுக்கபட்ட பிரிவினருக்கும் உதவியது. கொரோனா காலத்திலும் சீர்திருத்தங்கள் தொடர்ந்ததாகவும், அது நமது பொருளாதாரத்தில் புதிய உத்வேகத்தை ஏற்டுத்தியது என்றும் குறிப்பிட்ட அவர், தற்போது இரட்டை இலக்க வளர்ச்சி என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்.

நமது விவசாயிகளின் போராட்டம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், வேளாண் மசோதாக்கள் பற்றி குரல் எழுப்பும் விவசாயிகளை இந்த அவை, அரசு உள்ளிட்ட அனைவரும் மதிப்பதாக தெரிவித்தார். இதனால்தான், உயர்மட்டத்தில் உள்ள அமைச்சர்கள் அவர்களுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். விவசாயிகள் மீது பெருமதிப்பு உள்ளது. வேளாண்மை தொடர்பான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், எந்த மண்டியும் மூடப்படவில்லை. அதேபோல, எம்எஸ்பியும் உள்ளது. எம்எஸ்பி அடிப்படையில் கொள்முதலும் நடக்கிறது. மண்டிகளை வலுப்படுத்த பட்ஜெட்டில் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த உண்மைகளைப் புறக்கணிக்க முடியாது.

இந்த அவையை முடக்குபவர்கள் திட்டமிட்ட உத்தியின் படி நடந்து கொள்வதாக திரு. மோடி கூறினார். மக்கள் உண்மையை உணர்ந்துள்ளதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அவர்களது நடவடிக்கைகள் மூலம், மக்களின் நம்பிக்கையை ஒரு போதும் வெல்ல முடியாது. கோரிக்கை வைக்காமல், ஒரு சீர்திருத்தத்தை ஏன் அரசு கொண்டு வரவேண்டும் என்ற வாதத்தையை அவர் முன்வைத்தார். அனைத்தும், விருப்பத்தின் அடிப்படையிலானது என்று கூறிய அவர், கேட்பதற்காக நாம் காத்திருக்க முடியாது என்றார். காலத்தின் தேவைக்கு ஏற்ப, பல முற்போக்கான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மக்களை வலுக்கட்டாயப்படுத்துவதோ, கெஞ்சுவதோ ஜனநாயகமாக இராது. நாட்டின் தேவைக்கு ஏற்ப மக்கள் நலனுக்காக, நாங்கள் பொறுப்பேற்றுக் கொண்டு உழைத்து வருகிறோம். நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் பாடுபடுகிறோம். எண்ணம் சரியாக இருக்கும் போது, அதன் பயன்களும் சரியாக இருக்கும் என்று பிரதமர் கூறினார்.

வேளாண்மை என்பது சமூகம், கலாச்சாரம், நமது விழாக்களின் ஒரு பகுதியாகும். இவை அனைத்தும் விதை விதைத்தல், அறுவடை ஆகியவற்றுடன் தொடர்புடையவை. நமது மக்கள் தொகையில் 80 சதவீதத்துக்கும் அதிகமான பேரைப் புறக்கணிக்க முடியாது. சிறு விவசாயிகளைப் புறக்கணிக்க முடியாது. சிறிய அளவில் நிலங்களை வைத்திருக்கும் விவசாயிகள் தங்கள் நிலத்திலிருந்து போதுமான வருமானம் பெற முடியாத நிலை கவலைக்குரியதாகும். விவசாயத்தில் போடும் முதலீடு பாதிப்புக்குள்ளாகிறது. சிறு விவசாயிகளுக்கான நடவடிக்கைகள் மிகவும் அவசியம். எனவே, நமது விவசாயிகளை தற்சார்புடையவர்களாக மாற்ற வேண்டிய அவசியம் நமக்குள்ளது.

அவர் தனது பொருளை யாருக்கு வேண்டுமானாலும் விற்பதற்கும், எந்தப் பயிரையும் விளைவிப்பதற்கும் அவருக்கு சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும். விவசாயத்தில் செய்யப்படும் முதலீடு வேலை வாய்ப்புக்கு வழி வகுக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.

 

அவர்களுக்கு சமமான சூழல், நவீன தொழில் நுட்பம், நம்பிக்கையை விதைத்தல் ஆகியவற்றை நம்மால் உருவாக்க முடிந்தால், ஆக்கபூர்வமான சிந்தனை வேண்டும், பழைய வழிகள், அளவுகோல்கள் எடுபடாது என்று பிரதமர் கூறினார்.

பொதுத்துறை அவசியம் தான் என்று கூறிய திரு மோடி, அதேசமயம், தனியார் துறையின் பங்கேற்பும் மிகவும் அவசியம் என்றார். தொலைத் தொடர்பு, மருந்து என எந்த துறையை எடுத்துக் கொண்டாலும், தனியார் துறையின் பங்களிப்பை நம்மால் காண முடியும். இந்தியா மனித நேயத்துடன் தொண்டாற்ற முடிந்துள்ளது என்றால், அது தனியார் துறையின் பங்களிப்பால் தான். ‘’தனியார் துறைக்கு எதிராக முறையான சொற்களைப் பயன்படுத்தியதால், கடந்த காலத்தில் சிலருக்கு வாக்குகளை வேண்டுமானால் பெற்றுத் தந்திருக்கலாம். ஆனால், அந்தக் காலம் மலையேறி விட்டது. தனியார் துறையை குறைகூறும் கலாச்சாரம் இனி மேல் எடுபடாது. நமது இளைஞர்களை இதைப்போல அவமதிக்க முடியாது’’ என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

விவசாயிகள் பேரணியில் வன்முறை ஏற்பட்டதை பிரதமர் விமர்சித்தார். '' விவசாயிகள் இயக்கம் புனிதமானதாக இருக்க வேண்டும் என நான் கருதுகிறேன். ஆனால், ஒரு பிரிவினர், புனிதமான இயக்கத்தைக் கையில் எடுத்த போது, கடும் குற்றங்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை காட்டியது எந்த நோக்கத்தை நிறைவேற்றும்? சோதனைச் சாவடிகள் இயங்க அனுமதிக்கப்படவில்லை. தொலைத் தொடர்பு கோபுரங்கள் தகர்க்கப்பட்டன. இவை எல்லாம் புனிதமான இயக்கமா? ‘’ என்று பிரதமர் கேள்வி எழுப்பினார். செயல் புரிபவர்களுக்கும், வன்முறையாளர்களுக்கும் வேறுபாடு உள்ளதை நாம் உணரவேண்டும். சரியான விஷயங்களை மட்டும் சிலர் பேசுவார்கள். ஆனால், அதே பிரிவினர், சரியான செயல்களைச் செய்ய வேண்டிய நிலை வரும்போது, வார்த்தைகளை செயலில் காட்ட தவறி விடுவார்கள்.

தேர்தல் சீர்திருத்தங்களைப் பற்றி பேசுபவர்கள், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை எதிர்ப்பார்கள். பாலின நீதி பற்றி அவர்கள் பேசுவார்கள். ஆனால், முத்தலாக்கை எதிர்ப்பார்கள். இத்தகைய பிரிவினர் நாட்டை தவறான வழியில் இட்டுச் செல்கின்றனர் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க உள்கட்டமைப்பை வலுப்படுத்த அரசு பாடுபட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். சமச்சீரான வளர்ச்சியை நோக்கி நாட்டை எடுத்துச் செல்வதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. கிழக்கு இந்தியாவுக்கான இயக்க வழியில் அரசு உழைத்து வருவதாக பிரதமர் கூறினார். பெட்ரோலியத் திட்டங்கள், சாலைகள், விமான நிலையங்கள், நீர்வழிகள், சிஎன்ஜி, எல்பிஜி இணைப்பு, இணைய தொடர்பு திட்டங்களை அப்பிராந்தியத்தில் கொண்டுவரவுள்ளதாகவும் அவர் கூறினார்.

எல்லைக் கட்டமைப்பை, வரலாற்று புறக்கணிப்பு செய்வதை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதை பிரதமர் சுட்டிக்காட்டினார். நமது எல்லைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை பாதுகாப்பு படைகள் நிறைவேற்றி வருகின்றன. வீரர்களின் துணிச்சல், வலிமை, தியாகம் ஆகியற்றைப் பிரதமர் பாராட்டினார்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இந்தியாவின் ஒலிம்பிக் வீரர்களை ஊக்குவிக்கவும்!  #Cheers4India
Modi Govt's #7YearsOfSeva
Explore More
’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
PM Modi responds to passenger from Bihar boarding flight for first time with his father from Darbhanga airport

Media Coverage

PM Modi responds to passenger from Bihar boarding flight for first time with his father from Darbhanga airport
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 24, 2021
July 24, 2021
பகிர்ந்து
 
Comments

PM Modi addressed the nation on Ashadha Purnima-Dhamma Chakra Day

Nation’s progress is steadfast under the leadership of Modi Govt.