PM Narendra Modi lays foundation stones for several development projects in Mumbai
PM Modi lays foundation of the Shiv Smarak, a towering statue in the Arabian Sea in the memory of Maratha king Chhatrapati Shivaji
Even in the midst of struggle, Shivaji Maharaj remained a torchbearer of good governance: PM
Development is the solution to all problems, it is the way ahead: PM
The strength of 125 crore Indians will bring about change in this nation: PM Modi
மும்பையில் ஏராளமான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மெட்ரோ லைன்கள், மும்பை டிரான்ஸ்- துறைமுக இணைப்பு, மும்பை நகர்ப்புற போக்குவரத்துத் திட்டம் பகுதி -III, இரண்டு பறக்கும் சாலைகள் உள்ளிட்ட திட்டங்கள் இவற்றில் அடங்கும்.

முன்னதாக மும்பை கடற்கரையோரம் அரபி கடலில், சத்ரபதி சிவாஜி மகாராஜா நினைவிடத்துக்கு பிரதமர் ஜலபூஜை நடத்தினார். 
மும்பை பந்த்ரா குர்லா வளாகத்தில் அதையொட்டி கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசிய பிரதமர், போராட்டத்துக்கு இடையிலும், சிவாஜி மகாராஜா நல்ல நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்பவராக இருந்துள்ளார் என்று கூறினார். சிவாஜி மகாராஜா பன்முகத் திறமைகள் கொண்டவராக இருந்தார் என்றும், அவருடைய தன்னாளுமையின் பல்வேறு அம்சங்கள் நம்மை ஊக்குவிப்பவையாக உள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார். அவருடைய தைரியம் தெரிந்த விஷயம். ஆனால், தண்ணீர் மற்றும் நிதி போன்றவற்றில் சிவாஜி மகாராஜாவின் கொள்கைகள் போன்ற பல அம்சங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
சிவாஜி நினைவிடத்துக்கு ஜல பூஜை செய்வது மிகவும் விசேஷமானது என்று கூறிய அவர், இதைச் செய்யும் வாய்ப்பு தமக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார்.

வளர்ச்சி காண்பதுதான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு என்றும், அது மட்டுமே வழி என்றும் பிரதமர் உறுதிபட தெரிவித்தார். 125 கோடி இந்தியர்கள் இந்த நாட்டில் மாற்றத்தை உருவாக்குவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாம் பதவி ஏற்ற நாளில் இருந்தே ஊழலுக்கு எதிரான நமது போராட்டம் நடந்து வருகிறது என்று கூறிய பிரதமர், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு நவம்பர் 8 ஆம் தேதி எடுக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

தவறாக வழிநடத்தவும் மக்களுக்கு இன்னல் ஏற்படுத்தவும் முயற்சிகள் நடந்தன என்றாலும், ஊழல் மற்றும் கருப்புப் பணத்துக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் ஆதரவு அளித்துள்ளனர் என்று பிரதமர் கூறினார். இந்திய மக்கள் ஊழலையும், கருப்புப் பணத்தையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Since 2019, a total of 1,106 left wing extremists have been 'neutralised': MHA

Media Coverage

Since 2019, a total of 1,106 left wing extremists have been 'neutralised': MHA
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 13, 2025
December 13, 2025

PM Modi Citizens Celebrate India Rising: PM Modi's Leadership in Attracting Investments and Ensuring Security