குஜராத் முன்னாள் முதல்வர் திரு கேசுபாய் பட்டேலின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள தொடர் செய்திகளில், "நமது அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு கேசுபாய் பட்டேல் மறைந்துவிட்டார்… நான் ஆழ்ந்த வலியிலும் கவலையிலும் உள்ளேன். அவர், சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்கள் மீதும் அக்கறை கொண்டிருந்த மாபெரும் தலைவர். அவர், குஜராத் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் ஒவ்வொரு குஜராத்திக்கும் அதிகாரம் அளிக்கவும் தமது வாழ்நாளையே தியாகம் செய்தவர்.

ஜன சங் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்துடன் குஜராத் முழுவதும் திரு கேசுபாய் பயணம் மேற்கொண்டார். அவசரகால பிரகடனத்தையும் அவர் பொறுத்துக் கொண்டார். விவசாயிகளின் நலன் குறித்த விஷயங்கள் அவருக்கு மிக நெருக்கமாக இருந்தன. சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர் அல்லது முதலமைச்சர் என எந்த பதவியில் இருந்தாலும், விவசாயிகள் சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்துவதில் உறுதியுடன் செயல்பட்டார்.

என்னைப் போன்ற ஏராளமான காரியகர்த்தாக்களுக்கு திரு கேசுபாய் வழிகாட்டியாக இருந்து எங்களை வழி நடத்தினார். அவரது அனுசரித்துச் செல்லும் குணத்தை எல்லோரும் விரும்பினர். அவரது இழப்பு ஈடு செய்ய இயலாதது. நாம் அனைவரும் இன்று துக்கம் அனுசரிக்கிறோம். அவரது குடும்பம் மற்றும் நண்பர்களை நான் நினைவு கூர்கிறேன். அவரது மகன் திரு பரத்திடம் பேசி அவருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டேன். ஓம் சாந்தி", என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India-EU trade pact to better tech access

Media Coverage

India-EU trade pact to better tech access
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Governor of Nagaland meets Prime Minister
March 24, 2026