இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாபில் தமது அதிகாரப்பூர்வ பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய பிரதமர் திரு நரேந்திர மோடி, நேபாளத்தில் நிலவும் சூழல் குறித்து விவாதிப்பதற்காக இன்று நடைபெற்ற பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். வன்முறையில் ஏராளமான இளைஞர்கள் உயிரிழந்தது குறித்து பிரதமர் ஆழ்ந்த கவலை தெரிவித்தார். அமைதி மற்றும் ஒற்றுமையின் மாண்புகளை நிலைநாட்டுமாறு நேபாள குடிமக்கள் அனைவரையும் அவர் கேட்டுக்கொண்டார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
“இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாபிலிருந்து நான் இன்று திரும்பியபின், பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்திற்கு தலைமை தாங்கினேன். நேபாளத்தில் நிலவும் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது. நேபாளத்தில் நிகழ்ந்த வன்முறை மனதை வருத்துகிறது. இளைஞர்கள் பலர் தங்களது உயிரை இழந்திருப்பது எனக்கு கவலை அளிக்கிறது. நேபாளத்தின் நிலைத்தன்மை, அமைதி மற்றும் செழுமை நிலவுவது நமக்கு மிகவும் முக்கியமானது. நேபாளத்தில் உள்ள எனது அனைத்து சகோதர, சகோதரிகளும் அமைதி காக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.”
On my return from Himachal Pradesh and Punjab today, a meeting of the Cabinet Committee on Security discussed the developments in Nepal. The violence in Nepal is heart-rending. I am anguished that many young people have lost their lives. The stability, peace and prosperity of…
— Narendra Modi (@narendramodi) September 9, 2025
आज हिमाचल प्रदेश और पंजाब के दौरे से लौटने के बाद Cabinet Committee on Security की बैठक में नेपाल के घटनाक्रम को लेकर विस्तार से चर्चा हुई। नेपाल में हुई हिंसा हृदयविदारक है। यह जानकर बहुत पीड़ा हुई कि इसमें अनेक युवाओं की जान गई है। नेपाल की स्थिरता, शांति और समृद्धि हमारे लिए…
— Narendra Modi (@narendramodi) September 9, 2025
आज दिनभरीको भ्रमणबाट फर्किएपछि सुरक्षा सम्बन्धी मन्त्रिपरिषद् समितिको बैठकमा नेपालको घटनाक्रमहरुको बारेमा विस्तृत छलफल भयो । नेपालमा भएको हिंसा हृदयविदारक छ । धेरै युवाहरुले आफ्नो ज्यान गुमाउनु परेकोमा मेरो मन अत्यन्तै विचलित छ । नेपालको स्थिरता, शान्ति र समृद्धि अत्यन्त…
— Narendra Modi (@narendramodi) September 9, 2025


