பிரதமரின் வீட்டு வசதி திட்டம் தற்போதைய ஆட்சியின் கீழ் வேகமாக முன்னேறி வருவதாகவும், உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஏழைகளுக்கு உதவியுள்ளதாகவும் பிரதமர் கூறினார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆறு லட்சம் பயனாளிகளுக்கு பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நிதியுதவியை காணொலி மூலம் வழங்கிய பிறகு அவர் இவ்வாறு கூறினார்.

நாட்டு மக்களின் தன்னம்பிக்கையுடன் தற்சார்பு இந்தியா இயக்கம் நேரடியாக இணைந்துள்ளதாகவும் சொந்த வீடு என்பது ஒருவரது தன்னம்பிக்கையை பன்மடங்கு அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். சொந்த வீடு என்பது வாழ்க்கையில் நம்பிக்கையை அளித்து, ஏழ்மையில் இருந்து வெளியில் வரும் உறுதியை வழங்கும் என்று அவர் கூறினார்.

முந்தைய ஆட்சிகளின் போது, தங்களது வீடுகளை கட்டுவதில் அரசு உதவும் என்பதில் ஏழைகளுக்கு நம்பிக்கை இருந்ததில்லை என்று பிரதமர் நினைவு கூர்ந்தார். முந்தைய திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகளின் தரமும் நன்றாக இல்லை என்று அவர் கூறினார். தவறான கொள்கைகளின் விளைவுகளை ஏழைகள் எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்று கூறிய அவர், இவற்றையெல்லாம் மனதில் வைத்து, நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்குள் ஒவ்வொரு குடும்பமும் சொந்த வீடு வைத்திருக்க வேண்டும் என்னும் நோக்கத்தோடு பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் தொடங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கிராமப்புறங்களில் கடந்த சில வருடங்களில் 2 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 1.25 கோடி வீடுகள் பிரதமரின் வீட்டுத் வசதி திட்டத்தின் மூலம் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் மத்திய அரசின் பங்களிப்பு ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ 1.5 லட்சம் ஆகும்.

உத்தரப் பிரதேசத்தில் இதற்கு முன் இருந்த ஆட்சிகள் சரியாக செயல்படவில்லை என்று பிரதமர் கூறினார். 22 லட்சம் கிராமப்புற வீடுகள் கட்டப்பட இருப்பதாகவும், இவற்றில் 21.5 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். 14.5 லட்சம் குடும்பங்களுக்கு ஏற்கனவே வீடுகள் கிடைத்து விட்டன, இவற்றில் பெரும்பான்மையானவை இந்த ஆட்சியில் கட்டப்பட்டவை.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s Budget Driving AI, Semiconductors and IT Growth

Media Coverage

India’s Budget Driving AI, Semiconductors and IT Growth
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...

ஓமன் சுல்தான் மேதகு சுல்தான் ஹைதம் பின் தாரிக்கின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி, 2025 டிசம்பர் 17-18 தேதிகளில் ஓமன் நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இரு நாடுகளுக்கும் இடையேயான தூதரக உறவுகள் நிறுவப்பட்டதன்  70-வது ஆண்டு நிறைவை இந்த வருடம் குறிப்பதால் இந்தப் பயணம் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, தொழில்நுட்பம், கல்வி, எரிசக்தி, விண்வெளி, விவசாயம், கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகள் என இருதரப்பு உறவுகளின் சிறந்த நிலை குறித்து மென்மை தங்கிய சுல்தான் ஹைதம் பின் தாரிக் மற்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகியோர் ஆலோசனை நடத்தி தங்கள் திருப்தியை வெளிப்படுத்தினார்கள். 2023 டிசம்பரில் மாண்புமிகு ஓமன் சுல்தான் இந்தியாவிற்கு வந்திருந்த போது ஏற்றுக்கொள்ளப்பட்ட கூட்டு தொலைநோக்கு ஆவணத்தில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் தற்போதைய முயற்சிகள் மற்றும் ஒத்துழைப்பையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

ஓமன் தனது தொலைநோக்குப் பார்வை 2040-ன் கீழ் அடைந்துள்ள பொருளாதார பன்முகத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சிக்கு இந்தியத் தரப்பு பாராட்டு தெரிவித்தது. 2047-க்குள் அதன் நிலையான பொருளாதார வளர்ச்சி மற்றும் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை அடைவதற்கான இந்தியாவின் செயல்பாடுகளை ஓமன் தரப்பு பாராட்டியது. இரு நாடுகளின் தொலைநோக்குப் பார்வைகளிலும் உள்ள ஒற்றுமையை தலைவர்கள் இருவரும்  குறிப்பிட்டதுடன், பரஸ்பர ஈடுபாடுள்ள துறைகளில் இணைந்துப் பணியாற்ற இசைவு தெரிவித்தனர். 

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கிய தூணாக வர்த்தகமும், வணிகமும் உள்ளன  என்று  இரு தரப்பினரும் குறிப்பிட்டனர். இருதரப்பு வர்த்தகத்தில் மேலும் வளர்ச்சி மற்றும் பன்முகத்தன்மைக்கான சாத்தியக்கூறுகளை அவர்கள் வலியுறுத்தினர். ஜவுளி, வாகனங்கள், ரசாயனங்கள், உபகரணங்கள் மற்றும் உரங்கள் உள்ளிட்ட துறைகளில் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான மகத்தான ஆற்றலை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

இருதரப்பு பொருளாதார உறவில் ஒரு முக்கிய மைல்கல்லான இந்திய-ஓமன் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (சிஇபிஏ) கையெழுத்தானதை இரு தரப்பினரும் வரவேற்றனர். சிஇபிஏ, இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் நன்மை பயக்கும் என்பதை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். வர்த்தக தடைகளைக் குறைத்து, நிலையான கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் சிஇபிஏ இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகரிக்கும் என்று தலைவர்கள் தெரிவித்தனர். சிஇபிஏ, பொருளாதாரத்தின் அனைத்து முக்கிய துறைகளிலும் வாய்ப்புகளை ஏற்படுத்தும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே முதலீட்டு வரத்துகளை அதிகரிக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.