இந்தியாவால் முன்மொழியப்பட்டதையடுத்து 2023-ம் ஆண்டை ‘சர்வதேச சிறுதானிய ஆண்டாக’ ஐ.நா. சபை அறிவித்தது: பிரதமர்
பருவகாலங்களில் கிடைக்கும் பழவகைகளை உண்ணுவதுடன், உணவை சரியாக மென்று சாப்பிட வேண்டும், சரியான உணவை சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும்: பிரதமர்
நோய் இல்லாத நிலையை ஆரோக்கியமான உடல் நிலையாக கருத முடியாது, எனவே நலவாழ்வில் கவனம் செலுத்துங்கள்: பிரதமர்
பணியில் கவனம் செலுத்தும் வகையில், அழுத்தத்தை சமாளிக்க தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்: பிரதமர்
சிறப்பான நிலையை எட்ட தொடர்ந்து, பாடுபட வேண்டும்: பிரதமர்
மரியாதையை எதிர்பாராமல் தலைமைப் பண்புடன் முன்உதாரணமாக திகழுங்கள்: பிரதமர்
மாணவர்கள் எந்திரங்கள் அல்ல, முழுமையான வளர்ச்சிக்கான படிப்பில் தங்களது விருப்பங்களுக்கான சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்: பிரதமர்
தேர்வுகள் மட்டுமே முடிவல்ல, அறிவும் தேர்வும் ஒன்றல்ல: பிரதமர்
எழுதும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்: பிரதமர்
ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட திறமையைக் கண்டறிந்து ஊக்குவிப்பதுடன், நேர்மறையான பார்வையுடன் இருக்க வேண்டும்: பிரதமர்
அனைவருக்கும் 24 மணிநேரம் ஒரே மாதிரியானது, நம் நேரத்தை புத்திசாலித்தனமாக நிர்வகிக்க வேண்டும்: பிரதமர்
நிகழ்காலத்தில் கவனம் செலுத்துங்கள், உங்கள் அன்புக்குரியவர்களுடன் உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்: பிரதமர்
உங்கள் குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள், உங்கள் குழந்தைகளை புரிந்து கொண்டு அவர்களின் ஆர்வத்தை ஆதரிக்கவும், உங்கள் குழந்தையின் பலங்களை கண்டறியுங்கள்: பிரதமர்
கேட்க கற்றுக்கொள்ளுங்கள், சரியான சுவாசம் முக்கியம்: பிரதமர்
ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது, அவர்களின் கனவுகளை அறியுங்கள், அவர்களின் பயணத்தை வழிநடத்துங்கள், அவர்களுக்கு ஆதரவாக இருங்கள்: பிரதமர்
மாணவர்களை ஒப்பிடுவதை தவிர்க்கவும், மாணவர்களை பொது இடங்களில் விமர்சிக்காதீர்கள், அவர்களை ஊக்குவித்து பாராட்டுங்கள்: பிரதமர்
உங்களை சவாலாக எடுத்துக்கொள்ளுங்கள், உங்கள் கடந்தகாலத்தை வெல்லுங்கள், நிகழ்காலத்தில் வெற்றியடையுங்கள்: பிரதமர்
கேளுங்கள், கேள்வி கேளுங்கள், புரிந்து கொள்ளுங்கள், பயன்படுத்துங்கள், உங்களுடன் போட்டி போடுங்கள்: பிரதமர்
உங்கள் தோல்விகளை வாய்ப்புகளாக மாற்றுங்கள்: பிரதமர்
தொழில்நுட்பத்தை பயமின்றி புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள், தொழில்நுட்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும்: பிரதமர்
நாம் இயற்கையை சுரண்டக்கூடாது, மாறாக நம் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் பராமரிக்கவும் வேண்டும்: பிரதமர்

தேர்வு குறித்த ஆலோசனை நிகழ்ச்சியின் 8-வது பதிப்பில், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் உள்ள  சுந்தர் நர்சரி பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். நாடு முழுவதும் உள்ள மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், பல்வேறு தலைப்புகளில் அவர்களுடன் விவாதித்தார். குளிர்காலத்தில் உடலை சூடாகப் பராமரிக்க உதவிடும் வகையில் பாரம்பரிய உணவுகள் (எள்) உட்கொள்ள வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.

ஊட்டச்சத்து என்ற தலைப்பைச் சுட்டிக் காட்டி பேசியபோது பிரதமர் ஐ.நா. சபை 2023- ஆண்டை 'சர்வதேச சிறுதானிய ஆண்டாக' அறிவித்தது. இந்தியா மேற்கொண்ட முயற்சியின் காரணமாக உலகம் முழுவதும் சிறுதானியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதாக திரு மோடி குறிப்பிட்டார். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்  பலவகையான  நோய்களிலிருந்து காத்துக்கொள்ள உதவுகிறது என்பதால் அது குறித்து விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருவதை அவர் சுட்டிக்காட்டினார். சிறுதானியமான கம்பு  நாட்டின் மிகச் சிறந்த உணவாக கருதப்படுகிறது என்று பிரதமர் எடுத்துரைத்தார். இந்தியாவில், பயிர் மற்றும் பழவகைகள் போன்ற உணவுப் பொருட்கள் நமது பாரம்பரியத்துடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும், ஒவ்வொரு புதிய பயிர் அல்லது பழவகைகள் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டு, இந்தியா முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் பண்டிகைகளாகக் கொண்டாடப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மேலும், கடவுளுக்கு அளிக்கப்படும் காணிக்கை பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். பருவகாலங்களுக்கு ஏற்ற பழவகைகளை உண்ண வேண்டும் என்று குழந்தைகளை திரு மோடி வலியுறுத்தினார். நொறுக்குத் தீனிகள், எண்ணெய் உணவுகள், மைதாவில் செய்யப்பட்ட உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். சரியான உணவை எடுத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த பிரதமர், அவற்றை நன்கு மென்று சாப்பிட வேண்டும் என்று  கூறினார். குழந்தைகள் குடிநீர் அருந்தும் போது, சிறு அளவில் நன்கு சுவைத்து குடிக்க வேண்டும் என்ற குறிப்புகளையும் அவர் பகிர்ந்து கொண்டார். சரியான நேரத்தில் சரியான உணவை உண்பது குறித்த  , விவசாயிகளின் உதாரணத்தை எடுத்துக்காட்டிய திரு மோடி, அவர்கள் காலையில் வயல்வெளிகளுக்குச் செல்வதற்கு முன், சிற்றுண்டி உட்கொண்டு சூரிய அஸ்தமனத்திற்கு முன் இரவு உணவை முடிக்கும் வழக்கத்தைக்  கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டினார் .இதுபோன்ற ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 

ஊட்டச்சத்து மற்றும் நலவாழ்வு

 

உடல் ஆரோக்கியம் குறித்து விவாதித்த பிரதமர், திடகாத்திரமாக இருக்கும் ஒருவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று கருத முடியாது. குழந்தைகள் உடல் ஆரோக்கியத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று  வலியுறுத்தினார். உடல் ஆரோக்கியத்திற்கு சரியான அளவில்  உறங்க வேண்டியதன் அவசியம் குறித்து அவர் எடுத்துரைத்தார். மனித ஆரோக்கியத்தில் உறக்கத்தின் முக்கியத்துவம் குறித்து ஏராளமான ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். மனித உடலின் ஆரோக்கியத்திற்கு சூரிய ஒளியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு  மோடி, அன்றாடம் காலை வேலையில் சூரிய ஒளியில் சில நிமிடங்கள் நிற்கும் பழக்கத்தை குழந்தைகள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். சூரிய உதயத்திற்குப் பிறகு மரத்தடியில் நின்று ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். ஒவ்வொரு தனிமனிதனும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய ஊட்டச்சத்து உணவுகளின் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்வதில் தான் இருக்கிறது என்பதை பிரதமர் சுருக்கமாக எடுத்துரைத்தார்.

 

மன அழுத்தத்தை எதிர்கொள்வது

மன அழுத்தத்தை எதிர்கொள்வது தொடர்பாக பேசிய பிரதமர்,  10 அல்லது 12-வது வகுப்பு பொதுத் தேர்வுகளில், அதிக மதிப்பெண்கள் எடுக்கவில்லை என்றால் வாழ்க்கையே வீணாகிவிடும் என்ற எண்ணம் நமது சமூகத்தில் எவ்வாறு வேரூன்றியுள்ளது என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று பிரதமர் குறிப்பிட்டார். இது, குழந்தைகள் மீதான மனஅழுத்தத்தை மேலும் அதிகரிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார். கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன் பந்தின் மீது முழு கவனம் செலுத்துவதைக் குறிப்பிட்ட அவர், அது போன்ற வெளிப்புற அழுத்தத்தைத் தவிர்த்து, படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தும்படி, திரு  மோடி வலியுறுத்தினார்.

தங்களுக்கு தாங்களே சவாலாக இருப்பது

மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளும் வகையில், ஒவ்வொரு முறையும் தங்களுக்குள் சவால்களை ஏற்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொண்ட பிரதமர், பலர் இது போன்ற சவால்களை மேற்கொள்வதில்லை என்று குறிப்பிட்டார். மாணவர்கள் தங்களைப் பற்றிய சுய விவரத்தின் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்வதன் அவசியத்தைக் குறிப்பிட்ட  அவர், சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அவர்களின் செயல்பாடுகளுக்கு மனதிருப்தியை அளிக்கும் என்று அடிக்கடி தங்களுக்குள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.  செய்தித்தாள்கள், தொலைக்காட்சி போன்ற அன்றாட பொழுதுபோக்கு அம்சங்களால் ஏற்படும் தாக்கங்கள் காரணமாக தங்களது கவனம் திசை திரும்பாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.  மாணவர்கள் தங்களது முடிவுகளில் தீர்க்கமாக இருப்பதன் மூலம் சவால்களை எதிர்கொள்ள உதவிடும் என்று அவர் கூறினார்.

 

தலைமைத்துவ பண்பு

திறன் வாய்ந்த தலைமைத்துவ பண்பு குறித்த தரவுகளை பகிர்ந்து கொள்ளுமாறு மாணவர் ஒருவர் கேட்டதற்கு, திரு மோடி, வெளிப்புறத் தோற்றம் மட்டுமே தலைமைப் பண்பை வரையறுக்காது என்றும் தலைவர் என்பவர் பிறருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். இத்தகைய தலைமைப் பண்பை அடைய, தனிநபர்கள் தங்களது பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டு, அதனை தங்களது நடத்தையின் மூலம் பிரதிபலிக்க வேண்டும் என்று அவர் கூறினார். "தலைமைத்துவ பண்பு என்பது நம்மைச் சுற்றியுள்ள பிற நபர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற பண்பாகும். மற்றவர்களுக்கு உபதேசம் செய்வது உரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தராது என்று அவர் குறிப்பிட்டார். தலைமைத்துவ பண்பு குறித்த ஒரு உதாரணத்தை மேற்கோள் காட்டிய அவர், தூய்மை குறித்து பேசுவதுடன், அதனை நடைமுறைப்படுத்தவில்லை என்றால், அவர்களால் ஒருதலைவராக தங்களை வளர்த்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.  தலைமைத்துவ பண்பை வளர்த்துக் கொள்வதில் குழுவுடன் இணைந்து பணியாற்றுவதும் பொறுமையும் அவசியம் என்று திரு மோடி வலியுறுத்தினார். பணிகளை ஒப்படைக்கும் போது, குழு உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொள்வது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்றும், சிரமங்கள் ஏற்படும் போது அவர்களுக்கு உதவுவது அவர்களது மன உறுதியையையும் தலைமையின் மீதான நம்பிக்கையையும் வளர்க்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார். கண்காட்சி ஒன்றில் பெற்றோரின் கையைப் பிடித்துக் கொண்டு சென்ற குழந்தை பற்றிய சிறுவயதுக் கதையைப் பகிர்ந்ததன் மூலம் பிரதமர் இதை விரிவாக எடுத்துரைத்தார். பெற்றோர்கள் தங்கள் கைகளைப் பிடித்துக் கொள்ள குழந்தைகள் விரும்புவதாகவும், இது பாதுகாப்பு, நம்பிக்கையின் உணர்வுகளை உறுதி செய்கிறது என்றும் கூறினார். இது போன்ற  நம்பிக்கையே தலைமைத்துவ பண்பின் குறிப்பிடத்தக்க அம்சம் என்று அவர் தெரிவித்தார்.

 

 

புத்தகங்களைக் கடந்து - 360º வளர்ச்சி

படிப்புடன் பொழுதுபோக்கையும் சமநிலைப்படுத்துதல் என்ற தலைப்பில், பேசிய அவர், கல்வியாளர்கள் வெற்றிக்கான படிக்கட்டாக படிப்பு ஒன்றே பொதுவான நம்பிக்கையாக கருதி வரும் நிலையில், மாணவர்கள் எந்திரங்கள் அல்ல என்று கூறினார். முழுமையான வளர்ச்சியின் முக்கியத்துவம்  குறித்து வலியுறுத்திய அவர், கல்வி என்பது அடுத்த அடுத்த வகுப்பிற்கு முன்னேறிச் செல்வது மட்டுமின்றி, முழுமையான வளர்ச்சிக்கானது என்றும் குறிப்பிட்டார். கடந்த காலத்தைப் பிரதிபலிக்கும் வகையில், தோட்டக்கலை போன்ற ஆரம்பகாலப் பள்ளிப் படிப்பின் பாடங்கள் பொருத்தமற்றதாகத் தோன்றியிருக்கலாம், ஆனால் அவை ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு எவ்வாறு பங்களிக்கின்றன என்பதை அவர் விளக்கினார். குழந்தைகளின் வளர்ச்சி தடைபடுவதன் காரணமாக, கடினமான கல்விச் சூழலுக்குள் குழந்தைகளை அடைத்து வைக்க வேண்டாம் என்று பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை பிரதமர் கேட்டுக் கொண்டார். குழந்தைகளுக்கு சிறந்த சூழல் அமைப்பை ஏற்படுத்தித் தருவதன் மூலம் அவர்கள் கல்வியில் மேன்மைஅடைய உதவிடும் என்று தெரிவித்தார். தேர்வுகள் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதை வலியுறுத்திய பிரதமர், இதே போன்ற மனநிலை பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் நம்பிக்கையை ஏற்படுத்த உதவிடும் என்று கூறினார். புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைக் குறை கூறவில்லை என்று கூறிய பிரதமர், மாறாக, போதுமான அறிவைப் பெற வேண்டியதன் அவசியத்தை தெளிவுப்படுத்தினார். அறிவும் தேர்வும் வெவ்வேறு விஷயங்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

 

நேர்மறையான எண்ணங்களைக் கண்டறிதல்

மக்கள் தங்களுக்கு வழங்கப்படும் அறிவுரைகள், தங்களது குறைகளைப்  பிரதிபலிப்பதாக உள்ளது என்ற எண்ணம் அடிக்கடி மனதில் தோன்றுவதாக குறிப்பிட்ட பிரதமர், இத்தகைய மனநிலை பிறருக்கு உதவிடும் எண்ணத்தை தடுப்பதாக கூறினார். அதற்குப் பதிலாக, நன்றாகப் பாடுவது அல்லது நேர்த்தியாக உடை அணிவது போன்ற நல்ல பண்புகளை பிறரிடம் அடையாளம் கண்டு, இது போன்ற நேர்மறையான பண்புகள் குறித்து விவாதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த அணுகுமுறை ஆர்வத்தையும் பிறரிடம் நல்ல உறவையும் உருவாக்குவதாக அவர் கூறினார். மாணவர்கள் சக மாணவர்களுடன் இணைந்து படிக்க அழைப்பதன் மூலம் ஒருவருக்கொருவர் உதவிகளை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் பரிந்துரைத்தார். எழுதும் பழக்கத்தை வளர்த்துக்  கொள்ளவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர் இதன் மூலம் தங்களது எண்ணங்களை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்று  குறிப்பிட்டார்.

தனித்துவத்தைக் கண்டறிதல்

அகமதாபாத்தில் கவனக்குறைவு காரணமாக ஒரு குழந்தை பள்ளியிலிருந்து வெளியேற்றப்படவிருந்த ஒரு சம்பவத்தை விவரித்த பிரதமர், இருப்பினும், குழந்தை சிந்தனை ஆய்வகத்தில் சிறந்து விளங்கியதுடன், ரோபோட்டிக்ஸ் போட்டியில் வெற்றியும் பெற்றது. இது அந்தக் குழந்தையின்  தனித்துவமிக்க வலிமையை வெளிப்படுத்தியது. குழந்தைகளின் தனித்துவமிக்க திறமைகள் மற்றும் வலிமையை அங்கீகரித்து அதனை வளர்த்தெடுப்பதில் ஆசிரியரின் பங்கு குறித்து பிரதமர் எடுத்துரைத்தார். சுய சிந்தனை, உறவுகளைப் புரிந்துகொள்வதற்கான ஒரு பரிசோதனை முயற்சியை திரு மோடி முன்மொழிந்தார். 25 முதல் 30 எண்ணிக்கையிலான  பால்ய வயது நண்பர்களை நினைவு கூர்ந்து அவர்களின் முழுப் பெயர்களையும், அவர்களின் பெற்றோரின் பெயர்களையும் சேர்த்து எழுதுமாறு அவர் பரிந்துரைத்தார். நெருங்கிய நண்பர்களாகக் கருதுபவர்கள் குறித்து நாம் எவ்வளவு குறைவாக அறிந்து வைத்திருக்கிறோம் என்பதை இந்தப் பயிற்சி வெளிப்படுத்துவதாக அமையும் என்றும் பிறரிடம் உள்ள நேர்மறையான பண்புகளை அடையாளம் காண உதவிடும் என்றும் அவர் கூறினார்.  பிறரிடம் நேர்மறையான சிந்தனையைக் கண்டறியும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள பிரதமர் ஊக்குவித்தார். இந்த நடைமுறை, தனிப்பட்ட வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

நேர மேலாண்மை வெற்றிக்கு உதவிடும்

நேர மேலாண்மை  குறித்து மாணவர் ஒருவரிடம் கேட்டதற்கு, அனைவரும் ஒரு நாளில் 24 மணிநேரம் உள்ளது. ஆனால் சிலர் நிறைய சாதிக்கிறார்கள், மற்றவர்கள் எதையும் சாதிக்கவில்லை என்று நினைக்கிறார்கள் என்று கூறியதை திரு மோடி சுட்டிக்காட்டினார். நேர மேலாண்மையின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். பலருக்கு தங்கள் நேரத்தை எவ்வாறு திறம்பட நிர்வகிப்பது என்பது குறித்த புரிதல் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். நேரத்தைக் கவனத்தில் கொண்டு, குறிப்பிட்ட பணிகளுக்கான காலவரையறையை நிர்ணயித்துக் கொள்ளவேண்டும் என்றும், முன்னேற்றம் குறித்து தினமும் மதிப்பாய்வு செய்ய வேண்டும்  என்றும் பிரதமர் அறிவுறுத்தினார். சவாலான பாடங்களைத் தவிர்ப்பதற்குப் பதிலாக அவற்றில் கூடுதல் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். முதலில் கடினமாக உணரும் விஷயத்தை பின்னர் சவாலாக எடுத்துக்கொண்டு செயல்படுவது மூலம் வெற்றிகரமாக சமாளிப்பது குறித்த உதாரணத்தை அவர் மேற்கோள் காட்டினார். இத்தகைய சவால்களை உறுதியுடன் மேற்கொள்வதன் மூலம், தனிநபர்களின்  தடைகளைக் கடந்து வெற்றி அடைய முடியும் என்று தெரிவித்தார். தேர்வு நேரத்தில் பல்வேறு யோசனைகள், சாத்தியக்கூறுகள், கேள்விகளால் ஏற்படும் கவனச்சிதறல்கள் குறித்து உரையாற்றிய பிரதமர், மாணவர்கள் பெரும்பாலும் தங்களது திறமை குறித்த உண்மையை அறியாமல் நண்பர்களுடன் உரையாடி, படிக்காமல் இருப்பதற்கு சாக்குப்போக்குகளைக் கூறினர். மிகவும் சோர்வாக இருப்பது அல்லது சரியான மனநிலையில் இல்லாதது ஆகியவை இத்தகைய பொதுவான சாக்குப்போக்குகளில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார். தொலைபேசிகள் உட்பட கவனச்சிதறல்கள், கல்வியில் கவனம்  செலுத்துவதற்கும் செயல் திறனை வளர்த்துக் கொள்வதற்கும் இடையூறாக இருப்பதைப் பிரதமர் எடுத்துரைத்தார்.

தற்போதைய தருணத்தில் வாழ்வது

தற்போதைய தருணம்  என்பது மிகவும் மதிப்புமிக்கது என்று பிரதமர் கூறினார். இதனைக்  கடந்து சென்றால், மறைந்துவிடும் என்றும், முழுமையாக வாழ்ந்தால், அது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிடும் என்றும் பிரதமர் விளக்கினார்.  ஒரு மென்மையான தென்றல் காற்றைக் கவனிப்பது போன்று அத்தகைய தருணத்தின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.

 

பகிர்வின் சக்தி

படிக்கும் போது பதற்றம், மனச்சோர்வை எதிர்கொள்வது என்ற தலைப்பில் பேசிய திரு மோடி, மன அழுத்தம் பெரும்பாலும் குடும்பத்திலிருந்து பிரிவு ஏற்பட்டதை உணர்வதிலும், சமூக தொடர்புகளிலிருந்து படிப்படியாக விலகுவதிலும் தொடங்குகிறது என்று கூறினார். மனதில் உள்ள அழுத்தங்களை வெளிப்படையாக வெளிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். இதனால் அவை அதிகரிப்பதைத் தடுக்க முடியும் என்று கூறிய பிரதமர், குடும்ப உறுப்பினர்களுடன் வெளிப்படையாக பேசி மன அழுத்தத்தை விடுவிக்கக்கூடிய பாரம்பரிய குடும்ப அமைப்பு முறையை எடுத்துரைத்தார். தனது கையெழுத்தை மேம்படுத்த தனது ஆசிரியர்கள் எவ்வாறு கடுமையாக உழைத்தார்கள் என்பதை அவர் ஆழமாக நினைவு கூர்ந்து, கல்வியாளர்களின் உண்மையான கவனிப்பின் தாக்கத்தை குறிப்பிட்டார். இந்த அக்கறையும், கவனமும் ஒரு மாணவரின் நல்வாழ்வையும், கல்வி செயல்திறனையும் பெரிதும் மேம்படுத்தும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

உங்கள் ஆர்வங்களைப் பின்பற்றுங்கள்

குறிப்பிட்ட வேலைவாய்ப்புகளை தேர்ந்தெடுக்குமாறு குழந்தைகள் மீது பெற்றோர்கள் ஏற்படுத்தும் அழுத்தத்தை திரு மோடி எடுத்துரைத்தார். பெற்றோரின் எதிர்பார்ப்புகள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடுவதிலிருந்து உருவாகின்றன. இது அவர்களுடைய தான் என்ற மனநிலையையும்  சமூக அந்தஸ்தையும் பாதிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எல்லா இடங்களிலும் மாதிரிகளாகக் காட்ட வேண்டாம் என்றும், மாறாக அவர்களின் வலிமைகளை நேசித்தும், ஏற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தினார். பள்ளியிலிருந்து வெளியேற்றப்படும் நிலையில் இருந்த பிறகு ரோபாட்டிக்ஸில் சிறந்து விளங்கிய ஒரு குழந்தையின் முந்தைய உதாரணத்தை அவர் மீண்டும் மேற்கோள் காட்டினார். ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்துவமான திறமைகள் உள்ளன என்பதை விளக்கினார். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் உதாரணத்தையும் அவர் மேற்கோள் காட்டினார். கல்வியில் ஆர்வம் இல்லாவிட்டாலும், தங்கள் குழந்தைகளின் வலிமைகளை அடையாளம் கண்டு வளர்க்குமாறு பெற்றோரை பிரதமர் ஊக்குவித்தார். திறன் மேம்பாட்டின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். மேலும் தான் பிரதமராக இல்லாவிட்டால் திறன் மேம்பாட்டுத் துறையைத் தேர்ந்தெடுத்திருப்பேன் என்றும் குறிப்பிட்டார். தங்கள் குழந்தைகளின் திறன்களில் கவனம் செலுத்துவதன் மூலம், பெற்றோர்கள் அழுத்தத்தைக் குறைத்து அவர்கள் செழிப்படைய உதவ முடியும் என்று கூறினார்.

 

நிற்கவும், பிரதிபலிக்கவும், மீட்டெடுக்கவும்

வெவ்வேறு ஒலிகளை அடையாளம் காண்பதில் கவனம் செலுத்துவது என்பது உன்னிப்பாக கவனம் செலுத்த உதவும் என்பதை பிரதமர் விளக்கினார். பிராணயாமா போன்ற சுவாசப் பயிற்சிகளைப் பயிற்சி செய்வது, பதற்றத்தை எதிர்கொள்ள உதவுவதோடு வேறுபட்ட வகையான சக்தியை உருவாக்கும் என்பதையும் அவர் பகிர்ந்து கொண்டார். இரண்டு நாசிகள் வழியாக சுவாசத்தை சமநிலைப்படுத்தும் ஒரு நுட்பத்தைப் பிரதமர் எடுத்துரைத்தார்.  இது உடலை நொடிகளில் கட்டுக்குள் கொண்டுவரும் என்றும், தியானம் மற்றும் சுவாசக் கட்டுப்பாடு பற்றிக் கற்றுக்கொள்வது எவ்வாறு மன அழுத்தத்தைக் குறைத்து கவனத்தை பராமரிக்க உதவும் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

உங்கள் திறன்களை உணர்ந்து, இலக்குகளை அடையுங்கள்

சிறிய வெற்றிகளில் நேர்மறையாக இருப்பது, மகிழ்ச்சியைக் கண்டறிவது குறித்து கருத்தை வெளிப்படுத்திய திரு மோடி, சில நேரங்களில் மக்கள் தங்கள் சொந்த எண்ணங்கள் அல்லது மற்றவர்களின் செல்வாக்கால் எதிர்மறையாக மாறுகிறார்கள் என்பதை எடுத்துரைத்தார். 10-ம் வகுப்பில் 95% மதிப்பெண்ணை இலக்காக வைத்து 93% மதிப்பெண் பெற்று ஏமாற்றம் அடைந்த மாணவருடன் உரையாடிய பிரதமர், இதை ஒரு வெற்றியாகக் கருதி, உயர்ந்த இலக்கை நிர்ணயித்ததற்காக மாணவரைப் பாராட்டினார். இலக்குகள் லட்சியமாக இருக்க வேண்டும், ஆனால் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சாதனைகளை நேர்மறையான கண்ணோட்டத்தில் பார்ப்பதையும், ஒருவரின் வலிமைகளைப் புரிந்துகொள்வதையும், இலக்கை நெருங்குவதற்கு எடுக்கப்படும் முயற்சியைப் பாராட்டுவதையும் திரு மோடி ஊக்குவித்தார்.

ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமிக்கவர்கள்

தேர்வுகளின் போது நல்ல ஆரோக்கியத்தைப் பேணுதல் என்ற தலைப்பில் உரையாடிய பிரதமர் முதன்மையான பிரச்சினை மாணவர்களிடம் குறைவாகவும், ஆனால் அவர்களின் குடும்பங்களிடமே அதிகமாகவும் இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். கலை போன்ற துறைகளில் குழந்தையின் ஆர்வங்கள் இருந்தபோதிலும், பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பொறியியல் அல்லது மருத்துவம் போன்ற குறிப்பிட்ட தொழில்களைத் தொடர அழுத்தம் கொடுப்பதை அவர் எடுத்துரைத்தார். இந்த நிலையான அழுத்தம் குழந்தைக்கு வாழ்க்கையில் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் திறன்கள் மற்றும் ஆர்வங்களைப் புரிந்துகொண்டு அங்கீகரிக்க வேண்டும் என்றும், அவர்களின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க வேண்டும் என்றும், ஆதரவை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். உதாரணமாக, ஒரு குழந்தை விளையாட்டில் ஆர்வம் காட்டினால், பெற்றோர்கள் அவர்களை விளையாட்டு நிகழ்வுகளைப் பார்க்க அழைத்துச் சென்று அவர்களை ஊக்குவிக்க வேண்டும். சிறந்த செயல்திறன் கொண்ட மாணவர்கள் மட்டுமே கவனத்தைப் பெறும் சூழலை உருவாக்குவதையும், மற்றவர்கள் புறக்கணிக்கப்படுவதையும் தவிர்க்குமாறு ஆசிரியர்களிடம் பிரதமர் வலியுறுத்தினார். மாணவர்களை ஒப்பிடாமல், ஒவ்வொரு குழந்தையின் தனித்துவமான திறன்களை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். முன்னேற்றத்திற்காக பாடுபடவும், சிறப்பாகச் செயல்படவும், நினைவூட்டிய அவர், கல்வி என்பது வாழ்க்கையில் எல்லாமே அல்ல என்பதையும் சுட்டிக்காட்டினார்.

 

சுய - முனைப்பு

சுய முனைப்பு என்ற தலைப்பில் பேசிய பிரதமர், ஒருபோதும் தம்மைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தினார். மேலும் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதன் முக்கியத்துவத்தையும் குடும்பத்தினரிடமிருந்தோ அல்லது பெரியவர்களிடமிருந்தோ ஊக்கப்படுத்துதலை நாடுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். தன்னம்பிக்கையை வளர்க்கவும், சாதனை உணர்வை அனுபவிக்கவும், 10 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டுதல் போன்ற சிறிய இலக்குகளுடன் சவால்மிக்க பணிகளில் ஈடுபடுமாறு அவர் பரிந்துரைத்தார். தாம் மேற்கொள்ளும் இந்த சிறிய பரிசோதனைகள் தனிப்பட்ட வரம்புகளைக் கடந்து நிகழ்காலத்தில் வாழ உதவுகின்றன என்றும், கடந்த காலத்தை கடந்த காலத்திலேயே இருக்க அனுமதிக்கின்றன என்பதை திரு மோடி எடுத்துரைத்தார். 140 கோடி இந்திய மக்களின் ஊக்கப்படுத்துலை காண்கிறேன் என்று பிரதமர் கூறினார். தேர்வுக்கு தயாராவோம் என்ற புத்தகத்தை தாம் எழுதியது குறித்து அவர் பகிர்ந்துகொண்டார். அஜய் போன்றவர்கள் தங்கள் கிராமங்களில் அதை தங்கள் கவிதைகளாக மாற்றுகிறார்கள் என்று அவர் பகிர்ந்து கொண்டார். நம்மைச் சுற்றி பல ஊக்கப்படுத்துதல் ஆதாரங்கள் இருப்பதால், அத்தகைய பணியைத் தொடர வேண்டும் என்று இது அவருக்கு உணர்த்துகிறது என்று அவர் தெரிவித்தார். தகவல்களை உள்வாங்குவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அதிகாலையில் எழுந்திருப்பது போன்ற அறிவுரைகளை செயல்படுத்தாமல் இருப்பது போதாது என்று திரு மோடி அறிவுறுத்தினார். கற்றறிந்த கொள்கைகளை நடைமுறைக்குக் கொண்டு வருவதன் முக்கியத்துவத்தையும், தனிப்பட்ட பரிசோதனை மூலம் தன்னைச் செம்மைப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். தன்னை ஒரு ஆய்வகமாக மாற்றி, இந்தக் கொள்கைகளைச் சோதிப்பதன் மூலம், ஒருவர் உண்மையிலேயே அவற்றை உள்வாங்கிக் கொண்டு பயனடைய முடியும் என்பதை பிரதமர் விளக்கினார். பெரும்பாலான மக்கள் தங்களை விட மற்றவர்களுடன் போட்டியிடுகிறார்கள், பெரும்பாலும் குறைந்த திறன் கொண்டவர்களுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள், இது ஏமாற்றத்திற்கு வழிவகுக்கிறது என்பதை திரு மோடி எடுத்துரைத்தார். சுய போட்டி அசைக்க முடியாத தன்னம்பிக்கையை உருவாக்குகிறது, அதே நேரத்தில் தன்னை மற்றவர்களுடன் ஒப்பிடுவது ஊக்கமின்மையை ஏற்படுத்தும் என்று அவர் வலியுறுத்தினார்.

 

 

தோல்வியை எரிபொருளாக்குங்கள்

தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது என்ற தலைப்பில், 30-40% வரையிலான மாணவர்கள் கூட தங்கள் 10 அல்லது 12-ம் வகுப்புகளில் தோல்வியடைந்தாலும், வாழ்க்கை முடிவுக்கு வராது என்று திரு மோடி குறிப்பிட்டார். வாழ்க்கையில் வெற்றி பெறுவதா அல்லது கல்வியில் மட்டும் வெற்றி பெறுவதா என்பதை முடிவு செய்வதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். தோல்விகளை ஒரு ஆசிரியராக ஆக்கிக் கொள்ளவும், வீரர்கள் தங்கள் தவறுகளை மறுபரிசீலனை செய்து முன்னேற்றத்திற்காக பாடுபடுவதற்கு கிரிக்கெட்டை உதாரணமாகக் கொள்ளவும் அவர் அறிவுறுத்தினார். தேர்வுகளின் பார்வையில் மட்டுமல்லாமல், வாழ்க்கையை முழுமையான பார்வையுடன் பார்க்க பிரதமர் வலியுறுத்தினார். மாற்றுத்திறனாளிகள் பெரும்பாலும் அசாதாரண பலங்களைக் கொண்டுள்ளனர் என்றும், ஒவ்வொருவருக்கும் தனித்துவமான திறன்கள் உள்ளன என்றும் அவர் எடுத்துரைத்தார். கல்வி சாதனைகளில் மட்டுமே கவனம் செலுத்துவதை விட, இந்த வலிமைகளில் பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். நீண்ட காலத்திற்கு, ஒருவரின் வாழ்க்கையும் திறமைகளும்தான் வெற்றியைப் பற்றிப் பேசுகின்றன.ஸகல்வி மதிப்பெண்கள் மட்டுமல்ல என்றும் அவர் கூறினார்.

 

தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெறுதல்

தொழில்நுட்பம் பரவலாகவும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும் ஒரு தருணத்தில், நாம் அனைவரும் அதிர்ஷ்டசாலிகள் என்பதை குறிப்பிட்ட பிரதமர், தொழில்நுட்பத்திலிருந்து விலகிச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும், மாறாக, தனிநபர்கள் தங்கள் நேரத்தை ஆக்கப்பூர்மற்ற செயல்களில் செலவிடுகிறார்களா அல்லது அவர்களின் நலன்களை ஆழ்ந்து ஆராய்கிறார்களா என்பதை தீர்மானிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அவ்வாறு செய்வதன் மூலம், தொழில்நுட்பம் ஒரு அழிவு சக்தியாக இல்லாமல் ஒரு பலமாக மாறும். ஆராய்ச்சியாளர்களும் புதுமைக் கண்டுபிடிப்பாளர்களும் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தொழில்நுட்பத்தை உருவாக்குகிறார்கள் என்பதை திரு மோடி எடுத்துரைத்தார். தொழில்நுட்பத்தைப் புரிந்துகொண்டு உகந்த முறையில் பயன்படுத்துமாறு மக்களை அவர் வலியுறுத்தினார்.

எந்தவொரு பணியிலும் ஒருவர் தனது சிறப்பான வெளிப்பாட்டை  எவ்வாறு வழங்குவது என்று கேட்கப்பட்டபோது, தொடர்ச்சியான முன்னேற்றத்தின் முக்கியத்துவத்தை திரு மோடி வலியுறுத்தினார். ஒருவர் தனது சிறந்ததைச் செய்வதற்கான முதல் நிபந்தனை முந்தைய நாளைவிட சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதாகக் கூறினார்.

உங்கள் பெற்றோரை எப்படி சமாதானப்படுத்துவது?

குடும்ப ஆலோசனையைப் பின்பற்றுவதா அல்லது தனிப்பட்ட நலன்களைப் பின்பற்றுவதா என்பதில் உள்ள சிக்கலைப் பற்றிப் பேசிய திரு மோடி, குடும்ப ஆலோசனைகளை அங்கீகரிப்பது முக்கியம் என்றும், பின்னர் அவர்களின் ஆலோசனையை எவ்வாறு தொடரலாம் என்று கேட்டு அவர்களின் உதவியைப் பெறுவது முக்கியம் என்றும் குறிப்பிட்டார். உண்மையான ஆர்வத்தைக் காட்டி, மாற்று வழிகளைப் பற்றி மரியாதையுடன் விவாதிப்பதன் மூலம், குடும்பங்கள் படிப்படியாக ஒருவரின் விருப்பங்களைப் புரிந்துகொண்டு ஆதரிக்கக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.

 

தேர்வு குறித்த அழுத்தத்தை எதிர்கொள்ளுதல்

மாணவர்கள் தங்கள் தேர்வு தாள்களை சரியான நேரத்தில் நிறைவு செய்யாததால் ஏற்படும் மன அழுத்தம் போன்ற பொதுவான பிரச்சினையைப் பற்றி விவாதித்த பிரதமர், சுருக்கமான பதில்களை எழுதுவது மற்றும் நேரத்தை திறம்பட நிர்வகிப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள முந்தைய தேர்வு வினாத்தாள்களை முழுமையாகப் பயிற்சி செய்யுமாறு அறிவுறுத்தினார். அதிக முயற்சி தேவைப்படும் கேள்விகளில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தையும், கடினமான அல்லது பழக்கமில்லாத கேள்விகளில் அதிக நேரம் செலவிடாமல் இருப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். தேர்வுகளின் போது சிறந்த நேர மேலாண்மைக்கு வழக்கமான பயிற்சி உதவும் என்று அவர் வலியுறுத்தினார்.

இயற்கையைப் பாதுகாத்தல்

பருவநிலை மாற்றத்தைப் பற்றிப் பேசிய பிரதமர், இளம் தலைமுறையினரின் அக்கறையைப் பாராட்டினார். உலகில் ஏற்பட்டுள்ள பெரும்பாலான வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பை விட மக்கள் தனிப்பட்ட லாபத்திற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு சுரண்டல் கலாச்சாரத்திற்கு வழிவகுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இயற்கையைப் பாதுகாத்து வளர்க்கும் வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் மிஷன் லைஃப் (சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை) பற்றி திரு மோடி குறிப்பிட்டார். அன்னை பூமியிடம் வருத்தம் தெரிவிப்பது, மரங்கள், ஆறுகளை வணங்குவது போன்ற இயற்கைக்கு மரியாதை அளிக்கும் இந்தியாவின் கலாச்சார நடைமுறைகளை அவர் பகிர்ந்து கொண்டார். அன்னையின் பெயரில் மரக் கன்றுகளை நடுவதற்கு மக்களை ஊக்குவிக்கும்   இயக்கம் செயல்படுத்தப்படுவதையும் அவர் எடுத்துரைத்தார். இந்த முயற்சி ஒரு பற்றுதல் மற்றும் உரிமை உணர்வை வளர்த்து, இயற்கையின் பாதுகாப்பிற்கு வழிவகுக்கிறது.

 

உங்கள் சொந்த பசுமை சொர்க்கத்தை வளருங்கள்

மாணவர்கள் தங்கள் சொந்த மரக்கன்றுகளை நடுமாறு திரு மோடி வலியுறுத்தினார். மேலும் அவற்றுக்கு தண்ணீர் ஊற்றுவதற்கான நடைமுறை குறிப்புகளையும் பரிந்துரைத்தார். மரத்தின் அருகே தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு களிமண் பானையை வைத்து மாதத்திற்கு ஒரு முறை அதை மீண்டும் நிரப்புமாறு அவர் அறிவுறுத்தினார். இந்த முறையானது குறைந்தபட்ச நீர் பயன்பாட்டுடன் மரம் விரைவாக வளர உதவுகிறது என்று அவர் தெரிவித்தார். பிரதமர் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்து, அவர்களின் பங்கேற்புக்கு நன்றி தெரிவித்தார்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
The quiet foundations for India’s next growth phase

Media Coverage

The quiet foundations for India’s next growth phase
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 30, 2025
December 30, 2025

PM Modi’s Decisive Leadership Transforming Reforms into Tangible Growth, Collective Strength & National Pride