”இந்திய மக்களிடையே நம்பிக்கை ஒளியை ஏற்பத்தும் நோக்கத்துடன் பா.ஜ.க. பயணித்துக் கொண்டிருக்கிறது. பினேபி இன்று எந்த இடத்தில் இருக்கிறதோ அது எநத ஒரு தனி மனிதனாலும் இல்லை, ஆனால கார்யகர்த்தர்கள் எனப்படும் செயல்வீரர்களின் கடின உழைப்பு, வியர்வை மற்றும் தியாகத்தால் அமைந்துள்ளது. எங்களைப் பொருத்தவரையில் தேசம் என்பது கட்சிக்கும் மேலானது. முதலில் இந்தியா என்ற நோக்கத்துடன் பா.ஜ.க. முன்னே செல்லும்.”

2013 ஏப்ரல் 6, அகமதாபாத்தில் நடைபெற்ற கார்யகர்த்தர்கள் சம்மேளனத்தில் கார்யகர்த்தர்கள் இடையே நரேந்திர மோடி

Organiser par excellence: Man with the Midas Touchகட்சியின் 33வது துவக்க நாளையொட்டி நடைபெற்ற பா.ஜ.க. செயல்வீரர்கள் மாநாட்டில் உரையாற்றுகிறார் நரேந்திர மோடி

சாதாரண கட்சித் தொண்டராக தனது பயணத்தைத் தொடங்கிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, தனது ஒருங்கிணைப்புத் திறன் மற்றும் தம்மிடம் அளிக்கப்படும் எந்தப் பணியையும் சிறப்பான முறையில் செய்து முடிக்கும் திறன் காரணமாக நாட்டின் மிக உயர்ந்த பதவியை அடைந்தார். கட்சியின் சாதாரணத் தொண்டராக இருந்த போதும் அவர் தனக்கு அளிக்கப்பட்ட அமைப்புசார்ந்த பணிகளை திறம்பட செய்யும் திறனுடன் அவர் செயல்பட்டது கவனிக்கப்பட்டது. கட்சி வளர்ச்சி சிக்கலாக இருந்த பகுதிகளில் உள்ள பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றைப் போக்க அந்தப் பகுதிகளுக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் அவரை அனுப்பி வைத்தனர். கட்சிப் பேரணி ஏற்பாடு செயவது அல்லது சிக்கல் நிறைந்த பகுதியில் தேர்தல் பிரச்சார இயக்கம் நடத்துவது என எதுவாக இருந்தாலும் அதற்கான பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டு – அந்தப் பொறுப்புக்களை அவர் எதிர்பார்ப்புக்களை விஞ்சி செய்து முடித்தார்.

இன்று வரையில் அவர் தொண்டர்களின் அமைப்பு ரீதியான பணிகளில் கண்ணோட்டம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திவதுடன் அதுபற்றி அடிக்கடி பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அகமதாபாத்தில் புழுக்கம் நிறைந்த செப்டம்பர் மாதம் ஒன்றில் பாரதீய ஜனதா யுவ மோர்ச்சா என்னும் பா.ஜ.க. வின் இளைஞர் அணி தொண்டர்கள் மத்தியில் அவர் பேசத் தொடங்கினார். அவரது பேச்சின் மையக் கரு வாக்குச் சாவடி நிர்வாகத்தின் முக்கியத்துவமாக இருந்தது.

”தேர்தலின் போது வாக்குச் சாவடி நிர்வாகம் மிக முக்கியமாகும். கோட்டையைப் பிடிக்காமல் போரில் வெற்றிபெற முடியாது என்பது போல, வாக்குச்சாவடி ஒன்றில் வெற்றி பெறாமல் தேர்தலில் வெற்றி பெற முடியாது. வாக்குச்சாவடியில் வெற்றி பெறுவது தான் தேர்தலில் உண்மையான பரிசோதனை.

namo-organiser-in2

பாரதீய ஜனதா யுவ மோர்ச்சாவில் திரு. நரேந்திர மோடி உரை நிகழ்த்துகிறார்

கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சியான மற்றும் துயரமான தருணங்களில் மக்களுடன் தோளோடு தோள் இணைந்து நின்று அவர்களுடன் தனிப்பட்ட இணைப்பை ஏற்படுத்திக் கொள்வது முக்கியம் என்று இதே உரையில் அவர் குறிப்பிட்டார்.

தனது சொந்த மாநிலமான குஜராத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள திரு. நரேந்திர மோடியை சிறந்த வளர்ச்சிக்கான நபராக உலகமே அறிகிறது. இவர் தொட்டதெல்லாம் துலங்கும் என்ற சிறப்புடன் இவர் சிறந்த ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரை பெறும் முன்னதாகவே இவர் தாம் பணிபுரிந்த பகுதிகளில் எல்லாம் பா.ஜ.க.வை வெற்றி பெறச் செய்திருக்கிறார்.

namo-organiser-in3

தொட்டதெல்லாம் துலங்கும் சிறப்புக்குரிய திரு. நரேந்திர மோடி

பளபளப்பான அறை ஒன்றில் இந்தியா மட்டுமின்றி உலகின் பிரபலமானவர்களுடன் அமர்ந்து கொண்டிருக்கும் திரு. நரேந்திர மோடி அகமதாபாத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் செய்து கொண்டிருந்த முதல் வேலை தெரிந்தால் நீங்கள் ஆச்சரிய்ப்படுவீர்கள். அவர் அந்த இடத்தை துடைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

காலையில் பால் வாங்கிக் கொண்டு வருவது மற்றும் அலுவலகத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது ஆகியவை அவரது பணிகள் ஆகும். மரியாதை காரணமாக அவர் மூத்த பிரச்சாரகர்கள் எனப்படும் முழு நேர ஊழியர்களின் ஆடைகளையும் துவைத்துக் கொடுப்பார்.

கரடு முரடான மற்றும் தடுமாற்றம் நிறைந்த தேர்தல் அரசியலில் இருந்து விலகி இருக்க மோடி விரும்பிய போதிலும் சங்கத்தின் தலைமை கடந்த 1987ம் ஆண்டு அவரை பா.ஜ.க.-வின் பொதுச் செயலாளராக அக்கட்சியில் சேருமாறு கேட்டுக்கொண்டது. அதன் பின்னர் அவர் அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றார் என்பதுடன் பா.ஜ.க. -வில் மற்றவர்கள் வெற்றி பெறவும் உதவினார் என்பதால் தோல்வி என்பதே அவருக்கு இல்லை.

நகராட்சித் தேர்தல்கள் : சிறியதே பெரியது

கடந்த 1987ம் ஆண்டு பா.ஜ.க. -வில்இணைந்த திரு.நரேந்திர மோடிக்கு அந்த ஆண்டே வந்த நகராட்சித் தேர்தல் முதல் சோதனையாக அமைந்தது.1980களின் தொடக்கத்திலேயே பா.ஜ.க ராஜ்கோட் மற்றும் ஜுனாகத் மாநகராட்சிகளில் வெற்றியைச் சுவைத்திருந்ததுடன், சட்டப்பேரவையிலும் சில இடங்களை வென்றிருந்தது என்ற போதிலும் மாநிலத்தில் கால்பதிக்க வேண்டும் என விரும்பிய கட்சிக்கு அகமதாபாத் மாநகராட்சி சவாலாகவே இருந்தது. நாடாளுமன்றம், சட்டசபை மற்றும் குஜராத்தில் உள்ள பஞ்சாயத்துக்கள்/மாநகராட்சிகளில் வலுவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் மீது மக்களுக்கு அவநம்பிக்கை இருந்தபோதிலும், அவர்களின் வலிமை அதை வெல்லவே முடியாது என்ற நிலையை அளித்திருந்தது.

இந்தக் கடினமான சவாலை ஏற்றுக்கொண்ட திரு. நரேந்திர மோடி ஒட்டுமொத்த நகரத்தையும் உள்ளடக்கி பா.ஜ.க. -வின் வெற்றியை உறுதிசெய்வதற்காக அயர்வின்றி உழைத்தார். இறுதியாக பா.ஜ.க. விற்கு எது தேவையோ அதுவே முடிவாக கிடைத்தது. அந்தக் கட்சி அகமதாபாத் மாநகராட்சியில் ஆளும்கட்சியாக வந்து மக்களுக்கு சேவை செய்யும் தொடர்ந்து கட்சியின் அடித்தளத்தை விரிவுபடுத்திக் கொள்வதற்கான வாய்ப்பை அளித்தது.

2000 வரை பா.ஜ.க. அகமதாபாத் மாநகராட்சியில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக விளங்கியது. திரு. நரேந்திர மோடி குஜராத்தில் இல்லாமல் வேறு இடத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்ததால் 1987க்குப் பிறகு முதல் முறையாக இந்த உள்ளாட்சித் தேர்தல் அமைந்தது.

சட்டசபையில் வெற்றி : காந்திநகரில் பிரகாசித்த தாமரை

மாதவ்சிங் சோலங்கியின் தலைமையில் கே.எச்.ஏ.எம் கூட்டணியுடன் காங்கிரஸ் 51.40 சதவீத வாக்குகளுடன் 141 இடங்களை 1980 சட்டப்பேரவைத் தேர்தலில் பெற்றது.  பா.ஜ.க. விற்கு 9 இடங்கள் மட்டுமே கிடைத்தது. புதிய சமூக கூட்டணியில் சவாரி செய்ததுடன் இந்திரா காந்தி படுகொலையால்  ஏற்பட்ட அனுதாப அலை காரணமாக சோலங்கி 55.55 சதவிகித வாக்குகளைப் பெற்று 149 இடங்களில் வெற்றி பெற்றார். இது பா.ஜ.க. விற்கு மீண்டும் ஏமாற்றத்தையே அளித்தது. 14.96 சதவிகிதம் என்ற அளவுக்குத் தனது வாக்குகளை சிறிது அதிகரித்துக் கொண்ட அந்தக் கட்சி 11 இடங்களை மட்டுமே பெற்றது.

எனினும் தெளிவான கொள்கை இலக்கு இல்லாததால் காங்கிரஸ் இடஒதுக்கிடு அரசியல் செய்ததுடன் சமூக கூட்டணிகளை உருவாக்குவது/அழிப்பதில் மட்டுமே ஈடுபட்டது.; 1985 முதல் 1988 வரையிலான ஆண்டுகளில் கடும் வறட்சி ஏற்பட்டது. பல்வேறு குண்டுவெடிப்புகள் காரணமாக குஜராத்தின் சமூக கட்டமைப்பு சீரழிக்கப்பட்டது.

.

namo-organiser-in4

1990களில் குஜராத்துக்கு வரவேற்கப்பட்ட திரு. நரேந்திர மோடி

1990 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த போது, காங்கிரஸ் எதிர்ப்பு அலை வீசியபோதிலும், கட்சியில் வலிமை கொண்ட நபர் இல்லாத நிலை காணப்பட்டது. மக்கள் ஆதரவைப் பெறும் வகையில் அரசியல் தலைமை ஏற்கக் கூடிய வலிமையான அமைப்பை உருவாக்கும் பணி திரு. நரேந்திர மோடியிடம் அளிக்கப்பட்டது.

1990 பிப்ரவரி 27 அன்று பத்தாண்டு கால காங்கிரஸ் ஆட்சிக்குப் பின்னர்  குஜராத்தில் ஒரு புதிய சட்டசபை உருவாக்கப்பட்டது. திரு. சிமன்பாய் படேல் தலைமையிலான ஜனதா தளம் 29.36 சதவீத வாக்குகளுடன் 77 இடங்களுடன் முதலிடத்தையும் 26.69 சதவீத வாக்குகளுடன் 67 இடங்களை பெற்று பா.ஜ.க. இரண்டாவது இடத்தைப் பெற்றது. மிகக் குறைந்த இடங்களைப் பெற்று சிறிய அளவில் இருந்த அந்தக் கட்சி ஒரு வலிமையான சக்தியாக உயர்ந்து இன்றளவும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

namo-organiser-in5

1990களில் எல்.கே.அத்வானியின் உரையைக் கேட்கும் நரேந்திர மோடி, கேசுபாய் படேல் மற்றும் இதர தலைவர்கள்

குஜராத் மாநில பா.ஜ.க. -வின் ஒருங்கிணைப்பாளராக நரேந்திர மோடி இருந்த போது குஜராத் பா.ஜ.க. சந்தித்த இரண்டாவது சோதனைக் களமாக 1995 சட்டசபைத் தேர்தல் அமைந்தது. 1995 தேர்தலின் போதுதான் பா.ஜ.க. அனைத்து 182 தொகுதிகளிலும் போட்டியிட்டது. காங்கிரசை விட அதிக இடங்களில் அது போட்டியிட்டதும் இதுவே முதல்முறை. இந்தத் தேர்தலில் மக்கள் பா.ஜ.க. விற்கு ஒரு உறுதியான வெற்றியை அளித்தனர். இந்தத் தேர்தலில் 42.51 சதவீத வாக்குகளுடன் பா.ஜ.க. 121 இடங்களைக் கைப்பற்றியது. பெரும் ஏமாற்றத்தை சந்தித்த காங்கிரஸ் 45 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. அமைப்பை வெற்றிகரமாக வலுப்படுத்திய திரு. நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியில் பல்வேறு விரிசல்களை அம்பலப்படுத்தினார்.

பா.ஜ.க. ஆட்சி அமைத்த போதிலும் பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் நீடித்தது. பா.ஜ.க. தலைமையில் இருந்த கோஷ்டிப் பூசல் காரணமாக அந்தக் கட்சி 1996ல் ஆட்சியை இழந்தது. இந்த சமயத்தில் திரு. நரேந்திர மோடி கட்சியின் தேசிய செயலாளராக தில்லியில் இருந்தார்.

துரோகம் செய்து கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களுடன் மீண்டும் சேர்ந்து கொண்டு காங்கிரஸ் 1996ல் ஆட்சியைப் பிடித்தது. எனினும் 1998ல் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தது. வெள்ளம், புயல், வறட்சி போன்ற தொடர் இயற்கைச் சீற்றங்கள் மற்றும் மோசமான பூகம்பம் தாக்குதல் மற்றும் மோசமான நிவாரணப் பணிகள் காரணமாக மக்கள் பா.ஜ.க. விடமிருந்து விலகத் தொடங்கினர். கூட்டுறவுத் துறையில் ஊழல் புகார்கள் வரத்தொடங்கின. இந்தக் கடுமையான தருணத்தில் குஜராத் மாநில முதலமைச்சர் பொறுப்பை ஏற்குமாறு 2001 அக்டோபர் 7ம் தேதி திரு.நரேந்திர மோடி கேட்டுக்கொள்ளப்பட்டார். ஆட்சிக்கு வருவது பற்றிய கனவே இன்றி இருந்த அந்த நபரிடம் குஜராத்தில் பா.ஜ.க. அரசின் கவுரவம் சரியாமல் இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அந்தப் பொறுப்பு அளிக்கப்பட்டது.  2003 மார்ச்சில் மீண்டும் தேர்தல் வர திரு. நரேந்திர மோடிக்கு மீண்டும் பெரிய பொறுப்பு அளிக்கப்பட்டது.

கோத்ராவிலும் குஜராத்தின் இதர பகுதிகளிலும் நிகழ்ந்த எதிர்பாரா சம்பவங்கள் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நிலைமையை சீரமைக்கவும் புதிய அரசு தேவை என்ற எண்ணத்தை நரேந்திர மோடியிடம் ஏற்படுத்தியது. அவ்வாறு செய்ய பா.ஜ.க. வால் மட்டுமே முடியும் என்றும் அவர் கருதினார். இதன் காரணமாக அவர் சட்டப்பேரவையைக் கலைக்க 2002 டிசம்பரிலேயே தேர்தல் நடைபெற்றது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது திரு. நரேந்திர மோடி மோசமான வில்லனாக சித்தரிக்கப்பட்டார். இந்தத் தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக இருக்கும் என்றும் வர்ணிக்கப்பட்டது. அவர் கடுமையாக பிரச்சாரம் செய்ததுடன் முந்தைய தேர்தல்களைப் போல் இன்றி அவர் பிரச்சாரத்தில் முன்னிறுத்தப்பட்டார். இதே உத்திதான் மக்களவைத் தேர்தலிலும் கடைபிடிக்கப்பட்டது. திரு. நரேந்திர மோடி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நம்பிக்கையை பரப்பினார்.

இந்தத் தேர்தலில் பா.ஜ.க. 49.85 சதவீத வாக்குகளுடன் 127 இடங்களைப் பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு 51 இடங்கள் மட்டுமே கிடைத்தது.

2002 – 2007 வரை திரு. நரேந்திர மோடி தூய்மையான மற்றும் வளர்ச்சி சார்ந்த அரசை குஜராத்தில் உறுதி செய்து, மாநிலம் எல்லைகளைக் கடந்து வளர்ச்சி கண்டது. குஜராத்தில் வளர்ச்சியின் வேகம் அதிகமாக ஆக எதிர்கட்சிகளிடையே விரக்தியும் அதிகரித்தது. 2007ம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோது திரு. நரேந்திர மோடியும் தனிப்பட்ட தாக்குதலுக்கு இரையாக்கப்பட்டார். பிரச்சாரம் ஒன்றில் காங்கிரஸ் தலைவர் கசப்புணர்வுடன் அவரை மரண வியாபாரி என விமர்சித்தார். இருந்தபோதிலும் இந்த வெறுப்பு அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த திரு. நரேந்திர மோடி, தனது வலிமைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் மீது கவனம் செலுத்தினார். இறுதியாக 49.12 சதவிகித வாக்குகளுடன் பா.ஜ.க. 117 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 60க்கும் குறைவாக 59 இடங்களில் மட்டுமே வென்றது.

namo-organiser-in6

https://www.narendramodi.in/360/build.html

குஜராத்தில் நரேந்திர மோடியின் மிகச் சமீபத்திய தேர்தல் வெற்றி டிசம்பர் 2012ல் கிட்டியது, இதில் அவரது கட்சி 115 இடங்களில் வெற்றி பெற்றது. குஜராத் மக்கள் அவருக்கு உறுதியான வெற்றியை அளித்தனர்.

2001 முதல் தற்போது வரை, குஜராத் முதலமைச்சராக மோடி இருந்த காலத்தில் பா.ஜ.க. பஞ்சாயத்து மற்றும் மாநகராட்சித் தேர்தல்களில் அனைத்து சுற்றுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

1990 முதல் 2012 வரை நிறைய மாறியுள்ள போதிலும் இதுவரையில் மாறாமல் இருப்பது திரு. நரேந்திர மோடியின் கடின உழைப்பு, உறுதி மற்றும் அர்ப்பணிப்பு தான். புதுமையான பிரச்சாரத்தின் மூலம் தேர்தல் முடிவுகளை பிஜேபிக்கு சாதகமாக ஆக்கியவர் இவர்.

மக்களவை தேர்தல்: குஜராத்திலிருந்து தில்லிக்கு அதிக தாமரைகள்

ஒருங்கிணைப்பாளராக நரேந்திர மோடியின் திறன், அவரது கட்சி அதிகபட்சமான பா.ஜ.க. உறுப்பினர்களை குஜராத்திலிருந்து தில்லிக்கு அடுத்தடுத்த மக்களவைத் தேர்தல்களில் அனுப்ப உதவியது. 1984ம் ஆண்டு குஜராத்தில் ஒரே ஒரு மக்களவை இடத்தைப் பிடித்த பா.ஜ.க.  அடுத்த 5 ஆண்டுகளில் 1989 மக்களவைத் தேர்தல்களில் கட்சி 12 இடங்களையும் அதன் பின்னர் 1991 தேர்தலில் 20 ஆகவும் உயர்ந்தது.

1996, 1998 மற்றும் 1999 தேர்தல்களில் குஜராத்திலிருந்து பா.ஜ.க. எம்பிக்களின் எண்ணிக்கை 20க்கும் அதிகமாகவே இருந்தது. இந்தத் தேர்தல்களின் போது அவர் குஜராத்தில் இல்லாதபோதிலும், இந்த வெற்றியின் அடித்தளம் திரு. நரேந்திர மோடியால் அமைக்கப்பட்டது. குஜராத்தின் முதலமைச்சராக அவர் இருந்தபோது2004 மற்றும் 2009 தேர்தல்களில் பா.ஜ.க. பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது.

யாத்திரைகள் : தன்னை விட நாடே முக்கியம்

குஜராத் மாநில பொதுச் செயலாளராக இருந்த திரு. நரேந்திர மோடி, 1987ம் ஆண்டு நயாயாத்திரை மற்றும் 1989ல் மஹாசக்தி யாத்திரை ஆகியவற்றை ஏற்பாடு செய்ததில் முக்கிய சக்தியாக திகழ்ந்தார்.  ஊழல் நிறைந்த காங்கிரஸ் ஆட்சியின்கீழ் மக்களுக்கு நீதி வேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்தப்பட்ட இந்த இரு பயணங்களும் முக்கிய கவனம் பெற்றது.

namo-organiser-in7

1991ல் நரேந்திர மோடி மற்றும் டாக்டர். முரளி மனோகர் ஜோஷி நடத்திய ஏக்தா யாத்திரை

தேசிய அளவில் திரு எல்.கே. அத்வானி சோம்நாத் முதல் அயோத்யா வரை நடத்திய யாத்திரை மற்றும் டாக்டர் முரளி மனோகர் ஜோஷி நடத்திய ஏக்தா யாத்திரைக்கு முக்கிய பின்னணியாக இருந்தவர் திரு. நரேந்திர மோடி. ஸ்ரீநகரில் மூவர்ணக் கொடி ஏற்றுவதற்கு பயங்கரவாதிகள் அனுமதி மறுத்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் நிலவிய அசாதாரண சூழ்நிலையின் பின்னணியில் ஏக்தா யாத்திரை நடத்தப்பட்டது. யாத்திரை தொடங்கும் முன்பாக அனைத்து இடங்களுக்கும் திரு. நரேந்திர மோடி நேரில் சென்று அங்குள்ள நிலை குறித்து ஆய்வு செய்தார்.

namo-organiser-in8

திரு. எல். கே. அத்வானியின் ஜனாதேஷ் யாத்திரையில் திரு. நரேந்திர மோடி

namo-organiser-in9

திரு. எல். கே. அத்வானியின் சோம்நாத் முதல் அயோத்தி வரையிலான யாத்திரை

யாத்திரைகள் ஏற்பாடு செய்வது என்பது எளிதான செயல் அன்று.  யாத்திரை தடையின்றி செல்வதை உறுதிப்படுத்த பாதையை இறுதிசெய்வதில் இருந்து ஒவ்வொரு இடத்திலும் ஏற்பாடுகளை சரிபார்ப்பது வரை அனைத்தும் ஒருங்கிணைப்பாளரின் பொறுப்பு. அந்த சமயங்களில் இந்தப் பணிகளை திரு. நரேந்திர மோடி மிகத் துல்லியமாக செய்து முடித்தார்.  முதலமைச்சராக இருந்தபோது கூட அவர் பல யாத்திரைகளை மேற்கொண்டார். விவேகானந்த யுவ விகாஸ் யாத்திரை மிகச் சமீபத்தில் நடத்தப்பட்டது. 2012ல் குஜராத் முழுவதும் பயணித்து மக்களிடையே சுவாமி விவேகானந்தரின் செய்திகளைப் பரப்பினார்.

namo-organiser-in10

விவேகானந்தர் யுவ விகா ஸ் யாத்திரை தொடங்குகிறார் திரு. நரேந்திர மோடி

குஜராத்துக்கு அப்பால்: வட இந்தியாவிலும் வெற்றி

1995ம் ஆண்டு நரேந்திர மோடி பா.ஜ.க. -வின் தேசிய செயலாளராக தில்லிக்கு அனுப்பப்பட்டார். வட இந்திய மாநிலங்களான ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், அரியானா மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. இந்த அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க. -வின் நிலை பலவீனமாகவே இருந்தது. ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் 15 ஆண்டுகளுக்கு கடுமையான போராட்டம் காணப்பட்டது. 1987 தேர்தலில் ஜம்முவில் அச்சுறுத்தல்கள் காணப்பட்டது என்றால், 1992 தேர்தல் பஞ்சாபில் எதிர்கட்சிகளால் புறக்கணிக்கப்பட்டது. அரியானா காங்கிரசின் பிடியில் இருந்தது, 1993 சட்டப்பேரவைத் தேர்தலின் போது இமாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட்டது.

namo-organiser-in11

1992ல் ஸ்ரீநகரில் தேசியக் கொடி ஏற்றுகிறார் நரேந்திர மோடி

இந்த முறை மறுபடியும் நரேந்திர மோடியின் தீவிர ஒருங்கிணைப்புத் திறன் வெளிப்பட்டது. 1996 மத்தியில் அரியானாவில் தேர்தல் நடந்தபோது பன்சிலாலின் அரியானா விகாஸ் கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி வைத்துக் கொண்டு அந்தக் கூட்டணி 44 இடங்கள் பெற்று ஆட்சியமைத்தது. பன்சிலால் முதலமைச்சர் ஆனார். 25 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க. 11 இடங்களில் வெற்றி பெற்றது. 1991 தேர்தலில் மொத்தமுள்ள 90 இடங்களில் 89 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

பத்தாண்டுகளுக்கு முன்னர் பன்சிலால் மற்றும் தேவிலால் உடன் கூட்டணி அமைத்து தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடுவதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என்ற நிலையில் சாமர்த்தியாமாக கொள்கையில் எந்தச் சமரசமும் இன்றி இது சாத்தியமானது.

ஜம்மு காஷ்மீரில் இருந்த நிலை குழப்பமானது – 1987; சர்ச்சையான சூழலில் தேர்தல் நடத்தப்பட்டு 1990 முதல் காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடத்தப்பட்டது. 1996ம் ஆண்டு இந்த மாநிலம் மீண்டும் மக்களிடம் சென்றபோது 87 இடங்களில் 58 இடங்களை மக்கள் திரு. ஃபரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு அளித்தனர். இரண்டாவது பெரிய கட்சியாக பா.ஜ.க. உருவெடுத்தது. இந்த எண்ணிக்கை 8 என்ற அளிவில்தான் இருந்தது என்ற போதிலும் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளத்தை விட அந்தக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

நரேந்திர மோடியின் பொறுப்பில் இருந்த மற்றொரு மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் வேறு ஒரு அரசியல் நிலை இருந்தது. 1990 தேர்தலின் போது மொத்தமுள்ள 68 இடங்களில் 46 இடங்களில் வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சி அமைத்திருந்த போதிலும் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் விளைவாக 1992ல் ஆட்சியை இழந்தது.1993ல் நடைபெற்ற தேர்தலில் அந்தக் கட்சி 8 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. 1998 தேர்தலில் பிஜேபி மற்றும் காங்கிரசுக்கு 31 இடங்கள் கிடைக்க முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் சுக்ராமின் இமாச்சல் விகாஸ் காங்கிரஸ் 5 இடங்களுடன் ஆட்சிக்கான பிடி அவரது கையில் இருந்தது. சுக்ராமின் ஆதரவைப் பெறுவதில் முக்கியப் பங்காற்றிய திரு. நரேந்திர மோடி அதில் வெற்றி பெற்று திரு. பிரேம் குமார் தூமல் தலைமையில் ஆட்சியை அமைத்தார். 2007ம் ஆண்டு தூமல் மீண்டும் முதலமைச்சராக அறுதிப் பெரும்பான்மை பெற்றார்.

பஞ்சாபில் அவரது வெற்றி மகத்தானதாக அமைந்தது. அகாலி தளம் பா.ஜ.க. கூட்டணி 1997  தேர்தலின் போது 117 இடங்களைப் பெற்று பெரும் வெற்றி பெற்றது. 22 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க. 18 இடங்களில் வெற்றி பெற்று 48.22 சதவீத வாக்குகளை தனதாக்கிக் கொண்டது. தேர்தலுக்கு ஓராண்டு முன் 1996ல் திரு. மோடி சண்டிகர் உள்ளாட்சித் தேர்தலில் தனது பிரச்சார இயக்கத்தைத் தொடங்கி பா.ஜ.க. விற்கு நான்கில் மூன்று பங்கு வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்தார். சண்டிகர் மாநகராட்சியில் இது குறிப்பிடத்தக்கது ஏனெனில் அங்கு பா.ஜ.க. அல்லாத அரசால் நியமிக்கப்படும் துணை நிலை ஆளுநரால் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். இதனால் திரு. நரேந்திர மோடி 1998 தேர்தலில் சண்டிகரில் மக்களவை தேர்தலுக்கு திரு. சத்யபால் சிங் ஜெயினை நிறுத்த அவரும் திரு. பவன்குமார் பன்சலைத் தோற்கடித்தார்.

namo-organiser-in12

திரு. நரேந்திர மோடியுடன் திரு. பிரகாஷ் சிங் பாதல்

ஒருங்கிணைப்பாளராக நரேந்திர மோடியின் செயல்திறன் நாடாளுமன்ற தேர்தல்களிலும் வெளிப்பட்டது குறிப்பிடத்தக்கது ஏனெனில் குஜராத்துக்கு வெளியே அவர் இருந்த காலகட்டத்தில் மூன்று மக்களவைத் தேர்தல்கள் நடந்தது.

இந்த மாநிலங்களில் அவர் பொறுப்பாளராக இருந்தபோது நடந்த முதல் தேர்தலில் பா.ஜ.க. ஜம்மு காஷ்மீரில் ஒரு இடத்திலும், அரியானாவில் நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றது. பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் ஒன்றும் கிடைக்கவில்லை. எனினும் 1999ல் ஜம்முவில் 2, இமாச்சல பிரதேசத்தில் 3, பஞ்சாபில் ஒன்று மற்றும் அரியானாவில் 3 இடங்கள் கிடைத்தது.

namo-organiser-in13

1998 அடல் பிஹாரி வாஜ்பாய் பதவி ஏற்பு விழா

1998ம் ஆண்டு நரேந்திர மோடி தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) ஆக்கப்பட்டார். தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) என்பது கட்சியின் அமைப்பு ரீதியான கட்டமைப்பில் முக்கியமான நிலையாகும். நாடு முழுவதும் உள்ள விவகாரங்கள் குறித்து கவனிக்கவேண்டும். இந்தப் பதவில் முன்பு இருந்தவர்கள் திரு.குஷாபாவ் தாக்கரே மற்றும் சுந்தர் சிங் பண்டாரி.  1999ல் அவர் பொதுச் செயலாளர் அமைப்பு ஆக இருந்தபோது தான் பா.ஜ.க. மக்களவையில் அதிகபட்சமாக 182 இடங்களை வென்றது.

2014 மக்களவைத் தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக 2013 செப்டம்பர் 13 அன்று அவர் அறிவிக்கப்பட்டார்.

namo-organiser-in14

தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக திரு. நரேந்திர மோடி அறிவிக்கப்படுகிறார்

அலுவலக வளாகத்தை சுத்தம் செய்தது முதல் பஞ்சாயத்து தேர்தல்கள் முதல் நாடாளுமன்ற தேர்தல்கள் வரை தேர்தல் பிரச்சாரத்தில் அங்கமாக இருந்தது வரை திரு மோடி கட்சி அமைப்பில் பணிகளின் பல முகங்களைப் பார்த்திருக்கிறார். அவர் தொட்ட அனைத்தும் வெற்றியைப் பெற்றுள்ளது! தொட்டதை தங்கமாக ஆக்கும் பா.ஜ.க. -வின் கைராசிக்காரர் இவர்தான் என்பதில் வியப்பில்லை

.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India’s EV Sales Surge as PM E-DRIVE Scheme Boosts Adoption and Infrastructure

Media Coverage

India’s EV Sales Surge as PM E-DRIVE Scheme Boosts Adoption and Infrastructure
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
பிரதமர் மோடியின் இதயத்தைத் தொடும் கடிதம்
December 03, 2024

திவ்யாங் (ஊனமுற்றோர்) கலைஞர் தியா கோசாய்க்கு, படைப்பாற்றலின் ஒரு தருணம் வாழ்க்கையை மாற்றும் அனுபவமாக மாறியது. அக்டோபர் 29 அன்று பிரதமர் மோடியின் வதோதரா ரோட்ஷோவின் போது, அவர் பிரதமர் மோடி மற்றும் ஸ்பெயின் அரசாங்கத்தின் தலைவரான மாண்புமிகு திரு. பெட்ரோ சான்செஸ் ஆகியோரின் ஓவியங்களை வழங்கினார். இரு தலைவர்களும் அவரது இதயப்பூர்வமான பரிசை தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டு, அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள்.

பல வாரங்களுக்குப் பிறகு, நவம்பர் 6 ஆம் தேதி, தியா தனது கலைப்படைப்பைப் பாராட்டி, ஸ்பெயின் ஜனாதிபதி மாண்புமிகு திரு. சான்செஸ் கூட அதை எப்படிப் பாராட்டினார் என்பதைப் பகிர்ந்து கொண்ட கடிதத்தைப் பிரதமர் மோடியிடம் இருந்து பெற்றார். "விக்சித் பாரத்" (வளர்ந்த பாரதம்) அமைப்பதில் இளைஞர்களின் பங்கில் நம்பிக்கையை வெளிப்படுத்தி, அர்ப்பணிப்புடன் நுண்கலைகளைத் தொடர பிரதமர் மோடி அவரை ஊக்குவித்தார். அவர் தனது தனிப்பட்ட தொடர்பை வெளிப்படுத்தி, அவரது குடும்பத்தினருக்கு அன்பான தீபாவளி மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மகிழ்ச்சியில் திளைத்த தியா, அந்தக் கடிதத்தை தனது பெற்றோரிடம் காட்டினார், அவர்கள் குடும்பத்திற்கு இவ்வளவு பெரிய கௌரவத்தைக் கொண்டு வந்ததற்காக மகிழ்ச்சியடைந்தனர். "எங்கள் நாட்டின் சிறிய பகுதியாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். மோடி ஜி, உங்கள் அன்பையும் ஆசிர்வாதத்தையும் எனக்கு வழங்கியதற்கு நன்றி," என்று கூறிய தியா, பிரதமரின் கடிதம் வாழ்க்கையில் தைரியமான செயல்களைச் செய்ய தன்னை ஆழமாகத் தூண்டியது, மற்றவர்களுக்கும் அவ்வாறு செய்ய அதிகாரம் அளிக்கும் என்று தெரிவித்தார்.

திவ்யாங்களுக்கு (ஊனமுற்றோர்) அதிகாரம் அளிப்பதிலும் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதிலும் பிரதமர் மோடியின் இந்தச் செய்கை அவரது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. சுகம்யா பாரத் அபியான் (இந்தியாவில் அணுகல்தன்மையை மேம்படுத்துவதற்கான பிரச்சாரம்) போன்ற பல முயற்சிகள் முதல் தியா போன்ற தனிப்பட்ட தொடர்புகள் வரை, அவர் தொடர்ந்து ஊக்கமளித்து மேம்படுத்துகிறார். இந்த ஒவ்வொரு முயற்சியும் பிரகாசமான எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கியமானது என்பதை நிரூபிக்கிறது.