அரசு முறைப் பயணமாக மொரீஷியஸ் பிரதமர் திரு நவீன் சந்திர ராம்கூலம் இந்தியா வந்துள்ளார். அவரது இந்தப் பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட முக்கிய ஒப்பந்தங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு:
1. இந்தியா- மொரீஷியஸ் இடையே அறிவியல் தொழில்நுட்பத் துறையில் இணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
2. இந்தியாவில் உள்ள தேசிய பெருங்கடல் நிறுவனம் மற்றும் மொரீஷியஸ் பெருங்கடல் நிறுவனங்களின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
3. மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் கர்மயோகி பாரத் இயக்கம்- மொரீஷியசின் பொதுச் சேவைகள் மற்றும் நிர்வாக சீர்திருத்த அமைச்சகத்திற்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்
4. மின்சாரத்துறையில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
5. இரண்டாவது கட்ட சிறு மேம்பாட்டு திட்டங்களை அமல்படுத்துவதற்காக இந்தியாவின் நிதியுதவி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்
6. நீர்நிலைகளில் அளவீடுகள் மற்றும் அதன் விவரங்கள் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் நீர்வரைவியல் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
7. விண்வெளி ஆராய்ச்சித்துறையில் தொலைத் தொடர்பு மற்றும் கண்காணிப்பு செயற்கைகோள்களை செலுத்துவதற்கான ஏவுதளத்தை நிர்மாணித்தல் மற்றும் செலுத்து வாகன தயாரிப்புக்கான ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
அறிவிப்புகள்
1.சென்னை ஐஐடி மற்றும் மொரீஷியஸ் பல்கலைக்கழகத்திற்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பித்தல்
2. பெங்களூரூவில் உள்ள தோட்டக்கலை மேலாண்மை நிறுவனம் மற்றும் மொரீஷியஸ் பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
3. மொரீஷியசில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் 17.5 மொகாவாட் உற்பத்தி திறனுடன் கூடிய சூரிய சக்தி உற்பத்திக்கான தகடுகளை நிறுவுதல். தேசிய அனல்மின் நிலையத்தின் பிரதிநிதிகள் குழு விரைவில் மொரீஷியசில் பயணம் மேற்கொண்ட பின்னர் இது தொடர்பான ஒப்பந்தம் இறுதிசெய்யப்படும்.


