.

எண்.

புரிந்துணர்வு உடன்படிக்கை/ ஒப்பந்தம்

இந்திய தரப்பு

பிரான்ஸ் தரப்பு

நோக்கம்

1.

போதை மருந்துகள், மனோவியலை பாதிக்கும் பொருட்கள் மற்றும் இரசாயன முன்னோடி பொருட்கள் மற்றும் தொடர்புடைய குற்றங்களின் சட்டவிரோத போக்குவரத்தை தடுத்தல் மற்றும் சட்டவிரோத பயன்பாட்டை தடுத்தல் குறித்து இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே ஒப்பந்தம்

திரு.ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர்

திரு.ஜீன்-யுவஸ் லீ ட்ரியன், ஐரோப்பா மற்றும் வெளிநாட்டு விவகாரத் துறை அமைச்சர்

இந்த ஒப்பந்தம் இரு நாடுகளும், சட்டவிரோத போக்குவரத்து மற்றும் போதை மருந்து நுகர்வு பயன்பாட்டை ஆகியவற்றை எதிர்கொள்ளவும், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தவும் வழிவகுக்கும்.

2.

இந்தியா-பிரான்ஸ் குடிபெயர்வு மற்றும் இடமாற்றத்திற்கான கூட்டு ஒப்பந்தம்

திருமதி.சுஷ்மா ஸ்வராஜ், வெளியுறவுத் துறை அமைச்சர்

திரு.ஜீன்-யுவஸ் லீ ட்ரியன், ஐரோப்பா மற்றும் வெளிநாட்டு விவகாரத் துறை அமைச்சர்

இந்த ஒப்பந்தம், இடமாற்றத்தைப் பொறுத்து தற்காலிக சுற்று குடிபெயர்விற்கும், தாயகத்திற்கு திறனாளர்கள் மீண்டும் திரும்புவதை ஊக்குவிக்கவும் உதவும்.

 

3.

கல்வித்தகுதிகளை பரஸ்பரம் அங்கீகரிக்கச் செய்வதற்கு இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே ஒப்பந்தம்

திரு.பிரகாஷ் ஜவடேகர்,

மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்

திருமதி.ஃப்ரட்ரிக் வீடால், உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புத் துறை அமைச்சர்

 

கல்வித் தகுதிகளை பரஸ்பரம் அங்கீகரிக்க வழிவகுப்பதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.

4.

ரயில்வே துறையில் தொழில்நுட்ப கூட்டுறவிற்காக ரயில்வே அமைச்சர் மற்றும் பிரான்ஸின், எஸ்.என்.சி.எப். மோட்டிலிட்டிஸ் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை

திரு.பியூஷ் கோயல், ரயில்வே துறை அமைச்சர்

திரு.ஜீன்-யுவஸ் லீ ட்ரியன், ஐரோப்பா மற்றும் வெளிநாட்டு விவகாரத் துறை அமைச்சர்

மிக அதிவேக மற்றும் அதிவேக ரயில்; நிலைய புனரமைப்பு, தற்போதைய செயல்பாடுகள் மற்றும் உட்கட்டமைப்புகளை நவீனமயமாக்கல்; மற்றும் புறநகர் ரயில்கள் ஆகிய முன்னுரிமை பிரிவுகளின் மீதான பரஸ்பர கூட்டுறவு மற்றும் கவனத்தை மேலும் வலுப்படுத்துவதே இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் நோக்கமாகும்.

 

5.

நிரந்தர இந்திய-பிரான்ஸ் ரயில்வே மன்றத்தை உருவாக்குவதற்கு இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே விருப்பக் கடிதம்

திரு.பியூஷ் கோயல், ரயில்வே துறை அமைச்சர்

திரு.ஜீன்-யுவஸ் லீ ட்ரியன், ஐரோப்பா மற்றும் வெளிநாட்டு விவகாரத் துறை அமைச்சர்

தற்போதுள்ள கூட்டுறவை மேலும் அதிகரிக்கும் வகையில் இந்திய-பிரான்ஸ் நிரந்தர ரயில்வே மன்றத்தை உருவாக்குவதே இந்த விருப்ப கடிதத்தின் நோக்கமாகும்.

 

 

 

6.

தங்களது ஆயுதப்படைகளுக்கு இடையே போக்குவரத்து உதவியை பரஸ்பரம் அளிப்பதற்கு இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே ஒப்பந்தம்

செல்வி.நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத் துறை அமைச்சர்

திருமதி.ஃப்ளாரன்ஸ் பார்லி, ஆயுதப்படைகள் துறை அமைச்சர்

அனுமதியுடனான துறைமுக வருகைகள், கூட்டு செயல்பாடுகள், கூட்டு பயிற்சிகள்,  மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரண நடவடிக்கைகள் போன்றவற்றின் போது இருநாட்டு ஆயுதப் படைகளுக்கு இடையே போக்குவரத்து உதவி, விநியோகம் மற்றும் சேவைகளை பரஸ்பரம் அளிப்பதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.

 

7.

சுற்றுச்சூழல் துறையில் கூட்டுறவிற்கு இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை (எம்.ஓ.யூ.)

டாக்டர். மகேஷ் ஷர்மா, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர்

திருமதி.புருனே போய்ர்சன், சுற்றுச்சூழல் மற்றும் உள்ளடக்கிய மாற்றம் அமைச்சகத்திற்கான இணை அமைச்சர்

சுற்றுச்சூழல் மற்றும் பருவகால மாற்றத் துறையில் இரு நாட்டு அரசுகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இடையே தகவல்களை பரிமாறிக்  கொள்வதற்கான தளத்தை ஏற்படுத்துவதே இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் நோக்கமாகும்.

 

8.

நிலையான நகர்ப்புற வளர்ச்சித் துறையில் கூட்டுறவிற்கு இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே ஒப்பந்தம்

திரு. ஹர்தீப் சிங் பூரி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு)

திருமதி.புருனே போய்ர்சன், சுற்றுச்சூழல் மற்றும் உள்ளடக்கிய மாற்றம் அமைச்சகத்திற்கான இணை அமைச்சர்

ஸ்மார்ட் நகர வளர்ச்சி, நகர்ப்புற பெருமளவிலான போக்குவரத்து அமைப்புகளின் மேம்பாடு, நகர்ப்புற குடியமர்த்தல் மற்றும் பயன்பாடுகள் உள்ளிட்டவற்றில் தகவல் பரிமாறி கொள்வதற்கு இந்த ஒப்பந்தம் அனுமதிக்கிறது.

 

9.

ரகசிய மற்றும் பாதுகாக்கப்பட்ட  தகவல் பரஸ்பரம் பரிமாறி கொள்வது தொடர்பாக இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே ஒப்பந்தம்

திரு.அஜித் தோவல், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

திரு.பிலிப்பி ஈட்டைனி, பிரான்ஸ் அதிபரின் தூதரக ஆலோசகர்

இரகசிய மற்றும் பாதுகாக்கப்பட்ட தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கான பொது பாதுகாப்பு வரைமுறைகளை இந்த ஒப்பந்தம் விவரிக்கிறது.

 

 

10.

கடல்சார் விழிப்புணர்வு இயக்கம் பற்றி முன் உருவாக்க ஆய்வுகளுக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.எஸ்.ஆர்.ஓ.) மற்றும் மத்திய தேசிய விண்வெளி ஆய்வுகள் (சி.என்.இ.எஸ்.) இடையே செயல்பாட்டு ஒப்பந்தம்

திரு.கே.சிவம், செயலர், விண்வெளித் துறை & தலைவர், ஐ.எஸ்.ஆர்.ஒ.

திரு.ஜீயன்-யுவஸ் லீ கால், தலைவர், சி.என்.இ.எஸ்.

தங்களது பகுதிகளில் செயற்கைக்கோள்களை கண்டறிவது,  அடையாளம் காண்பது மற்றும் கண்காணிக்கும் விவகாரத்தில் அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வை இந்த ஒப்பந்தம் அளிக்கும்.

11.

இந்திய அணுசக்தி நிறுவனம் மற்றும் இ.டீ.எப்., பிரான்ஸ் இடையே தொழில் முன்னேற்ற ஒப்பந்தம்

திரு.சேகர் பாசு, செயலர், அணுஆயுத எரிசக்தி துறை

திரு.ஜீன் பெர்னார்ட் லெவி, தலைமை செயல் அலுவலர், இ.டீ.எப்.

ஜெய்தாபூர் அணு மின்நிலைய திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான வழியை இந்த ஒப்பந்தம் பரிந்துரைக்கிறது

 

12.

நீரமைவு வரைவியல் மற்றும் கடற்சார் வரைபடவியல் துறைகளில் கூட்டுறவிற்காக இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே இருதரப்பு ஒப்பந்தம்

திரு.வினய் க்வாத்ரா, இந்திய தூதர்

திரு.அலெக்சாண்டர் ஜீக்லெர், பிரான்ஸ் தூதர்

நீரமைவு வரைவியல், கடல் ஆவணப்படுத்தல் மற்றும் கடல்சார் பாதுகாப்பு தகவல் துறையில் இருதரப்புகளுக்கு இடையேயான கூட்டுறவை இந்த ஒப்பந்தம் ஊக்குவிக்கும்.

 

13.

இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே சவாலான செயல்முறை மூலம் ஸ்மார்ட் நகர் திட்டங்களுக்கு 100 மில்லியன் ஈரோக்களுக்கான கடன் வசதி ஒப்பந்தம்

திரு.வினய் க்வாத்ரா, இந்திய தூதர்

திரு.அலெக்சாண்டர் ஜீக்லெர், பிரான்ஸ் தூதர்

ஸ்மார்ட் நகர் இயக்கத்தின் கீழான நிதி, மற்றும் இத்திட்டத்திற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் அளிக்கும் நிதியில் ஏற்படும் இடைவெளியை பூர்த்தி செய்திட இந்த ஒப்பந்தம் உதவும்.

 

 

14.

தேசிய சூரியஎரிசக்தி நிறுவனம் (என்.ஐ.எஸ்.இ.), புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தேசிய சூரியஎரிசக்தி நிறுவனம் (ஐ.என்.இ.எஸ்.), பிரான்ஸ் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை

திரு.வினய் க்வாத்ரா, இந்திய தூதர்

திரு.டேனியல் வெர்வார்டே, நிர்வாகி, அணு மற்றும் மாற்று எரிசக்தி ஆணையம் (சி.இ.ஏ.)

இந்த ஒப்பந்தத்தினால், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் கூட்டு நடவடிக்கைகள் மூலம் சூரிய எரிசச்தி துறைகளில் (சூரியவொளி மின்னழுத்தம், சேமிப்பு தொழில்நுட்பங்கள், போன்றவை)  ஐ.எஸ்.ஏ. உறுப்பு நாடுகளில் உள்ள திட்டங்களில் இரு நாடுகளும் பணியாற்றும்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Rabi acreage tops normal levels for most crops till January 9, shows data

Media Coverage

Rabi acreage tops normal levels for most crops till January 9, shows data
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜனவரி 13, 2026
January 13, 2026

Empowering India Holistically: PM Modi's Reforms Driving Rural Access, Exports, Infrastructure, and Global Excellence