ஜெனரல் பிபின் ராவத் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். “தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் நாம் இழந்துள்ள ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவத்தின் இதர வீரர்களுக்கு நான் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்கள் இந்தியாவுக்கு உச்சநிலை உறுதியுடன் சேவை செய்துள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பங்களே எனது எண்ணத்தில் உள்ளன.”

ஜெனரல் பிபின் ராவத் இணையற்ற வீரராகத் திகழ்ந்தவர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். “உண்மையான தேசபக்தராகிய அவர் நமது ராணுவத்தையும், பாதுகாப்புத் தளவாடங்களையும் நவீனமாக்குவதற்கு மகத்தான பங்களிப்பை செய்திருக்கிறார். ராணுவ ரீதியான விஷயங்களில் அவரது மதிநுட்பமும், கண்ணோட்டங்களும் பாராட்டும்படியாக இருந்தன. அவரது மறைவு எனக்கு ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓம் சாந்தி”, என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி மேலும் கூறியிருப்பதாவது: “இந்தியாவின் முதலாவது முப்படைகளி்ன் தலைமைத் தளபதியான ஜெனரல் பிபின் ராவத், பாதுகாப்புத் துறை சீர்திருத்தங்கள் உட்பட நமது ராணுவம் தொடர்பான பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ளார். ராணுவத்தில் பணியாற்றிய மிக உயர்ந்த அனுபவத்தை அவர் தம்முடன் கொண்டு வந்தார். பாராட்டத்தக்க அவரது சேவையை இந்தியா ஒருபோதும் மறவாது”.

Explore More
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Unveiling India’s market magnetism: Why international brands flock to expand amidst rising opportunities

Media Coverage

Unveiling India’s market magnetism: Why international brands flock to expand amidst rising opportunities
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 16, 2024
June 16, 2024

PM Modi becomes synonymous with Viksit Bharat at home and abroad