பிரதமர் திரு நரேந்திர மோடி, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) பிறந்த தினத்தையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
இது தொடர்பாக பிரதமர் விடுத்துள்ள அறிக்கையில், எம்.ஜி.ஆரின் தமிழ்நாட்டின் சமூக-பொருளாதார மேம்பாட்டில் அவரது மகத்தான பங்களிப்பு குறித்தும், தமிழ் கலாச்சாரத்தை உலக அரங்கிற்குக் கொண்டு சென்றதில் அவரது சீரிய முயற்சிகள் குறித்தும் எடுத்துரைத்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“தனித்துவமிக்க பண்பு கொண்ட எம்.ஜி.ஆரின் பிறந்த தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. தமிழ் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்தியதில் அவரது பங்களிப்பு சமஅளவில் குறிப்பிடத்தக்கது. நமது சமூக முன்னேற்றத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாம் எப்போதும் தொடர்ந்து பணியாற்றுவோம்.”
Paying homage to the exceptional MGR on his Jayanti. His contribution to Tamil Nadu's progress is outstanding. Equally noteworthy is his role in popularising Tamil culture. We will always keep working to realise his vision for our society. pic.twitter.com/M1Ly6uA8U1
— Narendra Modi (@narendramodi) January 17, 2026
“எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பு மகத்தானது. தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்துவதிலும் அவரது பங்கு அதே அளவுக்குக் குறிப்பிடத்தக்கது. சமூகத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாங்கள் எப்போதும் பாடுபடுவோம்.”
எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பு மகத்தானது. தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்துவதிலும் அவரது பங்கு அதே அளவுக்குக் குறிப்பிடத்தக்கது. சமூகத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாங்கள் எப்போதும்… pic.twitter.com/w0IERRalH7
— Narendra Modi (@narendramodi) January 17, 2026


