2047ல் வளர்ந்த இந்தியாவுக்கான பாதை தன்னம்பிக்கையின் மூலம் செல்கிறது: மன் கீ பாத்தில் (மனதின் குரல்) பிரதமர் மோடி

July 27th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை, தேசத்தின் வெற்றிகள், நாட்டுமக்களின் சாதனைகள் பற்றி பேச இருக்கிறோம். கடந்த சில வாரங்களில், அது விளையாட்டுக்களாகட்டும், அறிவியலாகட்டும், கலாச்சாரமாகட்டும்…… நடைபெற்றிருக்கின்ற பல விஷயங்கள் பாரதநாட்டவர்களுக்குப் பெருமை சேர்த்திருக்கின்றன. தற்போது தான் சுபான்ஷு சுக்லா அவர்கள் விண்வெளிப்பயணத்தை நிறைவு செய்து திரும்பியிருப்பது குறித்து நாடெங்கும் பேசப்பட்டு வருகிறது. சுபான்ஷு அவர்கள் தரையைத் தொட்ட போது, மக்கள் உற்சாகமடைந்தார்கள், அனைவர் இதயங்களிலும் சந்தோஷத்தின் திவலைகள் தாண்டவமாடின. தேசமே பெருமிதத்தில் பொங்கியது. ஆகஸ்ட் மாதம் 2023ஆம் தேதியன்று சந்திரயான் – 3 வெற்றிகரமாகத் தரையிறங்கிய வேளையில் தேசத்தில் ஒரு புதிய, அலாதியான சூழல் நிலவியது எனக்கு நினைவிருக்கிறது. அறிவியல் பற்றியும், விண்வெளி குறித்தும் சிறார்கள் மனதிலே புதியதொரு ஆர்வம் துளிர்த்தது. நாங்களும் விண்வெளிக்குப் பயணிப்போம், நாங்களும் நிலவில் கால் பதிப்போம்-விண்வெளி விஞ்ஞானியாக ஆவோம் என்று இப்போதெல்லாம் சின்னச்சின்ன பிள்ளைகளும் கூறி வருகிறார்கள்.

யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் ‘இந்தியாவின் மராட்டிய ராணுவ நிலப்பரப்புகள்’ இடம்பெற்றுள்ளதற்குப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

July 12th, 09:23 am

இந்தியாவின் மராட்டிய ராணுவ நிலப்பரப்புகள் மதிப்புமிக்க யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.