பகிர்ந்து
 
Comments

மத்திய நிதி பெறும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கழகங்களுடன் கலந்துரையாடியப்பின், இந்த கூட்டத்தில் நாட்டின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தெரிவித்த விவரங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி, பகிர்ந்து கொண்டார். 

பெங்களூரு ஐஐஎஸ்சி, மும்பை ஐஐடி, சென்னை ஐஐடி, கான்பூர் ஐஐடி பற்றி சுட்டுரையிலும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் வெளிட்ட சுட்டுரைகளில் கூறியதாவது:

முன்னணி ஐஐடிக்கள் மற்றும் பெங்களூரு ஐஐஎஸ்சி இயக்குனர்களுடன் சிறப்பான கலந்துரையாடல் நடந்தது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புத்தாக்கம் மற்றும் இளைஞர்கள் இடையே அறிவியலை பிரபலப்படுத்துவது உட்பட பல விஷயங்கள் குறித்து நாங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம்.

ரோபோடிக்ஸ் துறையில் முக்கிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள், கணிதம்/அறிவியல் ஆசிரியர்களுக்கான பயிற்சி, கொவிட்-19 பணி குறித்த சுவாரஸ்ய விஷயங்களை பெங்களூரு ஐஐஎஸ்சி குழுவினர் பகிர்ந்து கொண்டனர். தற்சார்பு இந்தியா தொலைநோக்கில், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர்.

நைட்ரஜன் உற்பத்தி கருவியை ஆக்ஸிஜன் உற்பத்தி கருவியாக மாற்றுவதில் உள்ள தொழில்நுட்பத்தில் மும்பை ஐஐடியின் விரிவான பணி, புற்றுநோயை குணப்படுத்த செல் சிகிச்சை, LASE புத்தாக்க திட்டம் தொடங்கியது, டிஜிட்டல் சுகாதாரத்தில் முதுநிலை படிப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் விவரங்களை அறிந்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். 

தற்காலிக மருத்துவ கூடாரங்கள், தொற்று பாதிப்பு அதிகம் உள்ள இடங்களை கண்டறிதல் போன்ற கொவிட் குறைப்பு முயற்சிகள், பல் இயல்  ஆராய்ச்சி, புரோகிராமிங் மற்றும் தரவு அறிவியலில் ஆன்லைன் பிஎஸ்சி படிப்புகள் பற்றி சென்னை ஐஐடி குழு பேசியது. 

எதிர்கால ஆராய்ச்சி மையமாக கான்பூர் ஐஐடி மாறியது, பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் புத்தாக்கம், காற்றின் தரத்தை கண்காணிப்பது, மின்னணு எரிபொருள் செலுத்துதல் மற்றும் பல விஷயங்களை பார்க்க பெருமிதமாக இருந்தது.

தொடக்க நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் ஆதரவு, தொழில் நிபுணர்களின்  மேம்பாடு, ஆகியவை நாட்டின் இளைஞர் சக்திக்கு மிகுந்த பயனளிக்கும்.

இந்த கூட்டத்தின் விவரங்களை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கலாம் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1733638

20 ஆண்டுகள் சேவை மற்றும் அர்ப்பணிப்பை வரையறுக்கும் 20 படங்கள்
Explore More
’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
Reading the letter from PM Modi para-swimmer and author of “Swimming Against the Tide” Madhavi Latha Prathigudupu, gets emotional

Media Coverage

Reading the letter from PM Modi para-swimmer and author of “Swimming Against the Tide” Madhavi Latha Prathigudupu, gets emotional
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM expresses grief over the tragedy due to fire in Kullu, Himachal Pradesh
October 27, 2021
பகிர்ந்து
 
Comments

The Prime Minister, Shri Narendra Modi has expressed deep grief for the families affected due to the fire tragedy in Kullu, Himachal Pradesh. The Prime Minister has also said that the state government and local administration are engaged in relief and rescue work with full readiness.

In a tweet, the Prime Minister said;

"हिमाचल प्रदेश के कुल्लू में हुआ अग्निकांड अत्यंत दुखद है। ऐतिहासिक मलाणा गांव में हुई इस त्रासदी के सभी पीड़ित परिवारों के प्रति मैं अपनी संवेदना व्यक्त करता हूं। राज्य सरकार और स्थानीय प्रशासन राहत और बचाव के काम में पूरी तत्परता से जुटे हैं।"