பகிர்ந்து
 
Comments

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 8-வது தவணை நிதியை, பிரதமர் திரு நரேந்திர மோடி மே 14-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக விடுவிக்கவிருக்கிறார். இதன்படி 9.5 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு சுமார் ரூ. 19,000 கோடி அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும். இந்த நிகழ்ச்சியின்போது விவசாய பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடலிலும் ஈடுபடுவார். மத்திய வேளாண் அமைச்சரும் இந்த விழாவில் கலந்து கொள்வார்.

பிரதமர் கிசான் திட்டத்தைப் பற்றி:

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும். இந்தத் திட்டத்தில் இதுவரை ரூ. 1.15 லட்சம் கோடி நிதி உதவி, விவசாயக் குடும்பங்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

Modi Govt's #7YearsOfSeva
Explore More
’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
India's total FDI inflow rises 38% year-on-year to $6.24 billion in April

Media Coverage

India's total FDI inflow rises 38% year-on-year to $6.24 billion in April
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
திரு ஜகன்நாத்ராவ் ஜோஷியின் 101-வது பிறந்த நாளில் பிரதமர் அஞ்சலி
June 23, 2021
பகிர்ந்து
 
Comments

பாரதிய ஜன சங்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் திரு ஜகன்நாத்ராவ் ஜோஷியின் 101-வது பிறந்த நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

“திரு ஜகன்நாத்ராவ் ஜோஷி அவர்களின் 101-வது பிறந்த நாளில் அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். சிறந்த ஒருங்கிணைப்பாளரான ஜகன்நாத்ராவ் அவர்கள் மக்களுக்காக ஓய்வில்லாமல் உழைத்தார். ஜன சங்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்த அவர் ஆற்றிய பங்கு பெரிதும் போற்றப்படுகிறது.

சிறந்த அறிஞர் மற்றும் அறிவுஜீவியாகவும் அவர் விளங்கினார்,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.