பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜனவரி 31-ந்தேதி மாலை 4.30 மணியளவில், 30-வது தேசிய மகளிர் ஆணைய தின நிகழ்ச்சியில் காணொலி மூலம் உரையாற்றுகிறார். பல்வேறு துறைகளில் பெண் சாதனையாளர்களைப் போற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்த நிகழ்ச்சியின் கருப்பொருள் ‘அவள் மாற்றத்தை ஏற்படுத்துபவள்’ என்பதாகும்.
மாநில மகளிர் ஆணையங்கள், மாநில அரசுகளின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறைகள், பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள், பெண் தொழில்முனைவோர், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சரும் கலந்து கொள்வார்.