பகிர்ந்து
 
Comments

சூரத்தில் அமைந்துள்ள நவீன பன்னோக்கு மருத்துவமனையான ரசிலாபென் செவந்திலால் ஷா வீனஸ் மருத்துவமனையை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். இந்த மருத்துவமனை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு சேவை செய்யவுள்ளது தனக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் கூறினார்.

பொது கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க தனது அரசு பாடுபட்டு வருவதாகக் கூறினார். ஏழை மக்களுக்காக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து அவர் எடுத்துரைத்தார். பிரதமர் மகப்பேறு நலத் திட்டம், இந்திரதனுஷ் இயக்கம் போன்ற திட்டங்கள் இறப்பு விகிதத்தை குறைப்பதில் பெரும் பங்கு வகித்துள்ளதாக பிரதமர் கூறினார்.

செங்கோட்டையில் தூய்மை இந்தியா திட்டத்தை அறிவிக்கும் போது, பிரதமரை கேலி செய்தவர்களுக்கு சரியான பதிலடி அளிக்கும் வகையில், இந்த சுகாதார இயக்கம் மூலம் இன்று 97 சதவீத மக்களுக்கு தூய்மையான கழிப்பறை வசதி கிடைத்துள்ளது என்று பிரதமர் கூறினார். சுகாதார கேடு வருமுன் காப்பதன் அவசியத்தைக் குறிப்பிட்ட பிரதமர் நல்வாழ்விற்கு யோகாவின் பங்கினை உலகம் தற்போது அங்கீகரித்துள்ளது என்றார்.

ஆயுஷ்மான் பாரத் திட்டம், முற்றிலும் புதிய சூழலை உருவாக்கி ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க உதவும் என்று பிரதமர் கூறினார். இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் புதிய மருத்துவமனைகளை அமைக்க இந்தத் திட்டம் ஊக்கம் அளிக்கும். பொது மருந்துகள் தற்போது பெருமளவு கிடப்பதினால் சுகாதார சேவை மலிவடைவோதோடு, பல விலைமதிப்பற்ற உயிர்களையும் பாதுகாக்கும் என்று பிரதமர் கூறினார்.

 

பொருளாதார ரீதியாக நலிவடைந்த சமூகத்தினருக்கான 10 சதவீத இட ஒதிக்கீட்டை முதலில் அமல்படுத்திய குஜராத் மாநிலத்திற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

நன்கொடைகள்
Explore More
’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
Under PMAY-G, India is moving towards fulfilment of a dream: Housing for all by 2022

Media Coverage

Under PMAY-G, India is moving towards fulfilment of a dream: Housing for all by 2022
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை நவம்பர் 20, 2019
November 20, 2019
பகிர்ந்து
 
Comments

Furthering the vision of Housing For All by 2022, PM Awas Yojana completes 4 Years

Pradhan Mantri Kisan Maan-Dhan Yojana (PM-KMY) gives support to Farmers across the country; More than 18 lakh farmers reap benefits of the Scheme

Citizens praise the remarkable changes happening in India due to the efforts of the Modi Govt.