பகிர்ந்து
 
Comments
பட்ஜெட் தொடர்பான, 11 இணையகருத்தரங்குகளில் பிரதமர் பங்கேற்பு
இந்த கருத்தரங்குகளில் 40 ஆயிரம் பேர் பங்கேற்பு
தொழில்முனைவோர்கள், குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள், உலகளாவிய முதலீட்டாளர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மத்திய மாநில அரசுகளுடன் இணைந்து இந்த இணைய கருதரங்குகளில் பங்கேற்றனர்
பட்ஜெட்டை திறம்பட அமல்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ள கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை மத்திய அரசு பெற்றது.
இந்த இணைய கருத்தரங்குகள் உரிமையாளர் என்ற உணர்வை ஏற்படுத்தி குறித்த காலத்தில் அமல்படுத்துவதை உறுதி செய்யவும் உதவியது

முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை தொடர்பான பட்ஜெட் அறிவிப்புகளை குறித்து ஆலோசிக்கும் இணைய கருத்தரங்கில் பிரதமர் இன்று உரையாற்றினார்.  இத்துடன் பிரதமர் உரையாற்றிய 11 பட்ஜெட் தொடர்பான இணைய கருத்தரங்கு தொடர் முடிவடைகிறது. உயர்கல்வி, ஊரக  வளர்ச்சி, வேளாண்மை, பாதுகாப்பு, சுகாதாரம், தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை, பொதுத்துறை நிர்வாகம்,  புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பொருளாதார விவகாரம், முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை ஆகிய துறைகள் தொடர்பான இணைய கருத்தரங்குகளில் பிரதமர் பங்கேற்றார்.  நாட்டின் வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்கும் பல அறிவிப்புகளை மத்திய பட்ஜெட்-2022 வெளியிட்டது. பட்ஜெட்டின் உந்துதலை பெறுவதற்கும், இதன் அமலாக்கத்தில் அனைத்து தரப்பினரின் உரிமையை உருவாக்கவும், இந்த இணைய கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.  ஸ்மார்ட்  வேளாண்மை, பிரதமரின் விரைவு சக்தி, பாதுகாப்புத்துறையில் தற்சார்பு, டிஜிட்டல் கல்வி, ஆற்றல்மிக்க திறன் மேம்பாடு, சமமான சுகாதார சேவை, மேக் இன் இந்தியா, பொருளாதாரத்துக்கான நிதி  போன்ற பல விஷயங்கள் இந்த இணையகருத்தரங்குகளில் இடம் பெற்றன.

இந்த இணைய கருத்தரங்குகள் நடத்தப்பட்டதின் முக்கிய நோக்கம், பட்ஜெட்டுக்கு அனைத்து தரப்பினர் இடையே உரிமை என்ற உணர்வை உருவாக்குவதாக இருந்தது.  இந்த கருத்தரங்கு, புதிய நிதியாண்டு தொடங்கியதும், அனைத்து துறைகளும் தங்கள் திட்டங்களை உடனே செயல்படுத்த உதவும். பல தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட ஆலோசனை, அவர்களின் நடைமுறை, உலகளாவிய நிபுணத்துவத்தை  கொண்டு வரவும், குறைபாடுகளை அடையாளம் காணவும் உதவுகிறது.   பட்ஜெட் தாக்கலை பிப்ரவரி 1ம் தேதிக்கு மாற்றியது மற்றும் இணையகருத்தரங்குகளில் இந்த கலந்துரையாடல்கள் மூலம் மாநில அரசுகள் தங்கள் பட்ஜெட்டுகளை தெளிவாக திட்டமிட முடியும்.

இந்த இணைய கருத்தரங்குகளில் தொழில்முனைவோர்கள், குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள், உலகளாவிய முதலீட்டாளர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களைச் சேர்ந்த இளைஞர்கள் , மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதிகள்  என சுமார் 40 ஆயிரம் பேர் பங்கேற்றனர். ஒவ்வொரு கருத்தரங்கிலும் விரிவான குழு ஆலோசனைகள் மற்றும் கருப்பொருள் அடிப்படையிலான அமர்வுகள் நடத்தப்பட்டன. இந்த இணையகருத்தரங்குகளின் போது, மதிப்பு மிக்க ஏராளமான ஆலோசனைகள் பெறப்பட்டன. இது பட்ஜெட் அறிவிப்புகளை திறம்பட அமல்படுத்த உதவும்.

 

Explore More
76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை

பிரபலமான பேச்சுகள்

76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை
Phone exports more than double YoY in April-October

Media Coverage

Phone exports more than double YoY in April-October
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM applauds those who are displaying their products on GeM platform
November 29, 2022
பகிர்ந்து
 
Comments
GeM platform crosses Rs. 1 Lakh crore Gross Merchandise value

The Prime Minister, Shri Narendra Modi has applauded the vendors for displaying their products on GeM platform.

The GeM platform crosses Rs. 1 Lakh crore Gross Merchandise value till 29th November 2022 for the financial year 2022-2023.

In a reply to a tweet by Union Minister, Shri Piyush Goyal, the Prime Minister tweeted;

"Excellent news! @GeM_India is a game changer when it comes to showcasing India’s entrepreneurial zeal and furthering transparency. I laud all those who are displaying their products on this platform and urge others to do the same."