பகிர்ந்து
 
Comments
Highest ever Fair and Remunerative Price of 290 Rs/qtl approved for Sugarcane Farmers (GannaKisan)
Decision will benefit the 5 crore sugarcane farmers (GannaKisan) and their dependents, as well as the 5 lakh workers employed in the sugar mills and related ancillary activities
Decision balances consumer interest & sugarcane farmers interest

கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, 2021-22 கரும்புப் பருவத்திற்கு (அக்டோபர் -செப்டம்பர்) சர்க்கரை ஆலைகள் அளிக்கும் கரும்புக்கான நியாயமான மற்றும் லாபகரமான விலைக்கு (எஃப் ஆர் பி) பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி கரும்பின் எஃப் ஆர் பி, அடிப்படை மீட்பு விகிதம் 10% உடன் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 290 வழங்கப்படும். மீட்பு விகிதம் 10%க்கு மேல் அதிகரித்தால் ஒவ்வொரு சதவிகிதத்திற்கும் ஒவ்வொரு குவின்டாலுக்கும் 0.1% அதிகமாக அதாவது குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2.90 கூடுதல் தொகை அளிக்கப்படும்.

விகிதம் குறைய நேரிட்டால், ஒவ்வொரு குவிண்டாலுக்கும் 0.1% குறைவாக, அதாவது எஃப் ஆர் பி  விலையிலிருந்து ரூ. 2.90  குறைவாக வழங்கப்படும். 9.5%க்கு குறைவாக உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு விலை குறைக்கப்படாது என்ற முடிவின் மூலம் விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் அரசின் ஆக்கபூர்வமான அணுகுமுறை வெளிப்படுகிறது. அத்தகைய விவசாயிகள் கரும்பு பருவம் 2021- 22 இல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 275.50 பெறுவார்கள். தற்போதைய கரும்பு பருவம் 2020-21 இல் இந்தத் தொகை ரூ. 270.75 ஆக உள்ளது.

கரும்பு பருவம் 2021-22 க்கான உற்பத்தித் தொகை, குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 155 ஆகும். 10% மீட்பு விகிதத்துடன் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 290 என்ற இந்த எஃப் ஆர் பி, உற்பத்தி தொகையைவிட 87.1% அதிகம். இதன் வாயிலாக தங்கள் தொகையையும் விட கூடுதலாக 50% மீட்புத் தொகையை விவசாயிகள் பெறுவார்கள்.

தற்போதைய கரும்பு பருவம் 2020-21 இல் ரூ. 91,000 கோடி மதிப்பில் 2,976 லட்சம் டன் கரும்புகளை சர்க்கரை ஆலைகள் கொள்முதல் செய்துள்ளன. இதுவரையிலான கொள்முதலில் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமானது. குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல்லுக்கு அடுத்தபடியாக கரும்பு அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கரும்பு பருவம் 2021-22- ல் கரும்பின் உற்பத்தி அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சுமார் 3,088 லட்சம் டன் கரும்புகள் சர்க்கரை ஆலைகளால் கொள்முதல் செய்யப்படக்கூடும். கரும்பு விவசாயிகளுக்கு சுமார் ரூ. 1,00,000 கோடி கிடைக்கும். விவசாயிகளுக்கு உகந்த நடவடிக்கைகளின் வாயிலாக, உரிய காலத்தில் கரும்பு விவசாயிகளுக்கான தொகை அவர்களுக்கு வழங்கப்படுவதை அரசு உறுதி செய்யும்.

கரும்பு பருவம் 2021-22 இல் (அக்டோபர் 1, 2021 முதல் அமலுக்கு வருகிறது) சர்க்கரை ஆலைகள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் கரும்புகளுக்கு, அனுமதி அளிக்கப்பட்டுள்ள நியாயமான மற்றும் லாபகரமான விலையில் கரும்புகள் வழங்கப்படும். சுமார் 5 கோடி கரும்பு விவசாயிகள் மற்றும் அவர்களைச் சார்ந்தோரின் வாழ்வாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய வேளாண் அடிப்படையிலான துறையாக கரும்புத் துறை விளங்குகிறது. சுமார் 5 லட்சம் பணியாளர்கள் சர்க்கரை ஆலைகளில் நேரடியாக பணியாற்றுவதோடு ஏராளமானோர், வேளாண் தொழில் மற்றும் போக்குவரத்து சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Explore More
76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை

பிரபலமான பேச்சுகள்

76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை
Banking sector recovery has given leg up to GDP growth

Media Coverage

Banking sector recovery has given leg up to GDP growth
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 5, 2023
June 05, 2023
பகிர்ந்து
 
Comments

A New Era of Growth & Development in India with the Modi Government