Assam has picked up a new momentum of development: PM Modi at the foundation stone laying of Ammonia-Urea Fertilizer Project in Namrup

December 21st, 04:25 pm

In a major boost to the agricultural sector, PM Modi laid the foundation stone of Ammonia-Urea Fertilizer Project at Namrup in Assam. He highlighted the start of new industries, the creation of modern infrastructure, semiconductor manufacturing, new opportunities in agriculture, the advancement of tea gardens and their workers as well as the growing potential of tourism in Assam. The PM reiterated his commitment to preserving Assam’s identity and culture.

அசாம் மாநிலம் நம்ரூப்பில் உரத் தொழிற்சாலைக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்

December 21st, 12:00 pm

அசாம் மாநிலம் திப்ரூகரில் உள்ள நம்ரூப்பில், அசாம் பள்ளத்தாக்கு உர- வேதியியல் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்படும் அமோனியா-யூரியா உரத் தொழிற்சாலைத் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (21.12.2025) அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் உரையாற்றிய திரு நரேந்திர மோடி, இது சாவோலுங் சுகபா, மகாவீர் லச்சித் போர்புகான் போன்ற சிறந்த வீரர்களின் பூமி என்று குறிப்பிட்டார். பீம்பர் டியூரி, ஷாஹீத் குஷால் குன்வர், மோரன் மன்னர் போடோசா, மாலதி மேம், இந்திரா மிரி, ஸ்வர்கதேவ் சர்பானந்த சிங் மற்றும் வீரம் மிக்க சதி சாதனி ஆகியோரின் பங்களிப்புகளையும் அவர் எடுத்துரைத்தார். அசாம் புனித மண்ணுக்கு தலைவணங்குவதாக பிரதமர் கூறினார்.

சுதேசி தயாரிப்புகள், உள்ளூர் மக்களுக்கான குரல்: பிரதமர் மோடியின் ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பண்டிகை அழைப்பு.

September 28th, 11:00 am

இந்த மாத ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) உரையில், பகத் சிங் மற்றும் லதா மங்கேஷ்கரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்திய கலாச்சாரம், பெண்களுக்கு அதிகாரமளித்தல், நாடு முழுவதும் கொண்டாடப்படும் பல்வேறு பண்டிகைகள், ஆர்எஸ்எஸ்ஸின் 100 ஆண்டு பயணம், தூய்மை மற்றும் காதி விற்பனையில் ஏற்பட்ட எழுச்சி போன்ற முக்கிய தலைப்புகள் குறித்தும் அவர் பேசினார். நாட்டை தன்னிறைவு பெறுவதற்கான பாதை சுதேசியை ஏற்றுக்கொள்வதில் உள்ளது என்பதை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.

பிரபல பாடகர் ஜுபீன் கார்க்கின் திடீர் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

September 19th, 06:26 pm

பிரபல பாடகர் ஜுபீன் கார்க்கின் திடீர் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இசைத்துறையில் அவரது சீரிய பங்களிப்பிற்காக அவர் என்றும் நினைவு கூரப்படுவார் என்று திரு மோடி குறிப்பிட்டார்.