Yoga is the best way to maintain a healthy lifestyle with minimal expense: PM Modi at World Yogasana Championship in Ahmedabad
June 04th, 06:41 pm
PM Modi inaugurated the first World Yogasana Championship in Ahmedabad, calling yoga India’s timeless gift to humanity and expressing confidence that Yogasana will gain recognition as a competitive sport in global multi-sport events, including the Olympics. Highlighting yoga’s role in health, wellness and healthy ageing, he urged participants to become ambassadors of the ‘Yoga 365’ campaign and spread yoga’s message worldwide.முதலாவது உலக யோகாசன சாம்பியன் போட்டியை அகமதாபாத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
June 04th, 06:40 pm
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று முதலாவது உலக யோகாசன சாம்பியன் போட்டியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார். இதன் மூலம் உலக விளையாட்டு வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளதாகப் பிரதமர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இந்தத் தொடக்க விழாவில் பங்கேற்க வந்துள்ள சர்வதேச விளையாட்டு வீரர்களை வரவேற்ற அவர், யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகரமான அகமதாபாத்தில் இந்த போட்டி நடைபெறுவது ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை அளிக்கும் விஷயமாகும் என்றார். ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக நடைபெறும் இந்த சாம்பியன் போட்டி, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வின் இரட்டிப்பு பலனை நமக்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இம்முறை சர்வதேச யோகா தினத்தின் முதன்மை நிகழ்வு மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான கொல்கத்தாவில் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.