மனதின் குரல் நிகழ்ச்சியின் 123-வது அத்தியாயத்தில், 29.06.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
June 29th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, ஒருவர் புனித யாத்திரையாகப் புறப்படும் போது, ஒரே உணர்வு முதன்மையாக மனதில் எழும் – அது என்னவென்றால், ஒருவழியாக கடவுள் அழைத்துவிட்டார் என்பது தான். இந்த உணர்வுதான் நம்முடைய சமயப் பயணங்களின் ஆன்மாவாக விளங்குகிறது. இந்தப் பயணங்கள் உடலின் ஒழுங்குமுறைக்கும், மனதைச் சுத்தப்படுத்துவதற்கும், பரஸ்பர அன்பு, சகோதரத்துவம், இறைவனோடு ஒன்றிணையவுமான ஊடகமாக இருக்கின்றன. இவை தவிர, இந்த யாத்திரைகளின் ஒரு மிகப்பெரிய கோணம் இருக்கிறது. இந்த சமயப்பயணங்கள், சேவைக்கான சந்தர்ப்பங்களின் மாபெரும் நெறியாகவும் ஆகின்றது. எந்தவொரு பயணம் என்றாலும், எத்தனை நபர்கள் யாத்திரையை மேற்கொள்கிறார்களோ, அதைவிட அதிகமானவர்கள் இந்த தீர்த்தயாத்திரீகர்களுக்கு சேவைபுரியும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். பல இடங்களில் உணவிடங்களும், அன்னதானக் கூடங்களும் அமைக்கப்படுகின்றன. குடிநீர்ப் பந்தல்களை தெருவோரங்களில் மக்கள் அமைக்கிறார்கள். சேவை உணர்வோடு மருத்துவ முகாம்களும், இன்னபிற வசதிகளும் அமைக்கப்படுகின்றன. ஏராளமானவர்கள் தங்கள் பணத்தில் தீர்த்தயாத்திரை மேற்கொள்வோருக்கு தர்ம சத்திரங்களையும், அவர்கள் தங்கி இளைப்பாற அமைப்புகளையும் ஏற்படுத்துகிறார்கள்.பிரதமர் திரு நரேந்திர மோடி மொரீஷியஸ் பிரதமருடன் இருநாட்டு நட்புறவை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்
June 24th, 09:54 pm
மொரீஷியஸ் குடியரசின் பிரதமர் டாக்டர் நவின்சந்திர ராம்கூலத்துடன், பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசி மூலம் கலந்துரையாடினார்.உலக சுகாதார கூட்டமைப்பின் 78-வது அமர்வில் பிரதமர் ஆற்றிய உரை
May 20th, 04:42 pm
மேன்மை தங்கியவர்களே மற்றும் பிரதிநிதிகளே, வணக்கம். உலக சுகாதார கூட்டமைப்பின் 78-வது அமர்வில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார கூட்டமைப்பின் 78-வது அமர்வில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார்
May 20th, 04:00 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார கூட்டமைப்பின் 78-வது அமர்வில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்த ஆண்டின் கருப்பொருளான 'ஆரோக்கியத்திற்கான ஒரு உலகம்' என்பதை எடுத்துரைத்து, அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும் அது இந்தியாவின் உலகளாவிய சுகாதாரத்திற்கான தொலைநோக்குப் பார்வையுடன் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார். 2023-ம் ஆண்டு உலக சுகாதார கூட்டமைப்பில் 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' பற்றி அவர் பேசியதை அவர் நினைவு கூர்ந்தார். ஆரோக்கியமான உலகின் எதிர்காலம் உள்ளடக்கம், ஒருங்கிணைந்த தொலைநோக்கு மற்றும் ஒத்துழைப்பைச் சார்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.