ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும் பிரபல தடகள வீராங்கனையுமான கர்ணம் மல்லேஸ்வரி பிரதமரை சந்தித்தார்
April 15th, 09:54 am
ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும் பிரபல தடகள வீராங்கனையுமான கர்ணம் மல்லேஸ்வரி யமுனா நகரில் பிரதமர் திரு. நரேந்திர மோடியை நேற்று சந்தித்தார். இளம் விளையாட்டு வீரர்களுக்கு வழிகாட்டும் அவரது முயற்சியை பிரதமர் பாராட்டினார்.நம்பமுடியாத பக்தி! ஹரியானாவைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் மோடியைச் சந்திப்பதற்காக 14 ஆண்டுகளாக வெறுங்காலுடன் நடந்து வருகிறார்
April 14th, 06:04 pm
இன்று யமுனாநகரில் நடந்த பொதுக் கூட்டத்தின் போது, பிரதமர் திரு. நரேந்திர மோடி ஹரியானாவின் கைத்தலைச் சேர்ந்த திரு. ராம்பால் காஷ்யப்பைச் சந்தித்தார். பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு, திரு. காஷ்யப் ஒரு சபதம் எடுத்திருந்தார் - நரேந்திர மோடி பிரதமராகி அவரை நேரில் சந்திக்கும் வரை காலணி அணிய மாட்டேன் என்று.ஹரியானா மாநிலம் யமுனா நகரில் வளர்ச்சித் திட்டங்களுக்கான தொடக்க மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமரின் உரை
April 14th, 12:00 pm
ஹரியானாவின் புகழ்பெற்ற முதலமைச்சர் திரு. நயப் சிங் சைனி அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களான மனோகர் லால் அவர்களே, ராவ் இந்தர்ஜித் சிங் அவர்களே, கிருஷ்ண பால் அவர்களே, ஹரியானா அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே. வாழ்த்துக்கள்.ஹரியானா மாநிலம் யமுனா நகரில் வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்
April 14th, 11:54 am
ஹரியானா மாநிலம் யமுனா நகரில் நிறைவேற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். ஹரியானா மக்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர், ஹரியானாவின் புனித பூமிக்கு மரியாதை செலுத்தினார், இது அன்னை சரஸ்வதியின் தோற்றம், மந்திரதேவியின் இருப்பிடம், பஞ்சமுகி ஹனுமான் மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட கபால்மோச்சன் சாஹிப் ஆகியோரின் இருப்பிடம் என்று அவர் கூறினார். ஹரியானா கலாச்சாரம், பக்தி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் சங்கமம் என்று அவர் விவரித்தார். பாபாசாஹேப் அம்பேத்கரின் 135-வது பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் அனைவருக்கும் தமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர், பாபா சாகேப்பின் தொலைநோக்குப் பார்வை மற்றும் உத்வேகம் ஆகியவற்றை எடுத்துரைத்து, அவை இந்தியாவின் வளர்ச்சியை நோக்கிய பயணத்தை தொடர்ந்து வழிநடத்துகின்றன என்றார்.அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, ஏப்ரல் 14 அன்று பிரதமர் ஹரியானா செல்கிறார்
April 12th, 04:48 pm
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி ஏப்ரல் 14 அன்று ஹரியானா செல்கிறார் அவர் ஹிசாரில் இருந்து அயோத்திக்கு வணிக விமானத்தை கொடியசைத்து தொடங்கி வைப்பார். ஹிசார் விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவார். பொதுக் கூட்டத்திலும் அவர் உரையாற்றுவார்.