ரியோ டி ஜெனிரோ பிரகடனம் – வளர்ச்சியை உள்ளடக்கிய நீடித்த ஆளுகைக்கான உலகளாவிய தெற்கு நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்

July 07th, 06:00 am

அனைத்து நாடுகளின் வளர்ச்சியை உள்ளடக்கிய நீடித்த நிர்வாகத்திற்கான உலகின் தென்பகுதியில் வளரும் நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் என்ற கருப்பொருளின் அடிப்படையில் , ஜூலை 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற 17-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

பிரிக்ஸ் உச்சிமாநாடு: உலகளாவிய ஆளுகை சீர்திருத்தம் குறித்த பிரதமரின் உரை

July 06th, 09:41 pm

பிரிக்ஸ் உச்சிமாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக பிரேசில் அதிபர் திரு லூலாவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரேசில் தலைமையின் கீழ், பிரிக்ஸ் உச்சி மாநாடு புதிய உத்வேகத்தையும் எழுச்சியையும் பெற்றுள்ளது. இதற்காக அந்நாட்டு அதிபரின் தொலைநோக்குப் பார்வையையும் அவரது அர்ப்பணிப்பு உணர்வையும் பாராட்டுகிறேன். பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடாக இந்தோனேசியா சேர்க்கப்பட்டதற்கு அந்நாட்டு அதிபர் திரு பிரபோவோவுக்கு இந்தியா சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரிக்ஸ் உச்சிமாநாடு: பலதரப்புவாதம், பொருளாதார-நிதிசார் விவகாரங்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை வலுப்படுத்துதல் குறித்த பிரதமரின் அறிக்கை

July 06th, 09:40 pm

பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த நண்பர்களைச் சந்திப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த மாநாட்டில் லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியாவைச் சேர்ந்த நட்பு நாடுகளுடன் எனது கருத்துக்களைப் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த பிரேசில் அதிபர் திரு லூலாவுக்கு எனது மனமார்ந்த நன்றி.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்

July 06th, 09:39 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 2025 ஜூலை 6 - 7 அன்று நடைபெறும் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இன்று பங்கேற்றார். உலகளாவிய நிர்வாக சீர்திருத்தம், உலகளாவிய வளரும் நாடுகளின் பொருளாதார கோரிக்கைகளை வலியுறுத்துதல், அமைதி மற்றும் பாதுகாப்பு, பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல், வளர்ச்சி விவகாரங்கள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பிரிக்ஸ் மாநாட்டு நிகழ்வுகளில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து தலைவர்கள் ஆக்கப்பூர்வ விவாதங்களை நடத்தினார்கள். பிரேசில் அதிபரின் அன்பான விருந்தோம்பலுக்காகவும் உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காகவும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.

டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு, நிர்வாகத்திற்கான தரவு ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதற்கும், உலக அளவில் வாழ்க்கையை மாற்றுவதற்கும் முக்கியமானதாகும்: பிரதமர்

November 20th, 05:04 am

உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதற்கும், உலகளவில் வாழ்க்கையை மாற்றியமைப்பதற்கும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு, நிர்வாகத்திற்கான தரவு ஆகியவை முக்கியமானவை என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் துவக்க நிகழ்ச்சியில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

October 23rd, 05:22 pm

பிரிக்ஸ் அமைப்பில் இணைந்துள்ள அனைத்து புதிய நண்பர்களையும் மீண்டும் ஒருமுறை அன்புடன் வரவேற்கிறேன். உலக மனிதகுலத்தில் 40 சதவீதத்தையும், உலகப் பொருளாதாரத்தில் 30 சதவீதத்தையும் பிரிக்ஸ் அமைப்பு தனது புதிய வடிவத்தில் கொண்டுள்ளது.

16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

October 23rd, 03:25 pm

இன்றைய கூட்டத்தை அற்புதமாக ஏற்பாடு செய்ததற்காக ரஷ்ய அதிபர் புதினுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

October 23rd, 03:10 pm

கசான் நகரில் ரஷ்யா தலைமையில் இன்று நடைபெற்ற 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.

இந்தியா மற்றும் அமெரிக்காவின் கூட்டு அறிக்கை

September 08th, 11:18 pm

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் நீடித்த கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று இந்தியா வந்த அமெரிக்க அதிபர் திரு ஜோ பைடன் ஜூனியரை வரவேற்றார். ஜூன் 2023 இல் வாஷிங்டன்னிற்கு பிரதமர் திரு மோடி மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தின் அடித்தள சாதனைகளை செயல்படுத்துவதற்கான கணிசமான முன்னேற்றம் குறித்து தலைவர்கள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

15-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

August 23rd, 08:57 pm

23 ஆகஸ்ட் 2023 அன்று ஜொகன்னஸ்பர்கில் தென்னாப்பிரிக்காவின் தலைமையில் நடைபெற்ற 15 வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்.

இரண்டாவது உலகளாவிய கொவிட் காணொலி உச்சிமாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

May 12th, 06:35 pm

அமெரிக்க அதிபர் ஜோசப் ஆர் பைடனின் அழைப்பை ஏற்று, இரண்டாவது உலகளாவிய கொவிட் காணொலி உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டார். ‘பெருந்தொற்று சோர்வைத் தடுப்பது மற்றும் தயார்நிலைக்கு முன்னுரிமை அளித்தல்’ என்ற கருப்பொருளில் உச்சிமாநாட்டின் துவக்க அமர்வில் பிரதமர் உரையாற்றினார்.

கூட்டறிக்கை : 6-வது இந்தியா – ஜெர்மனி அரசுகள் அளவிலான ஆலோசனைக் கூட்டம்

May 02nd, 08:28 pm

இன்று, ஜெர்மன் பிரதமர் திரு.ஒலாப் ஸ்கால்ஸ் மற்றும் பிரதமர் திரு.நரேந்திரமோடி ஆகியோரது கூட்டுத் தலைமையின்கீழ், ஜெர்மனி மற்றும் இந்திய அரசுகள், அரசாங்க அளவிலான ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தையை நிறைவு செய்துள்ளன. இருநாட்டுத் தலைவர்கள் மட்டுமின்றி, இருநாடுகளையும் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் பிற முக்கியப் பிரதிநிதிகள் அடங்கிய தூதுக் குழுவினரும் இதில் இடம்பெற்றனர்.

உலக கோவிட்-19 உச்சிமாநாட்டில் பிரதமரின் கருத்துக்கள்; தொற்றுக்கு முடிவு கட்டி, அடுத்த கட்டத்துக்கு தயாராக சிறந்த சுகாதார பாதுகாப்பைக் கட்டமைக்க வேண்டும்

September 22nd, 09:40 pm

மேதகு தலைவர்களே, கோவிட்-19 முன்னெப்போதும் கண்டிராத தடங்கலாக உருவெடுத்துள்ளது. அது இன்னும் முடிவுக்கு வரவில்லை. உலகின் பெரும் பகுதியில் இன்னும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. அதனால், சரியான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள அதிபர் பைடனின் இந்த முயற்சியை வரவேற்கிறேன்.

வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களின் தலைவர்கள்; வணிகம் மற்றும் வர்த்தகத் துறையின் பங்குதாரர்கள் ஆகியோருடன் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழ் மொழியாக்கம்

August 06th, 06:31 pm

ஏற்றுமதியை அதிகரிக்க நான்கு காரணிகள் மிக முக்கியமானவை. முதலாவதாக, நாட்டில் உற்பத்தி பன்மடங்கு அதிகரிக்க வேண்டும் அது தரமான போட்டியாக இருக்க வேண்டும். விலையை விட தரத்தில் அதிக கவனம் செலுத்தும் போக்கும் உலகில் ஒரு சாராரிடம் உருவாகி வருகிறது. இது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். இரண்டாவதாக, போக்குவரத்து சிக்கல்கள் களையப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் அமைப்புகள் இதற்கு, பங்காற்ற வேண்டும். மூன்றாவதாக, அரசாங்கம் ஏற்றுமதியாளர்களுடன் தோளோடு தோள் நடக்க வேண்டும். நான்காவதாக, இந்திய பொருட்களுக்கான சர்வதேச சந்தை. இந்த நான்கு காரணிகளும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும், அப்போதுதான் இந்தியாவின் உள்ளூர் பொருட்கள் உலகளாவியதாக இருக்கும், அப்போதுதான் உலகிற்கான இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்ற இலக்கை நாம் சிறந்த முறையில் அடைய முடியும்.

வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதர்கள் மற்றும் வர்த்தக வணிகத் துறையினருடன் பிரதமர் கலந்துரையாடினார்

August 06th, 06:30 pm

ஒரு புதிய முயற்சியாக, பிரதமர் திரு.நரேந்திர மோடி, வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதர்கள் மற்றும் வர்த்தகம் & வணிகத் துறையினருடன், காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்துரையாடினார். மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரும், இந்த கலந்துரையாடலின்போது உடனிருந்தனர். இருபதுக்கும் மேற்பட்ட அரசுத் துறைகளின் செயலாளர்கள், மாநில அரசுகளின் அதிகாரிகள், ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் மற்றும் வணிகர் பேரவை உறுப்பினர்களும் இதில் பங்கேற்றனர்.

ஜி7 உச்சிமாநாட்டின் முதல் அமர்வில் பிரதமர் பங்கேற்பு

June 12th, 11:01 pm

ஜி7 உச்சி மாநாட்டின் முதலாவது அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்துகொண்டார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் திரு ஸ்காட் மாரிசன் இடையே தொலைபேசி உரையாடல்

May 07th, 02:47 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் மேதகு. ஸ்காட் மாரிசனுடன் தொலைபேசி வாயிலாக இன்று உரையாடினார்.

Finalisation of the BRICS Counter Terrorism Strategy an important achievement: PM

November 17th, 05:03 pm

In his intervention during the BRICS virtual summit, PM Narendra Modi expressed his contentment about the finalisation of the BRICS Counter Terrorism Strategy. He said it is an important achievement and suggested that NSAs of BRICS member countries discuss a Counter Terrorism Action Plan.

12-வது பிரிக்ஸ் மெய்நிகர் உச்சிமாட்டில் பிரதமர் ஆற்றிய தொடக்க கருத்துரை

November 17th, 05:02 pm

தலைவர்களே, இந்த ஆண்டு உச்சிமாநாட்டின் கருப்பொருள்- ‘’உலக ஸ்திரத்தன்மைக்கான பிரிக்ஸ் கூட்டாண்மை, பகிரப்பட்ட பாதுகாப்பு மற்றும் புதுமையான வளர்ச்சி’’, பொருத்தமானது மட்டுமல்லாமல், தொலை நோக்கு கொண்டது. குறிப்பிடத்தக்க புவி-மூலோபாய மாற்றங்கள் உலகம் முழுவதும் நடந்து வருகிறது. அவை, ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, வளர்ச்சியில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்த மூன்று அம்சங்களிலும் பிரிக்ஸ் முக்கிய பங்கு வகிக்கும்.

12-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்தியா சார்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்பு

November 17th, 04:00 pm

ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புடின் தலைமையில் 2020 நவம்பர் 17-ஆம் தேதி அன்று நடைபெற்ற 12-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்தியாவின் சார்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டார். “உலக நிலைத்தன்மை, பகிர்ந்தளிக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் புதுமையான வளர்ச்சி” என்பது இந்த மாநாட்டின் கருப்பொருள் ஆகும். பிரேசில் அதிபர் திரு ஜேர் போல்சோனரோ, சீன அதிபர் திரு ஜி ஜின்பிங், தென்னாபிரிக்க அதிபர் திரு சிரில் ரமாபோஸா ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.