உலக வன உயிரின தினத்தையொட்டி வன உயிரினங்களை பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தி சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பகிர்ந்துள்ளார்

March 03rd, 08:56 am

உலக வன உயிரின தினம் என்பது நமது பூமியை வளமாக்கி, நமது சுற்றுச்சூழல் அமைப்புகளை நீடிக்கச் செய்யும் மகத்துவமிக்க வன உயிரினங்களின் பன்முகத்தன்மையை கொண்டாடுவது என்பதாகும். வன உயிரினங்களின் பாதுகாப்பிற்காக செயல்படும் அனைவரையும் அங்கீகரிப்பதையும் வனவாழ்விடம் தொடர்ந்து செழிக்க பாதுகாப்பு, நீடித்த நடைமுறைகள் மற்றும் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கான நமது உறுதிபாட்டை மீண்டும் உறுதிபடுத்துவதற்கான நாளாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வனஉயிரினப் பாதுகாப்பு முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு

March 03rd, 07:14 pm

வன உயிரின பாதுகாப்பில் நாட்டின் அர்ப்பணிப்பு மிக்க முயற்சிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். கடந்த பத்தாண்டுகளில், புலிகள், சிறுத்தைகள் மற்றும் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டுள்ளது. இது அதன் வளமான பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கான நாட்டின் ஆழமான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

வனஉயிரினப் பாதுகாப்பு முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு

March 03rd, 12:36 pm

வன உயிரின பாதுகாப்பில் நாட்டின் அர்ப்பணிப்பு மிக்க முயற்சிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். கடந்த பத்தாண்டுகளில், புலிகள், சிறுத்தைகள் மற்றும் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டுள்ளது. இது அதன் வளமான பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கான நாட்டின் ஆழமான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

உலக வன உயிரின தினத்தையொட்டி நமது புவியின் மகத்துவமிக்க பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்

March 03rd, 08:37 am

உலக வன உயிரின தினத்தையொட்டி இன்றைய நமது புவியின் மகத்துவமிக்க பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மனதின் குரல் நிகழ்ச்சியின் 119-வது அத்தியாயத்தில், 23.02.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

February 23rd, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் உங்களனைவரையும் வரவேற்கிறேன். இன்றைய நாட்களில் சேம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து இடங்களிலும் கிரிக்கெட்டுக்கான சூழல் நிலவி வருகிறது. கிரிக்கெட்டில் சதம் அடிப்பதில் இருக்கும் புளகாங்கிதம் என்ன என்பதை நாம் அனைவருமே நன்கறிவோம். ஆனால் இன்று நான் உங்களனைவரிடத்திலும் கிரிக்கெட்டைப் பற்றியல்ல, பாரதம் விண்வெளியில் சதம் அடித்திருப்பதைப் பற்றி உரையாட இருக்கிறேன். கடந்த மாதம் தான் இஸ்ரோ விண்ணில் செலுத்திய 100ஆவது செயற்கைக்கோளின் சாட்சியாக தேசமே இருந்தது. இது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல, மாறாக அன்றாடம் புதிய உச்சங்களைத் ஸ்பரிசிக்கும் நமது உறுதிப்பாட்டையும் அடையாளப்படுத்துகிறது. நமது விண்வெளிப்பயணப் பயணம் மிக எளிய முறையிலே தான் தொடங்கியது. இதிலே ஒவ்வோர் அடியிலும் சவால்கள் இருந்தன. ஆனால், நமது விஞ்ஞானிகள் வெற்றிக்கொடியை நாட்டியபடி தொடர்ந்து முன்னேறினார்கள். காலப்போக்கில் விண்வெளியின் இந்தப் பாய்ச்சலில் நமது வெற்றிகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகத் தொடங்கியது. ஏவுகலன் அமைப்பதாகட்டும், சந்திரயானின் வெற்றியாகட்டும், மங்கல்யானாகட்டும், ஆதித்ய எல்-1 அல்லது ஒரே ஒரு ஏவுகலன் மூலமாக, ஒரே முறையில், 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் வரலாறுகாணா செயல்பாடாகட்டும், இஸ்ரோவின் வெற்றித்தொடர் மிகவும் பெரியது. கடந்த பத்தாண்டுகளில் சுமார் 460 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றிலே மற்ற நாடுகளின் பல செயற்கைக்கோள்களும் அடங்கும். அண்மை ஆண்டுகளின் ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், விண்வெளி விஞ்ஞானிகள் கொண்ட நமது குழுவிலே பெண்சக்தியின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதுதான். இன்று விண்வெளித்துறை நமது இளைஞர்களுக்கு விருப்பமான ஒன்றாக ஆகியிருக்கிறது என்பது மிகுந்த உவகையை எனக்கு அளிக்கிறது. சில ஆண்டுகள் முன்பு வரை இந்தத் துறையில் ஸ்டார்ட் அப் குறித்தோ, தனியார் துறையின் விண்வெளி நிறுவனங்களின் எண்ணிக்கை பல நூற்றுக்கணக்காகும் என்றோ யார் தான் நினைத்தார்கள்!! வாழ்க்கையை விறுவிறுப்பான, சுவாரசியமான வகையில் அனுபவிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு, விண்வெளித்துறை ஒரு மிகச் சிறப்பான தேர்வாக ஆகி வருகிறது.

உலக வனவிலங்குகள் தினத்தை முன்னிட்டு வனவிலங்கு ஆர்வலர்களுக்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

March 03rd, 10:12 am

உலக வனவிலங்குகள் தினத்தை முன்னிட்டு வன உயிரின ஆர்வலர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வனவிலங்குகள் பாதுகாவலர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு உலக வனவிலங்குகள் தினத்தில் பிரதமர் வாழ்த்து

March 03rd, 06:50 pm

வனவிலங்குகள் பாதுகாவலர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு உலக வனவிலங்குகள் தினத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ஸ்வீடன் பிரதமர் திரு ஸ்டீபன் லோஃப்வென் இடையே மெய்நிகர் கூட்டம்

March 03rd, 09:59 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஸ்வீடன் பிரதமர் திரு ஸ்டீபன் லோஃப்வெனுடன், 2021 மார்ச் 5 ஆம் தேதி அன்று மெய்நிகர் கூட்டம் நடத்துகிறார்.