இளைஞர்களின் நலனுக்காக ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சூழல் அமைப்புகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது: பிரதமர்
June 19th, 01:57 pm
உலக அளவில் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் இந்தியா அடைந்து வரும் முன்னேற்றத்திற்கு சான்றாக க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசை 2026 அமைந்துள்ளது வரவேற்கத்தக்கது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய இளைஞர்களின் நலனுக்காக ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சூழல் அமைப்புகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக அவர் கூறினார்.கல்வித் துறையில் தரமான மாற்றங்களை ஏற்படுத்தும் தமது உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்
June 07th, 08:51 am
கல்வித் துறையில் தரமான மாற்றங்களுக்கான தனது உறுதிப்பாட்டைப் பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கியூ.எஸ் உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையில் இந்தியப் பல்கலைக்கழகங்களின் செயல்திறன் மேம்பட்டிருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.