கேலோ இந்தியா கலந்துரையாடல் நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

August 27th, 11:15 am

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (27.08.2026) காணொலிக் காட்சி மூலம் கேலோ இந்தியா கலந்துரையாடலில் பங்கேற்றார். இத்தகைய மகத்தான நிகழ்வை ஒருங்கிணைத்த அமைப்பாளர்கள், மத்திய அமைச்சரவை உறுப்பினர்கள், முதலமைச்சர்கள், லட்சக்கணக்கான 'மை பாரத்' தன்னார்வலர்கள் ஆகியோருக்குப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்தார். வரவிருக்கும் ஆகஸ்ட் 29-ம் தேதி தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுவதைக் குறிப்பிட்ட அவர், நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கும் ஒட்டுமொத்த விளையாட்டு சமூகத்திற்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த நாள், இந்தியாவின் ஒரு சிறந்த வீரரான மேஜர் தியான் சந்த்தை நினைவுகூரும் நாளாக உள்ளது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

கேலோ இந்தியா கலந்துரையாடலில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்பு

August 27th, 11:00 am

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (27.08.2026) காணொலிக் காட்சி மூலம் கேலோ இந்தியா கலந்துரையாடலில் பங்கேற்றார். இத்தகைய மகத்தான நிகழ்வை ஒருங்கிணைத்த அமைப்பாளர்கள், மத்திய அமைச்சரவை உறுப்பினர்கள், முதலமைச்சர்கள், லட்சக்கணக்கான 'மை பாரத்' தன்னார்வலர்கள் ஆகியோருக்குப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்தார். வரவிருக்கும் ஆகஸ்ட் 29-ம் தேதி தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுவதைக் குறிப்பிட்ட அவர், நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கும் ஒட்டுமொத்த விளையாட்டு சமூகத்திற்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த நாள், இந்தியாவின் ஒரு சிறந்த வீரரான மேஜர் தியான் சந்த்தை நினைவுகூரும் நாளாக உள்ளது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) என்ற தீர்மானம் நிச்சயமாக நிறைவேறும்: பிரதமர் மோடி மன் கீ பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில்

December 28th, 11:30 am

ஆண்டின் இறுதி ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில், 2025 ஆம் ஆண்டில், தேசிய பாதுகாப்பு, விளையாட்டு, அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் உலகளாவிய தளங்களில் இந்தியா தனது முத்திரையைப் பதித்ததாக பிரதமர் மோடி கூறினார். 2026 ஆம் ஆண்டில் புதிய தீர்மானங்களுடன் நாடு முன்னேறத் தயாராக உள்ளது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) இளம் தலைவர்கள் உரையாடல், வினாடி வினா போட்டி, ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2025 மற்றும் ஃபிட் இந்தியா இயக்கம் போன்ற இளைஞர்களை மையமாகக் கொண்ட முயற்சிகளையும் பிரதமர் எடுத்துரைத்தார்.

தில்லியில் நடைபெறும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி வீரர்களுக்குப் பிரதமர் வரவேற்பு

September 27th, 06:03 pm

இன்று தொடங்கும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2025-ஐ இந்தியா பெருமையுடன் புதுதில்லியில் நடத்தும் நிலையில், அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரதிநிதிகளை அன்புடன் வரவேற்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியதற்காக நாட்டு மக்களுக்கு நன்றி: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.

June 30th, 11:00 am

நண்பர்களே, நமது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது தங்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நமது நாட்டுமக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2024ஆம் ஆண்டின் தேர்தல், உலகின் மிகப்பெரிய தேர்தலாகும். உலகின் எந்த ஒரு தேசத்திலும், இத்தனை பெரிய தேர்தல் இதுவரை எப்போதும் நடந்ததில்லை. இதிலே 65 கோடி மக்கள் வாக்களித்தார்கள். நான் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்களிப்பு முறையோடு தொடர்புடைய அனைத்து பேருக்கும், இந்தக் காரணத்திற்காக பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.