உலக கல்லீரல் தினத்தன்று குடிமக்கள் கவனத்துடன் சாப்பிடுவதைக் கடைப்பிடித்து, உடல் பருமனை எதிர்த்துப் போராட பிரதமர் வலியுறுத்தியுள்ளார்
April 19th, 01:13 pm
உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு, அனைத்து குடிமக்களும் கவனத்துடன் உணவுப் பழக்கங்களை கடைப்பிடித்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். சிறிய ஆனால் தாக்கத்தை ஏற்படுத்தும் மாற்றங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், எண்ணெய் உட்கொள்ளலைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகள் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க வகையில் பங்களிக்க முடியும் என்பதை எடுத்துரைத்தார்.