With innovative ideas, energy and purpose, Yuva Shakti is at the forefront of nation-building: PM Modi
January 12th, 06:45 pm
In his address at the concluding session of the Viksit Bharat Young Leaders Dialogue 2026, PM Modi underscored the critical role of youth leadership in realising the vision of a developed India. He highlighted key reforms and initiatives such as Startup India, Digital India, Ease of Doing Business, and the simplification of tax and compliance, which accelerated India’s startup revolution. The PM encouraged the youth to move forward with confidence, expressing unwavering faith in their potential.வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் மாநாடு 2026-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
January 12th, 06:30 pm
புதுதில்லியில் இன்று (12 ஜனவரி 2026) நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் மாநாடு 2026-ன் நிறைவு அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வில், உரையாற்றிய அவர், இந்திய சுதந்திரத்தின் நூற்றாண்டான 2047 வரையிலான காலம், நாட்டிற்கும் அதன் இளைஞர்களுக்கும் மிக முக்கியமான கட்டமாகும் என்று வலியுறுத்தினார். இளம் இந்தியர்களின் ஆற்றலும், திறன்களும் இந்தியாவின் வலிமையை வடிவமைக்கும் என்றும், அவர்களின் வெற்றி, நாட்டை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும் என்றும் அவர் கூறினார். வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றவர்களை வாழ்த்திய பிரதமர், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை அடைவதில் இளைஞர்களின் தலைமையின் முக்கியப் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டினார்.ஏபிபி நெட்வொர்க் இந்தியா @2047 உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை
May 06th, 08:04 pm
இன்று காலை முதல், பாரத் மண்டபம் ஒரு துடிப்பான தளமாக மாறியுள்ளது. சில நிமிடங்களுக்கு முன்பு, உங்கள் குழுவைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த உச்சிமாநாடு பன்முகத்தன்மையால் நிறைந்துள்ளது. பல பிரமுகர்கள் இந்த உச்சிமாநாட்டை கவனம் மிக்கதாக ஆக்கியுள்ளனர். உங்கள் அனுபவமும் மிகவும் செறிவாகியிருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த உச்சிமாநாட்டில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் பெருமளவிலான பங்கேற்பு, ஒரு வகையில், அதன் தனித்துவமான அம்சமாக மாறியுள்ளது. குறிப்பாக, எங்கள் ட்ரோன் சகோதரிகள் மற்றும் லட்சாதிபதி சகோதரிகள் அனைவரையும் நான் இப்போது சந்தித்தபோது, அவர்கள் தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொண்ட உற்சாகத்தைக் காண முடிந்தது. அவர்களின் ஒவ்வொரு உரையாடலையும் அவர்கள் நினைவில் வைத்திருந்தனர். இது உண்மையிலேயே ஒரு ஊக்கமளிக்கும் சந்தர்ப்பமாக இருந்து வருகிறது.பிரதமர் திரு. நரேந்திர மோடி ஏபீபி நெட்வொர்க்கின் இந்தியா@2047 உச்சி மாநாட்டில் உரையாற்றினார்
May 06th, 08:00 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ஏபீபி நெட்வொர்க்கின் இந்தியா@2047 என்ற உச்சி மாநாட்டில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், உச்சிமாநாட்டின் வளமான பன்முகத்தன்மையை எடுத்துரைத்தார். உச்சிமாநாட்டில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் குறிப்பிடத்தக்க பங்கேற்பை அவர் எடுத்துரைத்தார்.This is the right time to Create In India, Create For The World: PM Modi at WAVES Summit
May 01st, 03:35 pm
At the inaugural address of WAVES 2025, PM Modi called it a landmark moment for the global creative community. He emphasized that the summit unites over 100 nations through storytelling, music, gaming, and innovation, showcasing India's leadership in culture and creativity.பிரதமர் திரு நரேந்திர மோடி வேவ்ஸ் 2025 உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார்
May 01st, 11:15 am
மும்பையில் உள்ள ஜியோ உலக மையத்தில் இந்தியாவின் முதலாவது உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மகாராஷ்டிரா தினம் மற்றும் குஜராத் மாநில தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்தார். அனைத்து சர்வதேச பிரமுகர்கள், தூதர்கள் மற்றும் படைப்பாற்றல் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் வந்திருப்பதை குறிப்பிட்ட பிரதமர், இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் கலைஞர்கள், புதுமைப் படைப்பாளர்கள், முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோர் திறமையையும், படைப்பாற்றலையும் கொண்ட உலகளாவிய அமைப்புக்கு அடித்தளம் அமைக்க ஒன்றிணைந்துள்ளனர் என்று அவர் கூறினார். வேவ்ஸ் என்பது ஒரு சுருக்கப்பெயர் மட்டுமே அல்ல என்றும், இது கலாச்சாரம், படைப்பாற்றல் மற்றும் உலகளாவிய தொடர்பைக் குறிக்கும் ஒரு அலை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் இந்த உச்சிமாநாடு திரைப்படங்கள், இசை, கேமிங், அனிமேஷன், கதைசொல்லல் ஆகியவற்றின் விரிவான உலகத்தை எடுத்துக்காட்டுகிறது என்று அவர் தெரிவித்தார். கலைஞர்கள் மற்றும் படைப்பாளர்களை ஒருங்கிணைக்கவும் ஒத்துழைத்து செயல்படவும் உலகளாவிய தளத்தை இது வழங்குகிறது என அவர் கூறினார். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனைவரையும் பாராட்டிய பிரதமர், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள சிறப்பு விருந்தினர்களை அன்புடன் வரவேற்றார்.நாளையும் நாளை மறுநாளும்(மே 1 மற்றும் 2-ம் தேதி பிரதமர் மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் செல்கிறார்
April 30th, 03:42 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளையும் நாளை மறுநாளும் (மே 1 மற்றும் 2-ம் தேதி) மகாராஷ்டிரா, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். மே 1-ம் தேதி மும்பை செல்லும் அவர், காலை 10.30 மணிக்கு வேவ்ஸ் உலக ஒலி-ஒளி, பொழுதுபோக்கு உச்சி மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார்.Today, India's youth are demonstrating our immense potential to the world, through their dedication and innovation: PM Modi in Rozgar Mela
April 26th, 11:23 am
PM Modi addressed the Rozgar Mela and distributed more than 51,000 appointment letters to youth. He highlighted that the government is ensuring employment and self-employment opportunities for the country's youth. The PM spoke about the immense opportunity WAVES 2025 summit offers for the youth. He recalled the mantra of ‘Nagrik Devo Bhava,’ and encouraged youth to serve every citizen of India.வேலைவாய்ப்பு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரை
April 26th, 11:00 am
இந்த பட்ஜெட்டில், 'மேக் இன் இந்தியா' முன்முயற்சியை ஊக்குவிக்கவும், இந்திய இளைஞர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை உருவாக்கும் வாய்ப்பை வழங்கவும் உற்பத்தி இயக்கத்தை அரசு அறிவித்துள்ளது: பிரதமர்நியூஸ் 18 தொலைக்காட்சி ஏற்பாடு செய்த எழுச்சிமிகு இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை
April 08th, 08:30 pm
இந்த உச்சிமாநாட்டின் மூலம் நம் நாடு மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களுடன் தொடர்பு கொள்ள எனக்கு வாய்ப்பளித்ததற்காக நியூஸ் 18 நிறுவனத்துக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு உச்சிமாநாட்டில் நாட்டில் உள்ள இளைஞர்களின் விருப்பங்களுடன் இணைத்திருப்பது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆண்டின் தொடக்கத்தில், விவேகானந்தர் பிறந்த தினத்தன்று, வளர்ச்சியடைந்த இந்தியா குறித்த இளம் தலைவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி இங்குள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளைஞர்களின் கனவுகளை மனவுறுதியின் வலிமையையும், வளர்ந்த நாடாக இந்தியாவை உருவெடுக்கச் செய்வதற்கான அவர்களது ஆர்வத்தையும் காண முடிவதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்த அமிர்த காலம் இளம் தலைமுறையினருக்கு உத்வேகத்தையும், மன வலிமையையும் அளிக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.நியூஸ் 18 தொலைக்காட்சியின் எழுச்சிமிகு இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரை
April 08th, 08:15 pm
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று நியூஸ் 18 தொலைக்காட்சியின் எழுச்சி மிகு இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த உச்சிமாநாட்டின் மூலம் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தற்காக அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்தியாவில் உள்ள இளைஞர்களின் விருப்பங்கள் மீது கவனம் செலுத்தும் வகையில் இந்த உச்சிமாநாடு நடத்தப்படுவதற்குப் பாராட்டு தெரிவித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுவாமி விவேகானந்தர் பிறந்த தினத்தன்று பாரத் மண்டபத்தில் நடைபெற்ற 'வளர்ச்சியடைந்த இந்தியாவின் தலைவர்கள் கலந்துரையாடல் என்ற நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை சுட்டிகாட்டிய அவர், இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்குவதற்கு இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், அனைத்து நிலைகளிலும் அது குறித்த தொடர் விவாதங்கள் சிறந்த சிந்தனைகளை வளர்க்க உதவும் என்று கூறினார். இது அமிர்த கால தலைமுறையினருக்கு உற்சாகமூட்டும் வகையிலும், வழிகாட்டியாகவும், திகழும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். இந்த உச்சி மாநாட்டின் வெற்றிக்கு தனது நல்வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.பொழுதுபோக்கு, படைப்பாற்றல் மற்றும் கலாச்சாரத்தை ஒன்றிணைக்கும் உலகளாவிய உச்சிமாநாடான வேவ்ஸ் ஆலோசனைக் குழுவின் விரிவான கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்
February 07th, 11:41 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் வேவ்ஸ் ஆலோசனைக் குழுவின் விரிவான கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். வேவ்ஸ் என்பது பொழுதுபோக்கு, படைப்பாற்றல் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ஒரு உலகளாவிய உச்சிமாநாடு ஆகும்.புவனேஸ்வரில் நடைபெற்ற "வளமையான ஒடிசா-ஒடிசாவில் தயாரிங்கள்" (உத்கர்ஷ் ஒடிசா-மேக் இன் ஒடிசா) மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
January 28th, 11:30 am
ஒடிசா ஆளுநர் திரு ஹரி பாபு அவர்களே, முதல்வர் திரு மோகன் சரண் மாஜி அவர்களே, மத்திய அமைச்சரவையின் எனது சக அமைச்சர்களே, ஒடிசாவின் மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, தொழில் மற்றும் வணிக உலகின் முன்னணி தொழில்முனைவோர்களே, முதலீட்டாளர்களே, நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஒடிசாவின் என் அன்பான சகோதர சகோதரிகளே!புவனேஸ்வரில் 'உத்கர்ஷ் ஒடிசா' – மேக் இன் ஒடிசா மாநாடு 2025-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
January 28th, 11:00 am
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் செழிப்பான ஒடிசா-ஒடிசாவில் தயாரிங்கள் (உத்கர்ஷ் ஒடிசா – மேக் இன் ஒடிசா) மாநாடு 2025 மற்றும் ஒடிசாவில் தயாரியுங்கள் கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், 2025 ஜனவரி மாதத்தில் ஒடிசாவுக்கு தாம் மேற்கொண்ட இரண்டாவது பயணம் இது என்று கூறியதுடன், வெளிநாடுவாழ் இந்தியர் தினம் 2025 நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க தாம் வருகை புரிந்ததை நினைவுகூர்ந்தார். இதுவரை ஒடிசாவில் நடைபெற்ற மிகப்பெரிய வணிக உச்சி மாநாடு இது என்று குறிப்பிட்ட திரு மோடி, ஒடிசாவில் தயாரியுங்கள் மாநாடு 2025-ல் 5-6 மடங்கு அதிகமான முதலீட்டாளர்கள் பங்கேற்றுள்ளனர் என்றார். இந்த பிரம்மாண்டமான நிகழ்வை ஏற்பாடு செய்த ஒடிசா மக்களையும் அரசையும் அவர் பாராட்டினார்.அரசியலமைப்புச் சட்டம் எங்களின் வழிகாட்டி வெளிச்சம்: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
December 29th, 11:30 am
நண்பர்களே, அடுத்த மாதம் 13ஆம் தேதி முதல் பிரயாக்ராஜில் மகாகும்பமேளா நடைபெற இருக்கிறது. இந்த வேளையில், அங்கே சங்கமத்தின் கரையில் தடபுடலாக ஏற்பாடுகள் நடந்தேறி வருகின்றன. சில நாட்கள் முன்பாக நான் பிரயாக்ராஜ் சென்றிருந்த வேளையில், ஹெலிகாப்டர் மூலமாக மொத்த கும்பமேளாவும் நடைபெறவுள்ள இடத்தையும் பார்வையிட்ட போது மனதில் பெரும் நிறைவு உண்டானது. என்னவொரு விசாலம்!! என்னவொரு அழகு!! எத்தனை பிரும்மாண்டம்!! அடேயப்பா!!