கர்நாடகாவின் பெங்களூருவில் பல்வேறு மெட்ரோ திட்டங்களின் அடிக்கல் நாட்டல் மற்றும் தொடக்க விழாவில் பிரதமரின் உரையின் தமிழாக்கம்
August 10th, 01:30 pm
கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட் அவர்களே, முதல்வர் திரு சித்தராமையா அவர்களே, மத்தியில் உள்ள எனது சகாக்கள் திரு மனோகர் லால் கட்டார், திரு ஹெச்டி குமாரசாமி, திரு அஷ்வினி வைஷ்ணவ், திரு வி சோமன்னா, திருமதி ஷோபா அவர்களே, துணை முதல்வர் திரு டி.கே.சிவகுமார் அவர்களே, கர்நாடக அமைச்சர் திரு பி.சுரேஷ் அவர்களே, எதிர்க்கட்சித் தலைவர் திரு ஆர். அசோக் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு தேஜஸ்வி சூர்யா அவர்களே, டாக்டர் மஞ்சுநாத் அவர்களே, சட்டமன்ற உறுப்பினர் திரு விஜயேந்திர எடியூரப்பா அவர்களே மற்றும் கர்நாடகாவின் எனது சகோதர சகோதரிகளே!கர்நாடகாவின் பெங்களூருவில் சுமார் ₹22,800 கோடி மதிப்பிலான மெட்ரோ திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்
August 10th, 01:05 pm
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ₹ 7,160 கோடி மதிப்பிலான பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தின் மஞ்சள் வழித்தடப் பாதையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (10.08.2025) திறந்து வைத்தார். பெங்களூரு கே.எஸ்.ஆர் ரயில் நிலையத்தில் மூன்று வந்தே பாரத் விரைவு ரயில்களையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், கர்நாடக மாநிலத்தில் கால் வைத்தவுடன், தான் ஒரு சிறந்த உணர்வை உணர்ந்ததாகக் குறிப்பிட்டார். கர்நாடகாவின் கலாச்சார செழுமை, அதன் மக்களின் பாசம், இதயத்தை ஆழமாகத் தொடும் கன்னட மொழியின் இனிமை ஆகியவற்றை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, பெங்களூருவின் தலைமை தெய்வமான அன்னம்மா தாயின் பாதங்களில் மரியாதை செலுத்தி தமது உரையைத் தொடங்குவதாகக் கூறினார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, நடபிரபு கெம்பேகவுடா பெங்களூரு நகரத்திற்கு அடித்தளமிட்டதை நினைவுகூர்ந்த பிரதமர், கெம்பேகவுடா பாரம்பரியத்தில் வேரூன்றியதாக இந்த நகரம் உள்ளது என்பதை எடுத்துரைத்தார். முன்னேற்றத்தின் புதிய உயரங்களை இந்நகரம் எட்டி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பெங்களூரு எப்போதும் சிறந்த உணர்வை பாதுகாத்து வருகிறது எனவும் இப்போது பெங்களூரு புதிய கனவுகளை நனவாக்குகிறது என்றும் பிரதமர் கூறினார்.ஜாரியா நிலக்கரி சுரங்கத்தில் தீ, மண் சரிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மறுவாழ்வு தொடர்பான திருத்தியமைக்கப்பட்ட ஜாரியா பெருந்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
June 25th, 03:14 pm
ஜாரியா நிலக்கரி சுரங்கத்தில் தீ, மண் சரிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மறுவாழ்வு தொடர்பான திருத்தியமைக்கப்பட்ட ஜாரியா பெருந்திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. திருத்தப்பட்ட திட்டத்தை அமலாக்க ரூ.5,940.47 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும்.ஒடிசா மாநில அரசின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமரின் உரை
June 20th, 04:16 pm
ஒடிசாவில் பிஜேபி அரசு பொறுப்பேற்று வெற்றிகரமாக இன்றுடன் (ஜூன் 20) ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இதனையொட்டி நடைபெறும் இந்த விழா பொதுச் சேவைக்கும், மக்கள் நம்பிக்கைக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார். மாநிலத்தில் உள்ள கோடிக்கணக்கான வாக்காளர்களின் நம்பிக்கையை நிறைவேற்ற நேர்மையான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கு இதுவொரு குறிப்பிடத்தக்க ஆண்டாக அமைந்துள்ளது என்று அவர் கூறினார். ஒடிசாவில் உள்ள மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் தீரு மோகன் மஜ்ஹி மற்றும் அவரது சகாக்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் பாராட்டத்தக்க பணிகளைச் செய்து, ஒடிசா மாநில வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளீர்கள்.ஒடிசா அரசின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ரூ.18,600 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
June 20th, 04:15 pm
ஒடிசா அரசின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் புவனேஸ்வரில் நடைபெற்ற மாநில அளவிலான விழாவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை வகித்தார். ஒடிசாவின் முழுமையான வளர்ச்சிக்கான தமது உறுதிப்பாட்டிற்கு இணங்க, குடிநீர், நீர்ப்பாசனம், விவசாய உள்கட்டமைப்பு, சுகாதார உள்கட்டமைப்பு, கிராமப்புற சாலைகள், பாலங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், புதிய ரயில் பாதை உள்ளிட்ட முக்கியமான திட்டங்களை உள்ளடக்கிய ரூ.18,600 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தும் பதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.எழுச்சிமிகு வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
May 23rd, 11:00 am
மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சக அமைச்சர்கள் திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, திரு சுகந்தா மஜும்தார் அவர்களே, மணிப்பூர் ஆளுநர் திரு அஜய் பல்லா அவர்களே, அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களே, அருணாச்சல பிரதேச முதலமைச்சர் திரு பேமா காண்டு அவர்களே, திரிபுரா முதலமைச்சர் திரு மாணிக் சஹா அவர்களே, மேகாலயா முதலமைச்சர் திரு கான்ராட் சங்மா அவர்களே, சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம் சிங் தமங் அவர்களே, நாகாலாந்து முதலமைச்சர் திரு நெய்பியு ரியோ அவர்களே, மிசோரம் முதலமைச்சர் திரு லால்துஹோமா அவர்களே, அனைத்து தொழில் துறை தலைவர்களே, முதலீட்டாளர்களே, பெண்களே, தாய்மார்களே வணக்கம்!பிரதமர் திரு. நரேந்திர மோடி, எழுச்சி பெறும் வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025-ஐ தொடங்கி வைத்தார்
May 23rd, 10:30 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று புதுதில்லியின் பாரத் மண்டபத்தில் எழுச்சி பெறும் வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025-ஐ தொடங்கி வைத்தார். இந்த நிகழ்விற்கு வருகை தந்த அனைத்து பிரமுகர்களையும் அன்புடன் வரவேற்ற பிரதமர், வடகிழக்கு பிராந்தியத்தின் எதிர்காலம் குறித்து மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார். பாரத் மண்டபத்தில் சமீபத்தில் நடைபெற்ற அஷ்டலட்சுமி மஹோத்சவத்தை நினைவு கூர்ந்த அவர், இன்றைய நிகழ்வு வடகிழக்கில் முதலீட்டின் கொண்டாட்டத்தைக் குறிக்கிறது என்பதை சுட்டிக் காட்டினார். இந்த உச்சிமாநாட்டிற்கு தொழில்துறை தலைவர்களின் குறிப்பிடத்தக்க வருகையை பிரதமர் எடுத்துரைத்தார். இந்தப் பிராந்தியத்தில் உள்ள வாய்ப்புகளையும் அவர் சுட்டிக் காட்டினார். அனைத்து அமைச்சகங்களுக்கும் மாநில அரசுகளுக்கும் அவர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து, ஒரு செழிப்பான முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதில் அவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டினார். வடகிழக்குப் பிராந்தியத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும், செழிப்புக்குமான தமது உறுதிப்பாட்டை மீண்டும் அவர் எடுத்துரைத்தார்.பிரதமர் மே 22 அன்று ராஜஸ்தானில் பயணம் மேற்கொள்கிறார்
May 20th, 01:06 pm
காலை 11:30 மணியளவில், அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட தேஷ்னோக் நிலையத்தையும், பிகானிர்-மும்பை விரைவு ரயிலையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். அதை தொடர்ந்து, பலானாவில் ரூ.26,000 கோடிக்கும் மேல் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து, நாட்டிற்கு அர்ப்பணிப்பார். மேலும் அங்கு ஒரு பொது நிகழ்ச்சியில் உரையாற்ற உள்ளார்.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
May 02nd, 02:06 pm
கேரள ஆளுநர் திரு ராஜேந்திர அர்லேகர் அவர்களே, முதலமைச்சர் திரு. பி. விஜயன் அவர்களே, மத்திய அமைச்சரவையைச் சேர்ந்த எனது நண்பர்களே, மேடையில் குழுமியிருக்கும் பிரமுகர்களே, கேரளாவைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளே.கேரளாவில் ரூ. 8,800 கோடி மதிப்புள்ள விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
May 02nd, 01:16 pm
கேரளாவின் திருவனந்தபுரத்தில் இன்று ரூ.8,800 கோடி மதிப்புள்ள விழிஞ்ஞம் சர்வதேச ஆழ்கடல் பன்னோக்கு துறைமுகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். பகவான் ஆதி சங்கராச்சாரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், மூன்று ஆண்டுகளுக்கு முன், செப்டம்பரில், ஆதி சங்கராச்சாரியாரின் பிறந்த இடத்திற்குச் செல்லும் பாக்கியம் தனக்குக் கிடைத்ததை எடுத்துரைத்தார். தனது நாடாளுமன்றத் தொகுதியான காசியில் உள்ள விஸ்வநாதர் ஆலய வளாகத்தில் ஆதி சங்கராச்சாரியாரின் பிரமாண்டமான சிலை நிறுவப்பட்டது பற்றி அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தச் சிலை ஆதி சங்கராச்சாரியாரின் மகத்தான ஆன்மீக ஞானம் மற்றும் போதனைகளுக்கு புகழ் சேர்ப்பதாக அவர் கூறினார். உத்தராகண்டில் உள்ள புனித கேதார்நாத் ஆலயத்தில் ஆதி சங்கராச்சாரியாரின் தெய்வீக சிலையைத் திறந்து வைக்கும் பெருமையும் தனக்குக் கிடைத்ததை அவர் நினைவுகூர்ந்தார். கேதார்நாத் கோயிலின் கதவுகள் இன்று பக்தர்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது மற்றொரு சிறப்பு நிகழ்வாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார். கேரளாவைச் சேர்ந்த ஆதி சங்கராச்சாரியார், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மடங்களை நிறுவி, நாட்டின் மனசாட்சியை விழிப்படையச் செய்தார் என்பதை பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். ஒன்றுபட்ட, ஆன்மீக ரீதியில் ஒளி பெற்ற பாரதத்திற்கு அவரது முயற்சிகள் அடித்தளம் அமைத்தன என்பதை பிரதமர் எடுத்துரைத்தார்.46-வது பிரகதி கலந்துரையாடலுக்கு பிரதமர் தலைமை தாங்கினார்
April 30th, 08:41 pm
மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் முனைப்பான ஆளுமை மற்றும் உரிய நேரத்தில் அமலாக்கத்திற்கான தகவல் தொடர்பு தொழில்நுட்ப அடிப்படையிலான பன்முக தளமான பிரகதியின் 46-வது பதிப்பின் கூட்டம் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.பிரதமரின் தாய்லாந்து பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள்
April 03rd, 08:36 pm
இந்தியா-தாய்லாந்து உத்திசார் ஒத்துழைப்பை நிறுவுவது குறித்த கூட்டுப் பிரகடனம் வெளியிடப்பட்டது.பல்வேறு ரயில்வே திட்டங்களின் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
January 06th, 01:00 pm
தெலங்கானா ஆளுநர் திரு ஜிஷ்ணு தேவ் வர்மா அவர்களே, ஒடிசா ஆளுநர் திரு ஹரி பாபு அவர்களே, ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா அவர்களே, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு ஒமர் அப்துல்லா அவர்களே, தெலங்கானா முதலமைச்சர் திரு ரேவந்த் ரெட்டி அவர்களே, ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, திரு ஜி கிஷன் ரெட்டி அவர்களே, டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களே, திரு வி சோமையா அவர்களே, திரு ரவ்னீத் சிங் பிட்டு அவர்களே, திரு பண்டி சஞ்சய் குமார் அவர்களே, ஏனைய அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டப்பேரவை உறுப்பினர்களே, மதிப்பிற்குரிய விருந்தினர்களே, தாய்மார்களே, பெரியோர்களே!பிரதமர் திரு நரேந்திர மோடி பல்வேறு ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்தார்
January 06th, 12:30 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் பல்வேறு ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்து பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். புதியதாக ஜம்மு ரயில்வே கோட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். கிழக்கு கடற்கரை ரயில்வேயின் ராயகடா ரயில்வே பிரிவு கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய அவர், தெலங்கானாவில் சார்லபள்ளி புதிய ரயில் முனையத்தையும் தொடங்கி வைத்தார்.ராஜஸ்தானில் டிசம்பர் 17 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
December 16th, 03:19 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி டிசம்பர் 17 அன்று ராஜஸ்தானில் பயணம் மேற்கொள்கிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ‘ஓர் ஆண்டு- சிறந்த வளர்ச்சி’ என்ற ராஜஸ்தான் மாநில அரசின் ஓர் ஆண்டை நிறைவு செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் எரிசக்தி, சாலை, ரயில்வே மற்றும் குடிநீர் துறை தொடர்பான ரூ.46,300 கோடி மதிப்பிலான 24 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கிவைக்கிறார்.குஜராத் மாநிலம் லோதலில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
October 09th, 03:56 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, குஜராத் மாநிலம் லோதலில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை மேம்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் இரண்டு கட்டங்களாக நிறைவேற்றப்படும்.Vande Bharat is the new face of modernization of Indian Railways: PM Modi
August 31st, 12:16 pm
PM Modi flagged off three Vande Bharat trains via videoconferencing. Realizing the Prime Minister’s vision of ‘Make in India’ and Aatmanirbhar Bharat, the state-of-the-art Vande Bharat Express will improve connectivity on three routes: Meerut—Lucknow, Madurai—Bengaluru, and Chennai—Nagercoil. These trains will boost connectivity in Uttar Pradesh, Tamil Nadu and Karnataka.காணொலி மூலம் மூன்று வந்தே பாரத் ரயில்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
August 31st, 11:55 am
மூன்று வந்தே பாரத் ரயில்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிரதமரின் 'மேக் இன் இந்தியா' மற்றும் தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், அதிநவீன வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீரட் - லக்னோ, மதுரை - பெங்களூரு மற்றும் சென்னை - நாகர்கோவில் ஆகிய மூன்று வழித்தடங்களில் இணைப்பை மேம்படுத்தும். இந்த ரயில்கள் உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இணைப்பை மேம்படுத்தும்.We will make East India the growth engine of Viksit Bharat: PM Modi in Barrackpore
May 12th, 11:40 am
Today, in anticipation of the 2024 Lok Sabha elections, Prime Minister Narendra Modi sparked enthusiasm and excitement among the audience with his speech in Barrackpore, West Bengal. Expressing gratitude to the numerous mothers and sisters in attendance, he remarked, This scene indicates a forthcoming change in Bengal. The victory of 2019 is poised to be even greater for the BJP this time around.PM Modi electrifies crowds with his speeches in Barrackpore, Hooghly, Arambagh & Howrah, West Bengal
May 12th, 11:30 am
Today, in anticipation of the 2024 Lok Sabha elections, Prime Minister Narendra Modi sparked enthusiasm and excitement among the audience with his speeches in Barrackpore, Hooghly, Arambagh and Howrah, West Bengal. Expressing gratitude to the numerous mothers and sisters in attendance, he remarked, This scene indicates a forthcoming change in Bengal. The victory of 2019 is poised to be even greater for the BJP this time around.