மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஷாதோலில் அரிவாள் செல் இரத்த சோகை ஒழிப்புத் திட்டத்தின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
July 01st, 10:56 pm
இந்த நிகழ்ச்சியில் மத்திய பிரதேச மாநிலத்தின் ஆளுநர் திரு மங்குபாய் படேல், முதல்வர் திரு ஷிவ்ராஜ் ஜி, எனது மத்திய அமைச்சரவை சகாக்கள் திரு. மன்சுக் மாண்டவியா ஜி, திரு. ஃபகான் சிங் குலாஸ்தே ஜி, பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகெல் ஜி, நாடாளுமன்ற உறுப்பினர்கள். மத்திய பிரதேச மாநிலத்தின் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடு முழுவதிலும் இருந்து வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் எங்களை ஆசீர்வதிக்க இங்கு வந்திருக்கும் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் பங்கேற்றுள்ளனர்.மத்தியப் பிரதேசத்தின் ஷாதோலில் அரிவாள் செல் ரத்தசோகை ஒழிப்பு தேசிய இயக்கத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்
July 01st, 03:29 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஷாதோலில் அரிவாள் செல் ரத்தசோகை ஒழிப்பு தேசிய இயக்கத்தைத் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு செல் மரபணு நிலை அட்டைகளை வழங்கினார். மத்தியப் பிரதேசத்தில் சுமார் 3.57 கோடி ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜன் ஆரோக்கிய யோஜனா அட்டைகளின் விநியோகத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது, 16-ம் நூற்றாண்டின் மத்தியில் கோண்ட்வானாவை ஆட்சி செய்த ராணி துர்காவதியை பிரதமர் கௌரவித்தார்.நீர்வளத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் ஆற்றிய காணொலி உரையின் முக்கிய அம்சங்கள்
January 05th, 09:55 am
நாட்டின் நீர் வளத்துறை அமைச்சர்களின் முதலாவது அகில இந்திய மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. நீர் வள அமைச்சகம், பாசன அமைச்சகம், வேளாண் அமைச்சகம், ஊரக, நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் போன்ற மாநில அரசுகளின் பல்வேறு அமைச்சகங்களுக்கு இடையேயான உரையாடல் அமையும் விதத்தில், அனைத்து மாநிலங்களும் இருக்க வேண்டியது அவசியமாகும். இந்தத் துறைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடைய தகவல்களும், தரவுகளும் இருந்தால் திட்டமிடலுக்கு உதவி கிடைக்கும்.தண்ணீர் குறித்த முதலாவது அகில இந்திய மாநில அமைச்சர்களின் மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் உரையாற்றினார்
January 05th, 09:45 am
தண்ணீர் குறித்த முதலாவது அகில இந்திய மாநில அமைச்சர்களின் மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.