போலந்து கபடி வீரர்களுடன் பிரதமர் சந்திப்பு
August 22nd, 09:48 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி, வார்சாவில் இன்று (22.08.2024) போலந்து கபடி கூட்டமைப்பின் தலைவர் திரு.மைக்கேல் ஸ்பிக்ஸ்கோ, மற்றும் போலந்து கபடி கூட்டமைப்பின் நிர்வாகக்குழு உறுப்பினர் திருமதி.அன்னா கால்பர்சிஸ்க் ஆகியோரை சந்தித்தார்.பிரபல போலந்து இந்தியவியலாளர்களுடன் பிரதமர் சந்திப்பு
August 22nd, 09:18 pm
போலந்து நாட்டின் முக்கிய இந்தியவியலாளர்கள் குழுவினரை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்து பேசினார். குழுவில் இடம்பெற்றிருந்தவர்கள் பற்றிய விவரங்கள் பின்வருமாறு:போலந்து அதிபருடன் பிரதமர் சந்திப்பு
August 22nd, 08:14 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி, வார்சாவில் உள்ள பெல்வேடர் மாளிகையில் இன்று(22.08.2024), போலந்து அதிபர் திரு.ஆன்டர்சேஜ் செபஸ்டியன் டூடா-வை சந்தித்துப் பேசினார்.வார்சாவில் உள்ள போர்வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை செலுத்தினார்
August 22nd, 08:12 pm
வார்சாவில் உள்ள அடையாளம் தெரியாத போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் திரு.நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.போலந்து பிரதமருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திப்பு
August 22nd, 06:10 pm
இரு தலைவர்களும் பிரதிநிதிகள் நிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியா-போலந்து இடையேயான நல்லுறவின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, உறவை மேலும் மேம்படுத்த இரு தலைவர்களும் முடிவு செய்தனர். வர்த்தகம், முதலீடு, அறிவியல், தொழில்நுட்பம், பாதுகாப்பு, கலாச்சார ஒத்துழைப்பு, மக்களுக்கு இடையேயான உறவுகள் உள்ளிட்டவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து அவர்கள் விரிவான விவாதங்களில் ஈடுபட்டனர். உணவுப் பதப்படுத்துதல், நகர்ப்புற உள்கட்டமைப்பு, குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, மின்சார வாகனங்கள், பசுமை ஹைட்ரஜன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு, சுரங்கம், தூய்மைத் தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் பொருளாதார, வர்த்தக ஒத்துழைப்புக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் இருப்பதை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.Prime Minister pays tribute at The Dobry Maharaja Memorial in Warsaw
August 21st, 11:57 pm
Prime Minister Shri Narendra Modi laid a wreath and paid tribute to The Dobry Maharaja Memorial in Warsaw, today.Prime Minister visits the Kolhapur Memorial
August 21st, 11:56 pm
Prime Minister Shri Narendra Modi laid a wreath and paid tribute at the Kolhapur Memorial in Warsaw, today.மான்டே காசினோ போரின் நினைவுச் சின்னத்தில் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்
August 21st, 11:55 pm
வார்சாவில் உள்ள மான்டே காசினோ போர் நினைவிடத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.போலந்து தலைநகர் வார்சாவில் உள்ள கோலாப்பூர் நினைவிடத்திற்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்
August 21st, 10:31 pm
போலந்து நாட்டின் வார்சாவில் உள்ள கோலாப்பூர் நினைவிடத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். இந்த நினைவகம், கோலாப்பூரின் மகத்தான அரச குடும்பத்துக்கு செலுத்தும் மரியாதை என்று திரு மோடி கூறினார். இரண்டாம் உலகப் போரின் கொடூரங்களால் இடம்பெயர்ந்த போலந்து நாட்டின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுப்பதில் இந்த அரச குடும்பம் முன்னணியில் இருந்தது என்று திரு மோடி மேலும் கூறினார்.போலந்து தலைநகர் வார்சாவில் உள்ள நவாநகர் ஜாம் சாகிப் நினைவிடத்திற்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்
August 21st, 10:27 pm
போலந்து நாட்டின் வார்சாவில் உள்ள நவாநகர் ஜாம் சாகிப் நினைவிடத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். போலந்தின் வார்சாவில் உள்ள நவாநகர் ஜாம் சாகிப் நினைவிடம், இரண்டாம் உலகப் போரால் வீடிழந்த போலந்து குழந்தைகளுக்கு உறைவிடம் மற்றும் ஆதரவை உறுதி செய்த ஜாம் சாகிப் திக்விஜய்சிங்ஜி ரஞ்சித்சிங்ஜி ஜடேஜாவின் மனிதநேய பங்களிப்பை எடுத்துக்காட்டுகிறது என்று திரு மோடி கூறினார். வார்சாவில் உள்ள நவாநகர் ஜாம் சாகிப் நினைவிடத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய நிகழ்ச்சியையும் திரு மோடி பகிர்ந்து கொண்டார்.போலந்து மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு பிரதமர் பயணம்
August 19th, 08:38 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, 2024 ஆகஸ்ட் 21-22 தேதிகளில் போலந்து செல்கிறார். கடந்த 45 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் போலந்து செல்வது இதுவே முதல்முறையாகும்.