In this decade of the 21st century, India is riding the Reform Express: PM Modi at ET Now Global Business Summit
February 13th, 08:30 pm
PM Modi addressed the ET Now Global Business Summit 2026 in New Delhi, highlighting the theme ‘A Decade of Disruption, A Century of Change.’ He noted that despite global shocks—from the pandemic to wars and supply chain breakdowns, India’s decade has been defined by strong growth, effective delivery, and a vibrant democracy. Recalling that India was the 11th-largest economy a decade ago, he said the nation is now rapidly moving toward becoming the world’s third-largest economy.எகனாமிக் டைம்ஸ் நவ் சர்வதேச வர்த்தக உச்சி மாநாட்டில், பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
February 13th, 08:00 pm
புதுதில்லியில் இன்று நடைபெற்ற எகனாமிக் டைம்ஸ் நவ் சர்வதேச வர்த்தக உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த சர்வதேச வர்த்தக உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட அவர், 'பத்தாண்டு கால இடையூறு, ஒரு நூற்றாண்டுக்கான மாற்றம்' என்ற கருப்பொருளில் உரையாற்றினார். 21 - ம் நூற்றாண்டின் கடந்த பத்தாண்டுகளில், உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய பெருந்தொற்று, பதற்றமான சூழல், பல்வேறு பிராந்தியங்களில் போர்கள், மற்றும் உலகளவிலான சமநிலையைப் பாதிக்கும் வகையில், விநியோக நடைமுறைகளில் முறிவுகள் உள்ளிட்ட முன்னெப்போதும் இல்லாத அளவிலான இடையூறுகள் ஏற்பட்டுள்ளன என்பதை அவர் விரிவாக எடுத்துரைத்தார். நெருக்கடியான சூழல்கள் நாட்டின் உண்மையான வலிமையை வெளிப்படுத்துகின்றன என்றும், இத்தகைய இடையூறுகள் இருந்த போதிலும், இந்தியா கடந்த பத்தாண்டு காலத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி, சிறந்த விநியோக செயல்பாடுகள் மற்றும் ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்துதல் போன்றவற்றால் முன்னேற்றம் அடைந்து வருகிறது என்பதில் அவர் பெருமிதம் தெரிவித்தார். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு, இந்தியா உலகளவில் பதினொன்றாவது பெரிய பொருளாதார நாடு என்ற நிலையில் இருந்தது. கடும் சவால்களுக்கு இடையே நாட்டின் பொருளாதாரத்தில் சரிவு ஏற்படும் என்ற அச்சம் இருந்தது. ஆனால், தற்போது இந்தியா விரைவான வளர்ச்சியுடன், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்து வருகிறது என்பதை திரு மோடி நினைவு கூர்ந்தார். இந்த நூற்றாண்டிற்கான மாற்றத்தின் முக்கிய அடித்தளமாக இந்தியா திகழும் என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், இந்தியா தற்போது உலக நாடுகளின் முன்னேற்றத்திற்கு பதினாறு சதவீதத்திற்கும் கூடுதலாக பங்களித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், இந்த பங்களிப்பு ஆண்டுதோறும் அதிகரிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தியா உலகளவில் வளர்ச்சிக்கான உத்வேகத்துடன், உலகப் பொருளாதாரத்தின் புதிய ஊக்கியாக இருக்கும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.ஏபிபி நெட்வொர்க் இந்தியா @2047 உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை
May 06th, 08:04 pm
இன்று காலை முதல், பாரத் மண்டபம் ஒரு துடிப்பான தளமாக மாறியுள்ளது. சில நிமிடங்களுக்கு முன்பு, உங்கள் குழுவைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த உச்சிமாநாடு பன்முகத்தன்மையால் நிறைந்துள்ளது. பல பிரமுகர்கள் இந்த உச்சிமாநாட்டை கவனம் மிக்கதாக ஆக்கியுள்ளனர். உங்கள் அனுபவமும் மிகவும் செறிவாகியிருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த உச்சிமாநாட்டில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் பெருமளவிலான பங்கேற்பு, ஒரு வகையில், அதன் தனித்துவமான அம்சமாக மாறியுள்ளது. குறிப்பாக, எங்கள் ட்ரோன் சகோதரிகள் மற்றும் லட்சாதிபதி சகோதரிகள் அனைவரையும் நான் இப்போது சந்தித்தபோது, அவர்கள் தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொண்ட உற்சாகத்தைக் காண முடிந்தது. அவர்களின் ஒவ்வொரு உரையாடலையும் அவர்கள் நினைவில் வைத்திருந்தனர். இது உண்மையிலேயே ஒரு ஊக்கமளிக்கும் சந்தர்ப்பமாக இருந்து வருகிறது.பிரதமர் திரு. நரேந்திர மோடி ஏபீபி நெட்வொர்க்கின் இந்தியா@2047 உச்சி மாநாட்டில் உரையாற்றினார்
May 06th, 08:00 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ஏபீபி நெட்வொர்க்கின் இந்தியா@2047 என்ற உச்சி மாநாட்டில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், உச்சிமாநாட்டின் வளமான பன்முகத்தன்மையை எடுத்துரைத்தார். உச்சிமாநாட்டில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் குறிப்பிடத்தக்க பங்கேற்பை அவர் எடுத்துரைத்தார்.ஹரியானா மாநிலம் ஹிசார் விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
April 14th, 11:00 am
பாபாசாகேப் அம்பேத்கர் வாழ்க என்று நான் சொல்வேன்.. நீங்கள் எல்லோரும் திரும்பச் சொல்லுங்கள்..ஹிசார் விமான நிலையத்தில் ரூ.410 கோடி மதிப்பிலான புதிய முனைய கட்டிடத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்
April 14th, 10:16 am
விமானப் பயணத்தை பாதுகாப்பானதாகவும் குறைந்த செலவிலும், அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய வகையிலும் மாற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, ஹரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள மகாராஜா அக்ரசென் விமான நிலையத்தில் ரூ. 410 கோடி மதிப்பிலான புதிய முனைய கட்டிடத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ஹரியானா மாநில மக்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். ஹரியானா மாநில மக்கள் வலிமை, விளையாட்டுத் திறன், சகோதரத்துவம் போன்ற பண்புகளைக் கொண்டுள்ளனர் என்றும் கூறினார். இந்த பரபரப்பான அறுவடை காலத்தில் திரளான மக்கள் தனக்கு ஆசி வழங்கியுள்ளதற்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.நியூஸ் 18 தொலைக்காட்சி ஏற்பாடு செய்த எழுச்சிமிகு இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை
April 08th, 08:30 pm
இந்த உச்சிமாநாட்டின் மூலம் நம் நாடு மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களுடன் தொடர்பு கொள்ள எனக்கு வாய்ப்பளித்ததற்காக நியூஸ் 18 நிறுவனத்துக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு உச்சிமாநாட்டில் நாட்டில் உள்ள இளைஞர்களின் விருப்பங்களுடன் இணைத்திருப்பது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆண்டின் தொடக்கத்தில், விவேகானந்தர் பிறந்த தினத்தன்று, வளர்ச்சியடைந்த இந்தியா குறித்த இளம் தலைவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி இங்குள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளைஞர்களின் கனவுகளை மனவுறுதியின் வலிமையையும், வளர்ந்த நாடாக இந்தியாவை உருவெடுக்கச் செய்வதற்கான அவர்களது ஆர்வத்தையும் காண முடிவதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்த அமிர்த காலம் இளம் தலைமுறையினருக்கு உத்வேகத்தையும், மன வலிமையையும் அளிக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.நியூஸ் 18 தொலைக்காட்சியின் எழுச்சிமிகு இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரை
April 08th, 08:15 pm
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று நியூஸ் 18 தொலைக்காட்சியின் எழுச்சி மிகு இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த உச்சிமாநாட்டின் மூலம் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தற்காக அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்தியாவில் உள்ள இளைஞர்களின் விருப்பங்கள் மீது கவனம் செலுத்தும் வகையில் இந்த உச்சிமாநாடு நடத்தப்படுவதற்குப் பாராட்டு தெரிவித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுவாமி விவேகானந்தர் பிறந்த தினத்தன்று பாரத் மண்டபத்தில் நடைபெற்ற 'வளர்ச்சியடைந்த இந்தியாவின் தலைவர்கள் கலந்துரையாடல் என்ற நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை சுட்டிகாட்டிய அவர், இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்குவதற்கு இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், அனைத்து நிலைகளிலும் அது குறித்த தொடர் விவாதங்கள் சிறந்த சிந்தனைகளை வளர்க்க உதவும் என்று கூறினார். இது அமிர்த கால தலைமுறையினருக்கு உற்சாகமூட்டும் வகையிலும், வழிகாட்டியாகவும், திகழும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். இந்த உச்சி மாநாட்டின் வெற்றிக்கு தனது நல்வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்ஃப் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது திருப்புமுனை தருணம் என பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
April 04th, 08:19 am
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்ஃப் திருத்த மசோதா, முசல்மான் வக்ஃப் ரத்து மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சமூக-பொருளாதார நீதி, வெளிப்படைத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றுக்கான கூட்டு எதிர்பார்ப்பில் இது ஒரு திருப்புமுனை தருணமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.