கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
May 02nd, 02:06 pm
கேரள ஆளுநர் திரு ராஜேந்திர அர்லேகர் அவர்களே, முதலமைச்சர் திரு. பி. விஜயன் அவர்களே, மத்திய அமைச்சரவையைச் சேர்ந்த எனது நண்பர்களே, மேடையில் குழுமியிருக்கும் பிரமுகர்களே, கேரளாவைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளே.கேரளாவில் ரூ. 8,800 கோடி மதிப்புள்ள விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
May 02nd, 01:16 pm
கேரளாவின் திருவனந்தபுரத்தில் இன்று ரூ.8,800 கோடி மதிப்புள்ள விழிஞ்ஞம் சர்வதேச ஆழ்கடல் பன்னோக்கு துறைமுகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். பகவான் ஆதி சங்கராச்சாரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், மூன்று ஆண்டுகளுக்கு முன், செப்டம்பரில், ஆதி சங்கராச்சாரியாரின் பிறந்த இடத்திற்குச் செல்லும் பாக்கியம் தனக்குக் கிடைத்ததை எடுத்துரைத்தார். தனது நாடாளுமன்றத் தொகுதியான காசியில் உள்ள விஸ்வநாதர் ஆலய வளாகத்தில் ஆதி சங்கராச்சாரியாரின் பிரமாண்டமான சிலை நிறுவப்பட்டது பற்றி அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தச் சிலை ஆதி சங்கராச்சாரியாரின் மகத்தான ஆன்மீக ஞானம் மற்றும் போதனைகளுக்கு புகழ் சேர்ப்பதாக அவர் கூறினார். உத்தராகண்டில் உள்ள புனித கேதார்நாத் ஆலயத்தில் ஆதி சங்கராச்சாரியாரின் தெய்வீக சிலையைத் திறந்து வைக்கும் பெருமையும் தனக்குக் கிடைத்ததை அவர் நினைவுகூர்ந்தார். கேதார்நாத் கோயிலின் கதவுகள் இன்று பக்தர்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது மற்றொரு சிறப்பு நிகழ்வாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார். கேரளாவைச் சேர்ந்த ஆதி சங்கராச்சாரியார், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மடங்களை நிறுவி, நாட்டின் மனசாட்சியை விழிப்படையச் செய்தார் என்பதை பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். ஒன்றுபட்ட, ஆன்மீக ரீதியில் ஒளி பெற்ற பாரதத்திற்கு அவரது முயற்சிகள் அடித்தளம் அமைத்தன என்பதை பிரதமர் எடுத்துரைத்தார்.நாளையும் நாளை மறுநாளும்(மே 1 மற்றும் 2-ம் தேதி பிரதமர் மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் செல்கிறார்
April 30th, 03:42 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளையும் நாளை மறுநாளும் (மே 1 மற்றும் 2-ம் தேதி) மகாராஷ்டிரா, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். மே 1-ம் தேதி மும்பை செல்லும் அவர், காலை 10.30 மணிக்கு வேவ்ஸ் உலக ஒலி-ஒளி, பொழுதுபோக்கு உச்சி மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார்.