Parakram Diwas will continue to give us strength on the journey of a developed India: PM Modi

January 23rd, 05:15 pm

In his address during the Parakram Diwas programme in the Andaman & Nicobar Islands, PM Modi said that in recent years, the day has become an integral festival of the nation’s spirit. He recalled that in 2023, 21 islands of Andaman were named after 21 Param Vir Chakra awardees. The PM highlighted that India’s growing defence prowess reflects the realisation of Netaji’s vision of a strong, fearless and self-reliant nation.

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நடைபெற்ற பராக்கிரம தின நிகழ்ச்சியில் பிரதமர் காணொலிக் காட்சி மூலம் உரை

January 23rd, 05:00 pm

பராக்கிரம தினமாகக் கொண்டாடப்படும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளை முன்னிட்டு அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய திரு மோடி, நேதாஜியின் வீரமும் துணிச்சலும் நம்மை ஊக்குவிக்கிறது என்றும், அவர் மீது மரியாதையை ஏற்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டார். சமீப ஆண்டுகளில், பராக்கிரம தினம் தேச உணர்வின் ஒருங்கிணைந்த பண்டிகையாக மாறியுள்ளது என்று அவர் எடுத்துரைத்தார்.

வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் காணொலி மூலம் ஆற்றிய உரை

May 29th, 06:45 pm

இன்று, ஜெகநாதரின் ஆசியுடன், நாட்டின் விவசாயிகளுக்காக ஒரு பெரிய இயக்கம் தொடங்கப்படுகிறது. வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கம் என்பது ஒரு தனித்துவமான முயற்சியாகும். பருவமழை நெருங்கி வருகிறது, காரீஃப் பருவத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அடுத்த 12 முதல் 15 நாட்களில், விஞ்ஞானிகள், நிபுணர்கள், அதிகாரிகள் மற்றும் முற்போக்கான விவசாயிகள் அடங்கிய 2,000க்கும் மேற்பட்ட குழுக்கள் நாடு முழுவதும் உள்ள கிராமங்களுக்குச் செல்ல உள்ளன. இந்தக் குழுக்கள் 700-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளைச் சந்திக்க உள்ளனர். இந்தப் பிரமாண்டமான இயக்கம், இந்த லட்சியத் திட்டம் மற்றும் இந்திய விவசாயத்தின் அடித்தளமாக பிரகாசமான எதிர்காலம் ஆகியவற்றுக்காக நாட்டின் அனைத்து விவசாயிகளுக்கும், இந்தக் குழுக்களின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றினார்

May 29th, 06:44 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்க நிகழ்ச்சியில் உரையாற்றினார். இந்த இயக்கம் தொடங்கப்பட்டிருப்பது, விவசாயிகளுக்கான ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி என்றும், வேளாண் வளர்ச்சியை ஆதரிப்பதற்கான ஒரு தனித்துவமான முயற்சி என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார். பருவமழை நெருங்கி, வருவதுடன் காரீஃப் பருவத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கும் வேளையில், ​​அடுத்த 12 முதல் 15 நாட்களில், விஞ்ஞானிகள், நிபுணர்கள், அதிகாரிகள் மற்றும் முற்போக்கான விவசாயிகள் அடங்கிய 2000 குழுக்கள் 700க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்குப் பயணம் செய்து கிராமங்கள் முழுவதும் லட்சக் கணக்கான விவசாயிகளைச் சென்றடையும் என்று பிரதமர் எடுத்துரைத்தார். இந்தியாவின் விவசாயத் துறையை வலுப்படுத்துவதற்கான அவர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டி, அனைத்து விவசாயிகளுக்கும், இந்தக் குழுக்களின் பங்கேற்பாளர்களுக்கும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.