மத்திய பிரதேசத்தின் கஜுராஹோவில் கென் - பெட்வா நதிகளை இணைக்கும் தேசிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 25th, 01:00 pm
மாவீரர்களின் பூமியான பண்டேல்கண்ட் மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய பிரதேசத்தின் மாண்புமிகு ஆளுநர் திரு மங்குபாய் படேல் அவர்களே, முதல்வர் திரு மோகன் யாதவ் அவர்களே, மத்திய அமைச்சர்கள் திரு சிவராஜ் சிங், திரு வீரேந்திர குமார் மற்றும் திரு சிஆர் பாட்டீல் அவர்களே, துணை முதல்வர் திரு ஜெகதீஷ் தேவ்தா அவர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, எனதன்பு சகோதர சகோதரிகளே.மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராஹோவில் கென்-பெட்வா நதிகள் இணைப்புத் தேசியத் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்
December 25th, 12:30 pm
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராஹோவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய திரு நரேந்திர மோடி, இந்திய, உலக கிறிஸ்தவ சமூகத்தினருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் தலைமையிலான அரசு அமைந்து ஓராண்டு நிறைவடைந்ததை நினைவுகூர்ந்த திரு நரேந்திர மோடி, இதற்காக மத்தியப் பிரதேச மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். கடந்த ஓராண்டில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான புதிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதோடு, வளர்ச்சிப் பணிகளும் வேகம் பெற்றுள்ளன என்றும் அவர் கூறினார். வரலாற்றுச் சிறப்புமிக்க கென்-பெட்வா நதிகள் இணைப்புத் திட்டமான தௌதான் அணைக்கட்டு, மத்தியப் பிரதேசத்தின் முதலாவது சூரியசக்தி மின் நிலையமான ஓம்கரேஷ்வர் மிதக்கும் சூரிய மின்சக்தி திட்டம் ஆகியவற்றுக்கும் இன்று அடிக்கல் நாட்டப்பட்டதாகப் பிரதமர் குறிப்பிட்டார். இதற்காக மத்தியப் பிரதேச மக்களுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.Modi isn't here for leisure, his ambitions are vast: PM Modi in Balaghat
April 09th, 10:51 pm
Prime Minister Narendra Modi graced a public rally held in Balaghat, Madhya Pradesh. The PM showered his love and blessings upon the crowd and discussed various key issues related to the development of Madhya Pradesh. He pledged to work for the tribal community, the women and for the nation as a whole.PM Modi addresses a public meeting in Balaghat, Madhya Pradesh
April 09th, 02:22 pm
Prime Minister Narendra Modi graced a public rally held in Balaghat, Madhya Pradesh. The PM showered his love and blessings upon the crowd and discussed various key issues related to the development of Madhya Pradesh. He pledged to work for the tribal community, the women and for the nation as a whole.வளர்ச்சி அடைந்த பாரதம், வளர்ச்சி அடைந்த மத்தியப் பிரதேசம் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 29th, 04:07 pm
வளர்ந்த மாநிலம் முதல் வளர்ந்த இந்தியா வரை என்ற செயல்பாட்டில், இன்று நாம் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நமது சகோதர சகோதரிகளுடன் இணைந்துள்ளோம். மேற்கொண்டு பேசுவதற்கு முன், திண்டோரி சாலை விபத்து குறித்த எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது அனுதாபங்கள். காயமடைந்தவர்களுக்கு அரசு சிகிச்சை அளித்து வருகிறது. இந்த துயரமான தருணத்தில், நான் மத்தியப் பிரதேச மக்களுடன் இருக்கிறேன்.'வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த மத்தியப் பிரதேசம்' நிகழ்ச்சியில் பிரதமர் உரை
February 29th, 04:06 pm
வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த 'மத்தியப் பிரதேசம் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின் போது, மத்தியப் பிரதேசம் முழுவதும் சுமார் ரூ.17,000 கோடி மதிப்பிலான நீர்ப்பாசனம், மின்சாரம், சாலை, ரயில், குடிநீர் வழங்கல், நிலக்கரி மற்றும் தொழில்துறை உள்ளிட்ட பல முக்கிய துறைகளின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார். மத்தியப் பிரதேசத்தில் சைபர் தாலுகா திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.பிப்ரவரி 29 அன்று வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த மத்தியப் பிரதேசம் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார்
February 27th, 06:42 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி 29 பிப்ரவரி 2024 அன்று மாலை 4 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்தமத்தியப் பிரதேசம்' நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியின் போது, மத்தியப் பிரதேசம் முழுவதும் ரூ.17,500 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவதுடன் நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். நீர்ப்பாசனம், மின்சாரம், சாலை, ரயில், நீர் வழங்கல், நிலக்கரி, தொழில்துறை உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் இந்த திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மத்தியப் பிரதேசத்தில் இணையதள (சைபர்) தாலுகா திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.