தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு, ஜனவரி 12 அன்று நடைபெறும் வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் உரையாடல் 2025-ல் பிரதமர் பங்கேற்கிறார்

January 10th, 09:21 pm

வழக்கமான முறையில் நடத்தப்படும் தேசிய இளைஞர் விழாவின் 25 ஆண்டுகால பாரம்பரியத்தை மாற்றுவதை வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் உரையாடல் நோக்கமாகக் கொண்டுள்ளது. அரசியல் சார்பு இல்லாத 1 லட்சம் இளைஞர்களை அரசியலில் ஈடுபடுத்தவும், வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான அவர்களின் யோசனைகளை நனவாக்க ஒரு தேசிய தளத்தை வழங்கவும் வேண்டும் என்ற பிரதமரின் சுதந்திர தின அழைப்புடன் இது ஒத்துப்போகிறது. அதற்கேற்ப, இந்த தேசிய இளைஞர் தினத்தில், நாட்டின் எதிர்காலத் தலைவர்களை ஊக்குவிக்கவும், அதிகாரம் அளிக்கவும் வடிவமைக்கப்பட்ட பல நடவடிக்கைகளில் பிரதமர் பங்கேற்பார். புதியன கண்டறியும் இளம் தலைவர்கள், இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமான, பத்து கருப்பொருள் பகுதிகளை பிரதிநிதித்துவம் செய்யும் பத்து பவர்பாயிண்ட் விளக்கக்காட்சிகளை பிரதமர் முன் வைப்பார். இந்தியாவின் மிக முக்கியமான சவால்களை எதிர்கொள்ள இளம் தலைவர்களால் முன்மொழியப்பட்ட புதுமையான யோசனைகளையும் தீர்வுகளையும் இந்த விளக்கக்காட்சிகள் பிரதிபலிக்கும்.

வளர்ச்சியடைந்த இந்தியா குறித்த இளம் தலைவர்கள் உரையாடல் நிகழ்ச்சி, இளையோர் சக்தியையும், அவர்களின் கனவுகள், திறன்கள், விருப்பங்களையும் கொண்டாடுகிறது: பிரதமர்

January 10th, 07:24 pm

வளர்ச்சியடைந்த இந்தியா குறித்த இளம் தலைவர்கள் பங்கேற்கும் உரையாடல் நிகழ்ச்சி இளையோர் சக்தியையும், அவர்களின் கனவுகள், திறன்கள், விருப்பங்களையும் கொண்டாடுகிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.

அகமதாபாத்தில் ராமகிருஷ்ண மடம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் ஆற்றிய உரை

December 09th, 01:30 pm

மதிப்பிற்குரிய சுவாமி கௌதமானந்தா ஜி மகராஜ் அவர்களே, ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடத்தின் மதிப்புமிக்க துறவிகளே, குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் அவர்களே, இந்த நிகழ்ச்சியுடன் தொடர்புடைய அனைத்து சிறப்பு விருந்தினர்களே, தாய்மார்களே, வணக்கம்!

குஜராத்தில் ராமகிருஷ்ண மடம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

December 09th, 01:00 pm

குஜராத்தில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தா ஜி மகராஜ், ராமகிருஷ்ண மடம் மற்றும் அந்த இயக்கத்தின் துறவிகள், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் உள்ளிட்ட அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். சாரதா தேவி, குருதேவ் ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் ஆகியோருக்கு திரு மோடி மரியாதை செலுத்தினார். ஸ்ரீமத் சுவாமி பிரேமானந்த மகாராஜின் பிறந்த நாளையொட்டி இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.

புலம்பெயர்ந்த இந்தியர்கள் வெவ்வேறு நாடுகளில் தங்கள் முத்திரையைப் பதித்துள்ளனர்: பிரதமர் மோடி 'மன் கீ பாத்'தின் போது (மனதின் குரல்)

November 24th, 11:30 am

'மன் கீ பாத்'-ன் (மனதின் குரல்) 116வது பதிப்பில், என்சிசி கேடட்களின் வளர்ச்சி மற்றும் பேரிடர் நிவாரணத்தில் அவர்களின் பங்கை எடுத்துரைத்து, என்சிசி தினத்தின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் மோடி விவாதித்தார். அவர் வளர்ந்த இந்தியாவுக்கான இளைஞர் அதிகாரத்தை வலியுறுத்தினார் மற்றும் விக்சித் பாரத் (வளர்ந்த பாரதம்) இளம் தலைவர்கள் உரையாடல் பற்றி பேசினார். டிஜிட்டல் தளங்களில் செல்ல மூத்த குடிமக்களுக்கு இளைஞர்கள் உதவுவது மற்றும் 'ஏக் பேட் மா கே நாம்' (தாயின் பெயரில் ஒரு மரம்) பிரச்சாரத்தின் வெற்றி ஆகியவற்றையும் அவர் உற்சாகமூட்டும் கதைகள் மூலம் பகிர்ந்து கொண்டார்.