பஞ்சாபின் ஜலந்தரில் ₹5,470 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

July 17th, 03:45 pm

பஞ்சாபின் ஜலந்தரில், அப்பகுதியின் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தவும், பயணிகளின் வசதியை மேம்படுத்தவும் மற்றும் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தவும் நோக்கமாகக் கொண்ட, ₹5,470 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தும், அவற்றுக்கான அடிக்கல் நாட்டியும் வைத்தார்.

இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளைப் பிரதமர் எடுத்துரைத்துள்ளார்

June 18th, 02:33 pm

இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்துரைத்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் புது உத்வேகத்துடன் பாதுகாக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு, முன்னோக்கி எடுத்துச் செல்லப்படுவதாகக் கூறியுள்ளார்.

புனித பிப்ரஹ்வா நினைவுச் சின்னங்களை 127 ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டுவந்ததற்கு பிரதமர் வரவேற்பு

July 30th, 02:44 pm

பகவான் புத்தரின் புனித பிப்ரஹ்வா நினைவுச்சின்னங்கள் 127 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்குத் திரும்ப கொண்டு வரப்பட்டுள்ளதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியத்திற்கு இது பெருமை சேர்ப்பதாகவும், இது ஒரு மகிழ்ச்சியான தருணம் என்றும் அவர் கூறினார்.